சஹானா
போட்டிகள்

50 லட்சம் வாசகர்கள் கொண்ட “Story Mirror” & “சஹானா இணைய இதழ்” இணைந்து நடத்தும் “மைக்ரோ கவிதைப் போட்டி 2020”

50 லட்சம் வாசகர்கள், 35 ஆயிரம் எழுத்தாளர்கள், 10 மொழிகள்

என வெற்றிகரமாய் இயங்கி வரும்

“Story Mirror” இணையதளமும்

நம் “சஹானா இணைய இதழும்”

இணைந்து நடத்தும்

“மைக்ரோ கவிதைப் போட்டி 2020”

“மைக்ரோ” என்ற வார்த்தையே, அது என்ன போட்டி என்பதை  உங்களுக்கு புரிய வைத்திருக்கும் என நினைக்கிறேன். ஆம், இருபதே (20) வார்த்தைகளில் கவிதை சொல்லி பரிசை வெல்லும் போட்டி   

போட்டி தலைப்பு : “2020 –  20 வார்த்தைகளில்…” (கவிதை வடிவில்) 

“கவிதையே இலக்கியத்தின் உயரிய வடிவம்”  இல்லையா. ஆதலால், கவிதை படைத்து இலக்கியம் பேசுவோம் 

மைக்ரோ கவிதை என்பது கவிதையின் ஒரு வடிவமாகும், அதில் குறைந்தபட்ச எழுத்துக்களின் மூலம், எழுத்தாளர்கள் தங்கள் உணர்வுகளை வடிக்க வேண்டும். “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு 

2020, உலக மக்கள் அனைவருக்குமே ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சிறுகுழந்தை கூட இந்த வருடத்தை பற்றி அனுபவம் சொல்லும். “சாப்பிடலைனா கொரோனா வண்டி வரும்” என மாடர்ன் அம்மா மிரட்டிய காட்சிகள் அரங்கேறிய ஆண்டு இந்த ஆண்டு 😊

2020 முன் – 2020 பின் என, வாழ்க்கையை பிரிக்கலாம் என்றாகி விட்டது. அத்தனை மாற்றங்கள், நினைவுகள், இழப்புகள் என எண்ணிலடங்கா அனுபவங்களை கொடுத்த வருடம் 2020   

எனவே, அத்தகைய 2020ன் அனுபவங்களை, 20 வார்த்தைக்குள் கொண்டு வருவதே இந்த போட்டியின் சிறப்பம்சமாகும். 

இதன் மூலம் பல மனிதர்களின் உணர்வுகளை “மைக்ரோ” கவிதைப் போட்டி பதிவு செய்யும்   

முக்கிய விவரங்கள்

போட்டியின் கரு : உங்களின் 2020 – 20 வார்த்தைகளுக்குள்

கட்டணம் : இலவசம் 

எங்கு பதிவிட வேண்டும் : https://storymirror.com/  இணையதளத்தில் கணக்கு துவங்கி, நீங்களே  அங்கு பதிவிட வேண்டும் 

பதிவிட கால அவகாசம் :  20 டிசம்பர் 2020  முதல் 31 டிசம்பர் 2020 வரை (11 நாட்கள் மட்டுமே)

மொழி: தமிழ் / மலையாளம் 

போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் : 28 ஜனவரி 2021

                                  
போட்டி விதிகள்:

  1. கவிதை, 20 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 
  2. கவிதை எந்த வகையாகவும் இருக்கலாம்
  3. எழுத்தாளர்கள் தங்கள் சொந்த எழுத்துக்களை மட்டுமே பதிவிட வேண்டும் 
  4.  ஒரு எழுத்தாளர் எத்தனை பதிவு வேண்டுமானாலும் பதிவிடலாம். நிறைய பதிவுகள் செய்த எழுத்தாளரே, வெற்றியாளர் ஆவார்
  5. இரண்டு எழுத்தாளர்கள் சமநிலையில் இருந்தால், ஆசிரியரின் மதிப்பு கொண்டு வெற்றி தீர்மானிக்கப்படும். 

பரிசு:

  1. முதல் மூன்று நபர்களுக்கு Story Mirrorன் 250 ரூபாய் மதிப்புள்ள Voucher கொடுக்கப்படும். அதை வைத்து Story Mirror இணையத்தில் புத்தகம் வாங்கிக் கொள்ளலாம். 

https://shop.storymirror.com/

  1. போட்டியில் பதிந்த கவிதைகளில், சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு,  “சஹானா இணைய இதழில்” வெளியிடப்படும்.
    http://sahanamag.com/subscribe/

பங்கு பெற்று வெற்றி பெற உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் 

Story Mirror இணையத்தளத்தில் உள்ள இந்த போட்டிக்கான அறிவிப்பு:-

தமிழ் கவிதை போட்டி Link – http://sm-s.in/EtjTTP3

மலையாள கவிதை போட்டி Link – http://sm-s.in/qrVM2Qz

(உங்கள் மலையாளக் கரையோர நட்புகளுக்கு இதை அனுப்பி பங்குபெறச் செய்யுங்கள்) 

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த் 

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: