in ,

கலப்படமில்லாத சிரிப்பு! (சிறுகதை) – இரஜகை நிலவன்

ழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அந்தப் பெண் குழந்தை ஜெயாவைப் பார்த்து ‘க்ளுக்’கென்று சிரித்தது, அவளும் சிரித்தபோது, ‘தன்னை எடுக்கத் சொல்லி’ கை நீட்டியது. எழுந்து நிற்க முயன்று திரும்பக் கீழே விழுந்த போது அழுதுவிடுமோ என்று தொன்றியது ஜெயாவிற்கு.

கீழே விழுந்த குழந்தை பின் பக்கத்தைத் தடவிக் கொண்டு திரும்பவும் எழுத்து அவளிடம் தாவ முயற்சித்தது. இவ்வளவு அழகாக கள்ளங் கபடமில்லா சிரிக்கும் இந்தக் குழந்தை என்னிடம் தாவ முனைகிறது. ‘எடுத்துக் கொஞ்சிவிட்டு திரும்பவும் விட்டு விடலாமா?’ என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது

உள்ளேயிருந்து, “மஞ்சு, என்ன பண்ணிக்கொண்டிருக்கிறாய். வாசலுக்குப் போகாதே என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்” என்று சப்தமெழுப்பியவாறு கையிலே அரைத்த மசாலாவுடன் வெளியே வாசலுக்கு வந்த புவனா, “வாங்க ஜெயா, இந்த மாதத்திற்கான சோப் பவுடர், மற்ற காஸ்ட்யூம் எல்லாம் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், எங்கே கொஞ்ச நாட்களாகவே காணவில்லை?” என்று கேட்டாள்.

“கொஞ்சம் உடம்பிற்கு சரி இல்லை. அதுதான். இது யார் உங்கள் குழந்தையா? நான் ஒரு நாளும் பார்த்ததில்லையே?”

“எனக்கு இன்னும் அந்தப் பாக்கியம் இல்லை ஜெயா. என் தங்கை குடும்பம் வந்திருக்கிறது. அவள் குழந்தை”

“அப்படியா, அவள் முகத்தைப் பார்க்கும்போது எங்கேயோ பார்த்த மாதிரிப் பல காலம் பழகிய மாதிரி, ஒரு உணர்வு பாருங்களேன் என்னைத் தூக்கச் சொல்லி பாய்கிறாள்” குனிந்து தூக்கினாள் ஜெயா. குழந்தை அவள் இடுப்பிலிருந்து கொண்டு கன்னத்தைப் பிடித்தது.

“யாருடைய முகமாவது இவளைப் போன்ற முகத்தோடு ஒத்தப்போயிருக்கலாம். எப்போதும் சாயங்காலம் தான் வருவீர்கள். இன்று காலையிலேயே வந்துவிட்டீர்கள், ஏதாவது விசேஷமா?”

“இந்த மாதம் விற்பனையைக் கூட்ட வேண்டும் என்று டீலர் சொல்லிவிட்டார், சோப்பு பவுடர் கொஞ்சம் அதிகம் விற்றால் கமிஷனும் கொஞ்சம் அதிகமாகத்தானே தேறும். அதனால இந்த மாதம் மட்டும் காலையிலேயே விற்பனைக்கு கிளம்பி விட்டோம். உங்களுக்கு என்னென்ன வேன்டும் சொல்லுங்கள்?”

“யேய் மஞ்சு, அவர்கள் செயினைப் பிடித்து இப்படி. இழுக்கக்கூடாது விடு” என்று ஜெயாவின் கழுத்திலிருந்த செயினை பிடித்துக் கொண்டிருந்த மஞ்சுவைக் கையில் வாங்கி கொண்டு, “ஒரு நிமிஷம் இருங்கு ஜெயா. என்னவெல்லாம் இருக்கிறது, என்னவெல்லாம் தேவைப்படும் என்று பார்த்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லி விட்டுத் திரும்பியவளை, “என்ன அக்கா?” என்றவாறு வாசலுக்கு தேடி வந்தாள் புவனாவின் தங்கை தேவி.

“புவனாக்கா, இப்படி வந்து போகிறவர்களிடம் எதுவும் வாங்காதீர், எதுவும் ஓரிஜினல் குவாலிட்டியாக இருக்காது” என்றாள் தேவி.

ஜெயாவின் முகம் சுருங்குவதை கவனித்த புவனா, “இவர்கள் கம்பெனி டீலர்களிடமிருந்து ஒரிஜினல் புராடக்ட்தான் கொண்டு தருகிறார்கள், தேவி உனக்கு ஏதாவது வாங்கிக் கொள்கிறாயா?” என்று கேட்டாள்.

“அவர்கள் ஒரிஜினல் குவாலிட்டினா – கடையிலே போய் வாங்கிக் கொள்ளட்டும். ஒரு சோப்பிற்கு ஏறக்குறைய ஐந்து ரூபாய் அதிகமாக கொடுத்து வாங்கினால்தான் அது ஒரிஜினல். இதெல்லாம் டூப்ளிகேட் தான் புவனா. நீங்கள் என்னவெல்லாம் வாங்கிக் கொள்கிறீர்கள்?” என்றால் கொஞ்சம் கோபத்தோடு.

“நாங்கள் விலையைக் கூட்டிக் கொடுத்தாலும் நல்லதைத்தான் வாங்குவோம். இதில் கோபப்படுவதற்கு என்ன இருக்கிறது” – என்று சப்தமிட இருவருக்கும் வாக்குவாதம் எழுந்தது.

“தேவி கொஞ்சம் சும்மா இருக்கிறாயா?. ஜெயா, நீங்கள் நான் கொடுத்த லிஸ்டிற்கான பொருட்களை எடுத்துக் கொடுங்கள்” என்று சொல்ல, “பின்னே என்னக்கா? ஒரிஜினல் – சாமான்களோடு போலித் தயாரிப்புகளையும் விற்றுவிட்டு, அசல், தயாரிப்புகளுக்கான பண்தையும் வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள்” என்று கத்தினாள் தேவி.

தான் அவமானப்படுத்தப்படுவதாக உணர்ந்து “தேவி நீங்கள் சொல்கிற மாதிரி செய்பவர்கள் நிறையப் பேர் இருக்கலாம். ஆனால் நாங்கள் அப்படி செய்வதில்லை” என்று ஜெயா சொல்ல முயற்சிக்க

“என்ன அங்கே வாசலிலே நின்று கொண்டு சப்தம் போட்டுக் கொண்டிருக்கிறாய்?” என்றவாறு தேவியின் கணவன் ராஜசேகர் வாசலுக்கு வந்தவன் ஜெயாவை பார்த்து அசந்து போய் நின்றுவிட, நீங்களா? என்று நுனிநாக்குவரை வந்த ஜெயா தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “தேவி! இதுதான் உங்கள் கணவரா?” என்று கேட்டாள்.

“ஆமாம்” என்றாள் புவனா.

தனக்கு குழந்தை இல்லை என்ற ஒரே காரணத்திற்காக தன்னை ஒதுக்கிவிட்டு எங்கோ போய்விட்டான் என்று நினைத்த ராஜசேகர், இப்போது தேவியை மணந்து கொண்டு… ‘இறைவா உன் விளையாட்டே தனிதான்’ என்ற சிந்தனையில் இருந்த ஜெயாவை “என்ன ஜெயா அப்படியே சிலையாகி போயிட்டீங்க” என்றாள் புவனா.

“நான் என்றைக்கோ கல்லாகிப் போயிருக்க வேண்டியவள் தான். ஸாரி. தேவி என்னிடம் ‘அசல் போலி’ என்று விமர்சனம் செய்தீர்களே, உங்கள் வாழ்க்கையில் கூட ஒரிஜினல் டூப்ளிகேட் தெரியாமல் தான் சில விஷயங்களைத் தெரிந்தெடுத்திருக்கிறீர்கள்?” என்றாள் ஜெயா.

“என்ன சொல்கிறீர்கள் ஜெயா?” திரும்பவும் கோபமான தேவி.

“ஒன்றுமில்லை. நீங்களே தெரிந்து கொள்வீர்கள்” என்று கிளம்பிய தேவியைப் பார்த்து அந்தக் குழந்தை சிரித்தவாறு அவளிடம் தாவியது. அந்தச் சிரிப்பில் கலப்படமில்லாமல் இருந்தபோதும் தேவியின் நெஞ்சில் ஏதோ நெருடியது.

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இல்லறமல்லது நல்லறமன்று (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    காதல் என்பது (சிறுகதை) – இரஜகை நிலவன்