in

Photo Prem (போட்டோ காதல்) – மராத்தி திரைப்பட விமர்சனம் -✍ மீரா ஜானகிராமன்

Photo Prem (Marathi Movie Review)

றிமுக இயக்குனர்கள் அதித்யா ரதி, காயத்ரி படேல் இயக்கியிருக்கும் மராத்தி மொழி திரைப்படம் “போட்டோ ப்ரேம் (PHOTO PREM)”. கதையை அதித்யா ரதி எழுதியிருக்கிறார். இவர்கள் இருவருடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார் மெஹுல் ஷா.

கதை எதைப் பற்றியது?

மாயி என்று எல்லோராலும் அழைக்கப்படும் 55 வயதாகும் சுனந்தா மாமிக்கு சிறுவயது முதலே கேமரா கூச்சம் அதிகம். (மாயி என்றால் மராட்டிய மொழியில் அம்மாவாக இருக்கும் என்பது என் அனுமானம்)

அதனால் அவருடைய ஒரு நல்ல போட்டோ கூட இல்லை. மகளின் கல்யாணத்தில் கூட போட்டோக்கு போஸ் கொடுக்காமல் கூச்சப்பட்டுக் கொண்டு ஓடியவர் அவர்.

ஒரு துக்க நிகழ்வில் கலந்து கொண்ட சுனந்தா மாமிக்கு தான் இறந்த பின் மாட்டி வைக்க தன்னுடைய ஒரு நல்ல போட்டோ இல்லையே என்கிற ஞானோதயம் வருகிறது. பின், நடப்பவை தான் கதைக்களம்.

இன்றைய சூழ்நிலையில் போட்டோவின் முக்கியத்துவம், ஒருவரை நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள அவரது போட்டோ தேவையா இல்லையா? என்ற சிந்தனை, சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படும் போட்டோக்கள் என்று  படம் நெடுகிலும் போட்டோ பற்றிய விவாதம், சுனந்தாவின் சிந்தனைகளாகவும் அவர் எதிர்கொள்ளும் சம்பவங்களாகவும் வெளிப்படுகிறது.

சுனந்தாவின் சிந்தனைகள் மட்டுமே மையப்படுத்தப்படுவதால், ஆரம்பத்தில் மெதுவாக நகரும் படம், பின்னர் அவர் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள முடிவெடுத்த பின்  விறுவிறுப்பாக நகர்கிறது.

போட்டோ பற்றிய சிந்தனையிலேயே இருக்கும் சுனந்தாவிற்கு, அது சம்பந்தமான விஷயங்களே கண்ணில்படுவது “அட…ஆமால்ல!” என்று நம்மை எண்ண வைக்கிறது.

கதையின் நாயகி ஒரு வயதான குடும்பத் தலைவி, கதைக்களமோ எல்லோரும் எதிர்கொள்ள தயங்கும் துக்க நிகழ்வுகள். இதையும் மீறி படத்தை நாம் ரசித்து பார்க்கும்படி செய்திருக்கிறார்கள் இயக்குனர்கள்.

சுனந்தாவாக நடித்திருக்கும் நீனா குல்கர்னி, திரைப்படத்துறையில் மிக பெரிய அனுபவம் உள்ளவர். அதனால், அவரது நடிப்பைப் பற்றி சொல்லவே தேவையில்லை.

நம் வீட்டருகே வசிக்கும் ஒரு சாதாரண இல்லத்தரசியை நினைவுபடுத்துகிறார். தினமும் பேப்பர் வந்தவுடன் ஓடிப்போய் அதை எடுத்து கண்ணீர் அஞ்சலி பகுதியை பார்ப்பதாகட்டும், துக்க வீடுகளில் அப்பாவித்தனமாய் விழித்துக் கொண்டு கலந்து கொள்வதாகட்டும்… கலக்கியிருக்கிறார்.

கவுஷல் இனாம்தாரின் இசை படத்துடன் ஒன்றிப் பயணிக்கிறது. நம்மையும் அப்படியே அழைத்துச் செல்கிறது.

மொத்தத்தில் லாக்டவுனில் வீட்டில் இருக்கும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பார்க்க கூடிய தரமான படம் தான் “போட்டோ ப்ரேம்”.

சுனந்தா மாமியை நேரில் பார்த்தால் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.  அது என்ன என்பதை  இயக்குனர்கள் படத்தின் முடிவில் சொல்லி விட்டார்கள்.

உங்களுக்கும் அது தெரிய வேண்டும் என்றால், அமேசான் ப்ரைம் வீடியோவில் (Amazon Prime Media) வெளியாகியிருக்கும் இந்த படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அம்மா பிள்ளை வாத்துகள் – 👩‍🎨பள்ளி மாணவி ரோஷினி வெங்கட்

    மென் தென்றலில் நின் வாசம் ❤ (சிறுகதை) – ✍ விபா விஷா