in

சங்கமித்ரா (குறுநாவல் – இறுதிப்பகுதி) – By Fidal Castro – ஜனவரி 2021 போட்டிப் பதிவு

சங்கமித்ரா (குறுநாவல் - இறுதிப்பகுதி)

அத்தியாயம் 14 – மக்கள் மன்னன்

சூர்யமித்ரன் மன்னன் என அறிவிக்கப்பட்டவுடன் பிற மன்னர்கள் கோபமடைந்தனர். தங்களை அவமதிக்கும் செயல் என்றனர்

“வெல்ல முடியாத மனிதர்களுக்கு வெறும் வீராப்பு எதற்கு?” என மக்கள் ஏளனம் செய்தனர்

கோபம் கொண்ட மித்ரபுரி மன்னன் சிங்கநாதன் “என் ஆண்மையை  அழக மித்ர போரில் காணும் அழகாபுரி” என சவால் விட்டான் 

“இப்போது கிளம்பு” என மக்கள் எள்ளி நகையாடினர்

கோபத்துடன் தனது மக்களுடன் புறப்பட்டான் சிங்கநாதன். அழகாபுரி மக்கள் ஆனந்தத்தில் மூழ்கினர்

பெரும்பாலான மக்கள் சூர்யமித்ரனை ஏற்றுக் கொண்டனர். அழகாபுரி முறைப்படி தந்தை தான் திருமண தாலி எடுத்து தந்து திருமணம் நடக்கும். ஆனால் சக்திமேகலை தாலியை அருணதேவன் தான் எடுத்து கொடுக்க வேண்டும் என்று கூறினாள்

அதை மிதிலைவரதன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். திருமணம் முடிந்தது. மக்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது

“நான் உங்களில் ஒருவன், மக்களுக்கான ஆட்சியில் மக்கள் தான் முடிவுகளை எடுக்க வேண்டும். இதுவே எனது முதல் அரச கட்டளை. இனி அனைவருக்கும் முடிவு செய்யும் அதிகாரம் கொண்ட மக்கள் சபை அமைக்கப்படும். அதில் மக்களுடன் கலந்து பேசி முடிவுகள் எடுக்கப்படும்” என்றான் சூர்யமித்ரன் 

சூர்யமித்ரன் சக்திமேகலை இல்லறம் நல்லறமாய் இனிமையாக தொடங்கியது. 

மக்கள் சபை, அனைவருக்கும் கல்வி, சாதி ஒழிப்பு, அனைவரு‌ம் சத்திரியன் ஆகும் முறை ஆகியவை சூர்யமித்ரன் கிரீடத்தில் மணிகளாய் அமைந்தன

கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றால் ஆணை பிறப்பித்து ஒதுங்கி நிற்க மாட்டான் சூர்யமித்ரன், அவர்களில் ஒருவனாய் தானே இறங்கி வேலை செய்தான். அது மக்களை கவர்ந்தது. 

ஒரு இரவு, சூர்யா தன் அறைக்கு சென்றான். சக்திமேகலை தூங்கிக்  கொண்டிருந்தாள். அவள் எழுந்தால் சூர்யாவுக்கு சுடு வார்த்தைகள் தான், காரணம் அவன் காலை நகர்வலம் சென்று அப்போது தான் வீடு வந்துள்ளான்

சக்திமேகலை உறங்கவில்லை, “நீ மன்னன் அல்ல கள்வன்” என்றாள்

“ஆம் உன் மனம் கவர்ந்த கள்வன்” என்றான் விஜயன்

“இப்படி சொல்லியே காலத்தை கழித்து விடு” என்று முறைத்தாள்

மித்ரன் அவளை அணைக்க, சிணுங்கியபடி “உனக்கு இரண்டு இன்ப செய்தி உண்டு ‌மித்ரன்” என்றாள் சக்தி

“என்ன செய்தி?” என சூர்யமித்ரன் கேட்க 

“முதலில் இனிப்பு பின் இன்ப செய்தி” என்றாள் சக்தி

மித்ரன் சட்டையை கழற்ற, அவன் உடம்பில் பெரிய தழும்பு இருக்கக் கண்டு, “என்ன இது?” என பதறினாள் சக்தி 

“இது கட்டிடம் கட்டும் பணியின் போது ஏற்பட்டது, எங்கள் இனத்திற்கு உடலில் ஏற்படும் வடு தழும்பாகி விடும்” என்றான்

“அப்படியெனில் இவனுக்கும் அதே தன்மை இருக்கும் தானே” என தனது வயிற்றில் கை வைத்து சக்திமேகலை கேட்க,  அவளை அள்ளி அணைத்தான் சூரியமித்ரன் 

“சமத்துவத்தை உலகிற்கு உணர்த்த வந்து விட்டான் என் மகன்” என மகிழ்வோடு உரைத்தான் 

“இன்னொரு இன்பம் செய்தி” என சக்திமேகலை சிரிக்க, என்னவென வினவினான் மன்னன் 

“பிறகு சொல்கிறேன்” என மழுப்பினாள் 

மாதங்கள் சில கடக்க, சக்திமேகலையின் சீமந்த விழா நடைபெற்றது. அதற்கு அனைத்து தீவுகளுக்கும் தகவல் அனுப்பினார் மிதிலைவரதன் 

64 தீவுகள் அதன் அரசர்கள் மற்றும் மக்கள் சீருடன் வந்தனர்

மித்ர நாட்டு மன்னன் “வாளை” சீராக அனுப்பி வைத்தான். அதில், “யுத்தம் இனிதே தொடங்கவுள்ளது” என்ற வாசகம்  பொறிக்கப்பட்டிருந்தது 

‌அழக மித்ர போர் தொடங்கியது. போரில் சூரியமித்ரன் இறந்தான். தனக்கு பிறந்த குழந்தையை தானே கொன்ற பின், தற்கொலை செய்து கொண்டாள் சக்திமேகலை

அரசன் மாண்டு போக, மக்கள் வேறு இடம் பெயரத் தொடங்கினர். இருள் சூழ்ந்த அழகாபுரி மண்ணில் அருணதேவன் அரசனாகி ஒளி ஏற்றி வைத்தார்

ழைய நினைவுகளில் இருந்து மீண்ட அழகாபுரி மக்கள், “சூர்யமித்ரன் சூர்யமித்ரன்” என ஒலி எழுப்பினர்

“நான் விஜயனை மணக்க சம்மதிக்கிறேன்” என்றாள் சங்கமித்ரா 

அதைக் கேட்ட மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். விஜயன் திகைப்புடன் பார்த்தான்

“என் மகள் உங்கள் யுவராணியின் திருமணம் வான் மிளிர, கடல் நடுவே அலையென மக்கள் கூட்டத்தின் மத்தியில் நடக்கும்” என்று பூரிப்புடன் சொன்னார் அரசன் அருணதேவன்

“அனைத்து தீவுகளின் மக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். முறைப்படி செய்தி அனுப்புங்கள் அமைச்சரே” என உத்தரவிட்டார் மன்னர்

அத்தியாயம் 15 – மணநாள்

காயும் காலம் செல்ல கனிவது போல், கன்னி மனமும் கனிந்தது. எல்லா வகையிலும் முரண்பட்ட இரு உள்ளங்களை இணைத்தது விதி

இருவரும் மணிக்கணக்கில் வரலாறு பேசினர். விஜயன் அழகாபுரியின் வரலாறு கேட்டு தெரிந்தான். சக்திமேகலை இறந்த இடத்தை வணங்கினான்

திருமணநாள் வந்தது. கடல் நீலம் கண்ணில் படாதவாறு மக்கள் வெள்ளம் மறைத்தது

மேளதாளம் கடல் மேல் ஒலிக்க, வான் வெடிகள் விண்னைப் பிளக்க, 150 படகுகளில் மக்கள் திருமணம் நடக்கும் கப்பலை சூழ்ந்தபடி நின்றனர்

கப்பலின் முன் பகுதியில் மேடை அமைத்து திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது தீடீரென,  50 பேர் கடல் உள்ளே இருந்து வெளியே வந்தனர். வந்தவர்கள் கண்மூடித்தனமாக எல்லோரையும் தாக்கினர்

“போர் குணம் கொண்ட வீரர்கள் என்னோடு வருங்கள், நமக்கு நமது உயிரோ பகைவனின் மரணமோ முக்கியமில்லை, நம்மை நம்பி வந்த மக்கள் உயிரே முக்கியம். நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு படகிற்கு செல்லுங்கள். படகை அந்தந்த தீவு பக்கம் திரும்பி விடுங்கள்.. என்னோடு ஐந்து வீரர்கள் வாருங்கள் இவர்களை பதம் பார்க்கலாம்” என விஜயன் கூற 

“நானும் வருகிறேன் உன்னோடு” என கிளம்பினாள் சங்கமித்ரா 

சிரித்தபடி விஜயன் கண்ணசைக்க, உடன் எழுந்தாள் மித்ரா. விஜயன் சொன்னது போல், படகுகளை திரும்பிவிட்டனர் வீரர்கள்

ஒரு மணி நேர சண்டைக்குப் பிறகு, தாக்க வந்த அனைவரையும் வதம் செய்தனர் விஜயன், மித்ரா மற்றும் வீரர்கள் 

விஜயனின் கண்கள் மித்ராவைத் தேட, அதே நேரம் அவன் முதுகில் பாய்ந்தது ஒரு வாள். திரும்பியவனின் நெஞ்சிலும் பாய்ந்தது மற்றொரு வாள். குருதி பெறுக, தன்னை குத்தியவர் முகம் கூட காணாமல் விஜயன் கண் மூட, கடலில் தூக்கி வீசப்பட்டான்

அத்தியாயம் 16 – அந்தாதி

சூரிய ஒளி கூட நுழையாத குகை ஒன்றில், வலியுடன் ஒருவன் ஓலமிட, “அண்ணாவை அழைத்து வா அவன் விழித்துக் கொண்டான்” என வீரன் ஒருவனிடம் உத்தரவிட்டார் ஒருவர் 

வலியில் ஓலமிட்டது வேறு யாருமல்ல,  உயிர் பிழைத்த நம் விஜயன் தான் 

வயதான ஒருவர் குகைக்குள் வர, “யார் நீ?” எனக் கேட்டான் விஜயன் 

தனது கம்பீர குரலுடன், “மித்ர நாட்டு தலைவன் அறிவுடைநம்பி நான். வரலாறு மறைத்த பல உண்மைகள் வெளிவரும் நாள் இது” என்றார் அவர் 

“உன் வரலாற்றுப் புனைவு கதைகளை என்னிடம் கூறாதே” என கோபமாய் விஜயன் கூற 

“இது என் கதை அல்ல, அழகாபுரி வரலாறு. அன்று போர் அறிவிப்பு அளித்து போருக்கு நாங்கள் புறப்பட்டோம். என் அண்ணன் சிங்கநாதன் மன்னாக முன் செல்ல, நான் தளபதியாக இருந்து போரைத் தொடங்கினோம். முதல் நாள் போரில் எங்கள் படையில் இருந்த 40 வீரர்களும் அழகாபுரி படையில் இருந்த 25 வீரர்களும் உயிரிழந்தனர். அன்றிரவு மாறுவேடமிட்டு வந்தார் சூர்யமித்ரன்” என பெரியவர் கூற, நம்ப இயலாமல் பார்த்தான் விஜயன் 

தொடர்ந்து பேசினார் அவர், “நாங்கள் தாக்க முயன்றோம். தாக்காமல் பேச வேண்டும் என்று கோரினார் சூர்யமித்ரன். என் அண்ணன் பேசத் தொடங்கினார்” என அன்றைய நிகழ்வை விவரித்தார் 

“சூர்யா நீ வீரன் என்று எனக்குத் தெரியும், அதைவிட சிறந்த மன்னன், நானும் சிறந்த மன்னனாக வாழ வழி செய். நாடு நலம் பெற தோல்வி அடைவது தவறாக இருக்காது” என அண்ணன் கூற

“நான் தலை வணங்குகிறேன் உன்னை. நான் படிந்தது கோழையிடம் அல்ல. அழகாபுரி படை பலம் அறிந்தும் எதிர்த்த வீரனிடம் தான்” என்றான் சூரியமித்ரன் 

“என் அண்ணனும் நானும் சம்மதம் தெரிவித்தோம். ஆனால் அடு்த்த நாள் என் கண் முன்னால் என் அண்ணனின் மரணம் கொடூரமாக நடந்தது. அதைச் செய்தது அழகாபுரி படை. நீதி கேட்கச் சென்ற என் கண் எதிரே பிரபஞ்சம் போற்றும் வீரர் சூர்யமித்ரன் கொலை செய்யப்பட்டார்”

“கொல்லும் முன் கொலை செய்தவன் சொன்ன வாசகம் ‘நீ எனக்கு அரசனா? நண்பனா? நாய்க்கு செல்லம் கொடுப்பது காவல் செய்யத் தான், சரி சமமாக அமர்ந்து இருக்க அல்ல. நீ என் நாய், மன்னனல்ல. உன் மனைவியை முடித்து விட்டு வந்து உன் பிணத்தோடு சேர்கிறேன். அவள் தான் உன்னை அடைய வேண்டி என்னை அவமானம் செய்தாள்” என்று சொல்லி புறப்பட்டான், உறவாடி கொன்ற ருத்ர நாட்டு மன்னன் அருணதேவன் 

சூர்யமித்ரன் இறந்துவிட்டதாக சொல்லி, சக்திமேகலை கடல் அருகே உள்ள குகை கோவில் முன் வரவழைக்கப்பட்டாள். அவர்களுக்கு முன் நான் அவளைக் காணச் சென்றேன். அவள் வீரரின் மனைவி, தன்னை தாக்க வந்த வீரர்களை வதம் செய்தாள். அதே நேரம், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவள் பிரசவ வலியுற்றாள். அவளுக்கு நான் பிரசவம் செய்தேன்

என் கரங்களில் தனது குழந்தைகளை கொடுத்தாள். “என் கணவருக்கு சொல்லவிருந்த இரண்டாவது இன்ப அதிர்ச்சி நீ தான்” என்று தன் இரட்டை குழந்தை முகம் பார்த்து சொன்னாள். பேசும் போதே அருணதேவன் வரும் அரவம் கேட்டது 

அதைக் கண்ட சக்திமேகலை “நீ தப்பிக்க வேண்டும்” என்று என்னை பார்த்துச் சொன்னாள்

“நடந்த உண்மை உலகம் அறியச் செய்ய வேண்டும்… அதற்கு நீ உயிர் வாழ வேண்டும்…  செல்” என்றாள்

“குழந்தைகளை என்ன செய்வது?” என நான் கேட்க, அதற்கு அவள், “நான் பார்த்து கொள்கிறேன். உண்மை வெல்லும்” என்றாள்

அருணத்தேவன் கண் படாதபடி நான் மறைந்து நின்றேன். அந்த வீரப்பெண் சக்திமேகலை அவர்கள் நெருங்கும் முன், தன் ஒரு குழந்தையின்  முதுகில் ‘அ ‘ என்று கத்தியால் பொரித்தாள். பின் அதை படகில் வைத்தாள். மற்றொரு குழந்தையை அருணதேவன் கண் முன் கொன்றாள்

“என் குலம் உன்னால் அழியாது, அழிக்கவும் முடியாது” என்று கூறி, தானும் தற்கொலை செய்து கொண்டாள்

அன்று நானும் தப்பிச் சென்றேன். குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை என்று எண்ணி வருந்தினேன். இன்று அந்த வருத்தம் மறைந்தது என சொல்லிக் கொண்டே, விஜயன் முதுகில் இருந்த ‘அ’ தழும்பை காட்டினார் அவர் 

“நம்ப முடியவில்லை” என்று விஜயன் கூறி முடிக்கும் முன்னே, அவன் கண் முன்னே ஆசான் வந்து நின்றார்

“இவர் சொல்வது உண்மை தான், நானும் மித்ர நாட்டு படையினர்களில்  ஒருவன் தான். இரண்டாம் நாள் போரில் கலந்து நாடு திரும்பினேன். உனக்கு பயி்ற்சி அளிக்கும் போது உன்னை பற்றி உண்மை நான் அறியேன்”

பின்னோடு வந்த விஜயனின் வளர்ப்பு தந்தையான விலாசம், “நான் உன்னை படகில் இருந்து தான் எடுத்தேன் விஜயா, உனக்கு ஒரு கதை இருக்கும் என்று எண்ணி இருந்தேன், ஆனால் உன் கதை ஒரு வரலாறு என அறியவில்லை” என்றார் 

“என் தாய் தந்தையை கொன்று என்னையும் கொல்ல நினைத்த அருணதேவனுக்கு என் கரங்களால் மரணப் பரிசு வழங்குவேன்” என விஜயன் சூளுரைக்க 

“உன்னை கொலை செய்யத் துடிப்பது அருணதேவனல்ல… சங்கமித்ரா” என பதற்றத்துடன் உரைத்தார் ஆசான் 

விஜயமித்ரன் ஆட்டம் விரைவில்…

A Castro War…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அழகு ஓவியங்கள் – நீநிகா (நான்காம் வகுப்பு) – ஜனவரி 2021 போட்டிப் பதிவு 

    சேலம் ஸ்கந்தாசிரமம் (எழுதியவர் : அனு பிரேம்) – ஜனவரி 2021 போட்டிப் பதிவு