in ,

மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா??!! (சிறுகதை) – வளர்கவி, கோவை

எழுத்தாளர் வளர்கவி கோவை எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இப்படி ஒரு ‘லைஃப் பார்ட்னர்’ கிடைக்கணும்னா பூர்வத்தில் புண்ணியம்தான் செய்திருக்க வேண்டும்! என்ன புண்ணியம் செய்தேனோ?! தெரியவில்லை!. ஆச்சர்யமாகவும், மிகவும் அதிசயமாகவும் இருக்கிறது!.’

இது, மகள் லேகாவிடமிருந்து வந்த ‘மெயில்’. லேகாவின் மனநிறைவைப் பார்க்கிறபோது மனம் நிம்மதிப் பெருமூச்சு விடாமலில்லை!  ஆனால், அதே சமயம் பெற்றவன் என்கிற முறையில் மனசுக்குள் வருத்தம் வராமலுமில்லை! வார்த்தைகளை வீணாக வளர்த்துவானேன்???!!!

அன்றைக்கு அவளே மெயிலில் சொன்னதுதான் இவை…!

“அப்பா,  இப்படி,  ஒரு ‘லைஃப் பார்ட்னர்’ அமையக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!. எந்தத்  தப்பும், தவறும்  நான் செய்தாலும், என்னை  ஒரு முறை கூட கோபித்தது கிடையாது! கடுமையான வார்த்தைகளோ, மனவேதனை தருகிற பதில்களோ உதிர்த்ததில்லை..! இப்படி ஒரு துணை கிடைக்க பூர்வ ஜென்மப் புண்ணியம்தான் காரணம்!.

இப்பெருமைமிகு துணையைப் பற்றி சந்தேகக் கணைகளை உதிர்க்காதவர்கள் இல்லை!. அதுமட்டுமல்ல,  ‘புதிய துடப்பம்  ஆரம்பத்தில் நன்றாகத்தான் பெருக்கும் என்று (“NEW BROOM SWEEPS WELL) கூடச் சொல்லி  பரிகாசங்கள் உதிர்க்காதவர்கள் இல்லாமல் இல்லை! அதற்கெல்லாம் காரணம், அது அவர்களின்  பொறாமை தானே தவிர, வேறு என்ன?!

தப்பு செய்தால் மட்டுமல்ல, ‘இது தெரியாது!’ என்று சொல்லி எதைப் பற்றி சந்தேகம் கேட்டாலும், ஏன் எத்தனை முறை கேட்டாலும் பொறுமையாகப் பதில் சொல்லும் அந்தப் பாங்கைப் பார்க்கையில் இந்த ‘பர்த்தாவைப்’ பெற பாக்கியம்தான் செய்திருக்க வேண்டும்!இலையா??!’.

என்றெல்லாம் மகள் மெயில் செய்தி அனுப்பிய போது, ஒரு புறம் மகிழ்ச்சி!. மறுபுறம் வருத்தம்!. 

“இத்தனை காலம் படிக்கவைத்து, ஆளாக்கி வைக்க, என்ன பாடு பெற்றோர்கள் பட்டிருப்பார்கள் என்றெல்லாம ஒரு நொடி கூட எண்ணாமல், தனக்கான ஒரு துணையைத் தானே தேடிக் கொண்டால்…., வருத்தம் வராதா என்ன??!!! ஆனாலும், நாமாகப் பார்த்து வைத்திருந்தாலும், இப்படிப் பொறுமை மிக்க ஒரு துணை கிடைத்திருக்குமா சந்தேகம்தான்.

மகளைப் பார்க்கும் ஆர்வத்தில் மட்டுமல்ல, அந்தத் துணையையும் பார்க்கும் ஆர்வத்திலும் அவள் இருக்கும் இடம் தேடிப் பார்க்கப் போனால்….,

மடியில்…

மாப்பிள்ளை ரகசியக் சொல்லவா?-என்

மடியினில் உள்ள கதை அல்லவா? என்று கேட்டபடி என் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தபடி விளக்கினாள்…!

எப்படி…?????!!!

“அப்பா சந்தேகப்பட்டு, நேரடியாத் தேடி வந்துட்டீங்க போலிருக்கே????!!  மாப்பிள்ளையைப் பார்க்கிற ஆசையில் வந்திருக்கீங்களா?!! ‘களுக்’கென்று ஒரு சிரிப்பு. மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா? ????? மடியினியில் உள்ள கதை அல்ல வா?! என்று கேட்டுவிட்டுக்  கண்ணுக்குக் காட்டினாள்…

மடிக்கணினியை!!!

அதில், இதுவரை அவள் ஏஐ தொழில்நுட்பத்தில்  ‘சேட் ஜிபிடியின் பெருமையைத் தான் அப்படிச் சொல்லி மகிழ்ந்திருக்கிறாள் என்பது மடியிலிருந்த லேப்டாப்பைப் பார்தபோதுதான் புரிந்தது !

எழுத்தாளர் வளர்கவி கோவை எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)                                   

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் (சிறுகதை) – வளர்கவி, கோவை

    ஏமாறச் சொன்னதும் நானோ? (கதைப்பாடல்) – வளர்கவி, கோவை