in ,

போலீஸு.. போலீஸு.. (சிறுகதை) – அர்ஜுனன்.S

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

சரத்தும், விமலும் நண்பர்கள். நீண்ட நாட்கள் கழித்து நேரடியாக சந்திக்க இப்போது தான் வாய்ப்பு கிடைத்தது.

அவ்வளவாக நடமாட்டம் இல்லாத ஒரு தெருவில் உள்ள பெட்டிக்கடை வாசலில் நின்று உலக கோப்பை கிரிக்கெட், அரசியல், சினிமா என்று பலவற்றையும் பேசிக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் ஒரு நபர் வந்து, கடைக்காரிடம் இரண்டு என்று விரலால் சைகையை மட்டும் செய்தார்.

கடைக்காரர் இரு பக்கமும் திரும்பிப் பார்த்துவிட்டு, கல்லாப் பெட்டி அருகில் இருந்த ஒரு டப்பாவை திறந்து, அதில் இருந்த மாத்திரைகளில் இரண்டை எடுத்துக் கொடுத்தார்.

ஏதோ சாரிடான் மாத்திரை போல என்று நண்பர்கள் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே, வந்தவர் நாலாயிரம் ரூபாய் ரொக்கமாக கொடுக்க, அதை எண்ணிப் பார்த்த கடைக்காரர்… “ரெண்டு வேணும்னா.. இன்னும் ஆயிரம் ரூபாய் வேணும்.. விலை இப்போ கூடிருச்சு..” என்றார்.

வந்தவரோ.. “விலையை இப்படி கூட்டிக் கொண்டே போனால் எப்படி?.. இதுக்கு மட்டும் ஜிபே கூட வாங்க மாட்டேன்கிறீங்க..?” என முனகியபடியே இன்னொரு ஆயிரம் ரூபாய் ரொக்கமாக கொடுத்து விட்டு நகர்ந்தார்.

இப்போது நண்பர்களுக்கு சுவாரஸ்யம் தட்டியது. இது நிச்சயம் சாதாரண மாத்திரை இல்லை என தோன்றியது.

அந்த விஷயத்தை மேற்கொண்டு அங்கு வைத்து பேசுவானேன் என நினைத்த சரத்.. “சரி விமல்.. நாம ரொம்ப நேரமா இங்க நின்னுகிட்டே பேசிக்கிட்டு இருக்கோம்.. வா நாம பார்க்கில உட்கார்ந்து பேசலாம்..”  என்று விமலையும் அழைத்துச் சென்றான்.

போகும் வழியில்.. “சரத்.. அந்த மாத்திரை விற்பனையை கவனிச்சியா..? ஒரு மாத்திரை ரெண்டாயிரம் ரூபானா, அது போதை மாத்திரையா தான் இருக்கும்..” என்றான் விமல்.

“ஆமா.. அதான் சின்ன, சின்ன தொகைக்கு கூட ஜிபேல வாங்குற கடைக்காரர், இதுக்கு ரொக்கமாக தான் வேணும்னு கேட்கிறார் போல..”

“நாம உடனே இது போலீஸுக்கு சொல்றது நல்லதுனு நினைக்கிறேன்.. நீ என்ன நினைக்கிறே..?”

“சொல்லலாம்.. உன்கிட்ட நம்பர் இருக்கா..?”

“பக்கத்து போலீஸ் ஸ்டேஷன் நம்பர் கூகுளில் தேடுவோம்.. கொஞ்சம் வண்டியை நிறுத்து..” என்றான் விமல்.

இவன் மொபைலை கையில் எடுக்கும்போதே எதிர்ப்புறத்தில் இருந்து ஒரு நபர் காவல் உடை அணிந்து ஹெல்மெட் போட்டுக் கொண்டு  வண்டியில் வந்தார்.

உணர்ச்சிப்பட்ட விமல்.. “ஹே.. ஒரு போலீஸே வர்றாரு.. நேரடியா சொல்லிடலாம்..” என்றான்.

“எனக்கென்னவோ அவரை பார்த்தா போலீஸு மாதிரி தெரியல.. எதுக்கும் அவரை நிறுத்து..” என சரத் சொல்ல..

விமல் அந்த நபர் அருகில் சென்று, அவரை வண்டியில் நிறுத்தும்படி சைகை செய்ய, அவரும் வண்டியை நிறுத்தி, தன் ஹெல்மெட்டை கழற்றி என்ன வேண்டும் என்பது போல பார்த்தார்.

விமல் அவரிடம் அந்த பெட்டிக்கடை விஷயம் பற்றி சொன்னதும்.. “ஸாரி.. என்னை போலீஸ் டிரஸ்ல பார்த்ததும், என்னை போலீஸ்னு நினைச்சுட்டீங்க போல.. நான் துணை நடிகன்.. சினிமா ஷூட்டிங் போய்ட்டு வரேன்.. நீங்க 100க்கு ஃபோன் பண்ணலாமே?”.. என்று அட்வைஸ் சொல்லிவிட்டு கிளம்பினார்.

ஷாக்காகி போன விமல்.. “அவரு நிஜ போலீஸ் இல்லைன்னு நீ எப்படி கண்டுபிடிச்சே..?” என்று சரத்தை பார்த்து கேட்டான்.

“நம் ஊருல போலீஸ் எப்பவுமே ஹெல்மெட்டை தலையில மாட்டியதே கிடையாதே..?” என்று சரத் சிரித்தபடியே சொல்ல, விமலும் அந்த சிரிப்பில் இணைந்து கொண்டான்.

(நிறைவு)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பழைய பாட்டியும் புதிய தீபாவளியும் (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

    உயிர் உள்ள வரை உஷா (அத்தியாயம் 3) பாவம் காயத்ரி – பாலாஜி ராம்