மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
ஊரெல்லாம் சுற்றி
ஒரு வழியாகக்
கொண்டு வந்தார் அப்பா
இந்தத் தையில்
எனக்கு ஒரு வரன்
கைவீசிக் கொண்டு வருவானாம்
என் கரம் பிடிக்க
காரோடு வீடும்
கண்டிப்பாக வேண்டும்
நகைநட்டு பாத்திரங்கள்
நாலு பேரு மெச்சும்படி
பட்டியல் நீண்டது
அவன் அம்மாவின்
ஆசையாம் இவையெல்லாம்
தை பிறந்தால்
வழி பிறக்கும்
என்று
அப்பாவிடம்
குறி சொன்னவன்
கூடவே வலியும் பிறக்கும் என்பதைச்
சொல்ல மறந்து
போனானே!
(முற்றும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇