பெண்ணே,
பொறுமையே உனக்குப் பெருமையாம்
சொல்லிச் செல்கிறது ஒரு கூட்டம்
எதற்காக பொறுமையென
கூவித் தவிக்கிறது என் மனம்
உன்னை கேலி பேசும் கயவரிடம்
இத்தனை பொறுமை தேவையா
உன் உரிமை பறிக்கும் மனிதரிடம்
பொறுமையாய் இருக்கத்தான் வேண்டுமா
உன் கண்ணீரில் ஆனந்தம் காண்பவரிடம்
பொறுமையாய் இருந்தென்ன பயன்
அகிலத்தில் ஆயிரம் படைப்புகள்
அதில் அற்புத படைப்பு நீ
உன் கடமை தனை உணர்ந்து
செய்யும் செயல்கள் எண்ணிலடங்கா
பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு
அதை உணர்ந்து நடந்திடு
கதிரொளியாய் நீ மாறிடு
தீமைகளை கொளுத்திடு
தரணியில் நின் புகழ் தேடிடு
#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
(முற்றும்)
Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads
கவிதை நன்று
கீதா