in ,

நோ ஹேட்டர்ஸ் நோ டாக்டர்ஸ் (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ அ.வேளாங்கண்ணி, சோளிங்கர்

நோ ஹேட்டர்ஸ் நோ டாக்டர்ஸ் (அறிவியல் புனைவு சிறுகதை)

அறிவியல் புனைவு  சிறுகதைப் போட்டி கதைகள்

சம வயது நண்பர்களின் மாலை நேர காபி சந்திப்பு..

நண்பர்கள் நான்கு பேரும் சாதாரணமானவர்கள் இல்லை. நாட்டின் மிகப் பெரிய விஞ்ஞானிகள். இவர்கள் என்ன கேட்டாலும் செய்து தர அரசாங்கம் தயாராக இருந்தது. இவர்கள் என்ன சொன்னாலும் செவி மடுக்கவும் தயாரே. இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவென சிறு கூட்டமே உண்டு. ஆனாலும் அவர்களை யாரும் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

சரி வாங்க.. அவங்க என்ன பேசிக்கறாங்கனு கேட்போம்.

ராஜ் பகதூர், ராம் நிவாஸ், சச்சிதானந்தம், கிஷோர் பிலிப்..

பல வருடங்களாக சேர்ந்தே பயணிப்பதாலும், கிட்டத்தட்ட ஒரே வயதுடையவர்கள் என்பதாலும் இவர்கள் வாடா போடா நண்பர்களாகவே மாறி இருந்தார்கள்.

“ராம்.. உன் புரஜக்ட் எந்த அளவுக்கு போயிருக்கு?”

“80% ஓவர், இன்னும் ஒன் வீக்ல ‘தி என்ட்’ ஆயிடும்”

“ஓ..சூப்பர்.. ராஜ் உன்னோடது..”

“கிட்டத்தட்ட 90%.. இன்னும் ரெண்டே நாள்ல டெமோக்கு ரெடி ஆயிடுவேன்”

“ஓ… அட்டகாசம்.. சச்சி.. அப்படியே உன் புரஜக்ட் பத்தியும் சொல்லிடு”

“என்னோடது முடிஞ்ச மாதிரி தான்.. 99% ஓவர்..”

“வாவ்.. நைஸ்.. இன்னும் ஒன் வீக்ல நம்ம நாலு பேரையும் பாதுகாப்பு அமைச்சர், ஒன்னா வந்து பார்க்கச் சொல்லியிருக்கார்ல”

“ஆமாம். ஆனா என்ன விஷயத்துக்குனு தான் கொஞ்சமும் யூகிக்க முடியல..”

“முன்னாடி ஒரு வாட்டி சுகாதாரத்துறை அமைச்சர் கூப்பிட்டாரே.. அது எதுக்காகனு ஞாபகம் இருக்கா?”

“எஸ்.. அத மறக்க முடியுமா! அப்பத்தான் பெருந்தொற்று நம்ம நாட்டுக்குள்ள நுழைஞ்சு விஷ்வரூபமாகிட்டு இருந்த நேரம்.. கூடிய சீக்கிரம் இதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிங்கனு சொன்னார்.. ஒரு டைம் பிக்ஸ் பண்ணார்.. அந்த டைமுக்கு முன்னாடியே நாம சக்ஸஸ்புல்லா தடுப்பூசிய கண்டுபிடிச்சோம்.. அத வச்சு உலகம் பூரா நம்ம நாட்டுக்கு ரொம்ப நல்ல பேர் கிடைச்சுச்சு.. ஏன்னா நம்ம புரடக்ட் அப்படி.. 100% சக்சஸ் ரேட்.. வேற எந்த நாட்டு விஞ்ஞானியும் நம்ம பக்கத்துலயே வரமுடியல..”

“எஸ்.. வாட் எ புரவுட் மொமென்ட்.. அதுக்காகத்தான் நம்ம நாலு பேரையும் நோபல் பிரைஸ் கமிட்டிக்கு அரசாங்கம் பரிந்துரை செஞ்சிருக்காங்கல்ல..”

“கரெக்ட்.. அது முடிஞ்ச கதை.. இப்ப எதுக்காக இருக்கும்?”

“அதத்தான் யாராலேயும் யூகிக்க முடியலையே!”

“சரி.. கிஷோர் எங்க எல்லோரையும் விசாரிச்ச நீ.. உன்னோட சீக்ரெட் புரஜக்ட் எந்த கட்டத்துல இருக்குனு சொல்ல மாட்டேங்கறியே!?”

“அது தான் சீக்ரெட் புரஜக்ட் ஆச்சே.. எனக்கு எப்படி அதப்பத்தி தெரியும்?”, என்று சொல்லிவிட்டு ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தான் கிஷோர்.

பாதுக்காப்புத்துறை அலுவலகம் பரபரப்பாக இருந்தது.

தங்களுக்கென தயாராக இருந்த இருக்கைகளில் நான்கு விஞ்ஞானிகளும் கம்பீரமாக அமர்ந்திருந்தனர்.

பாதுக்காப்பு அமைச்சர் அரவிந்த் பேச ஆரம்பித்தார்.

“குட்மார்னிங் சயின்டிஸ்ட்ஸ்.. எனக்கும் நம்ம ஆட்சியில உள்ள சில முக்கியமானவங்களுக்கும் ஒரு விஷயம் தோணுச்சு.. அத ஏன் நான் உங்ககிட்ட ஷேர் பண்ணக் கூடாதுன்னு எனக்கும் தோண… போன வாரமே உங்ககிட்ட இந்த மீட்டிங் பத்தி சொல்லி வச்சிட்டேன்..”

விஞ்ஞானிகள் கவனமாக கேட்க ஆரம்பித்தனர்.

“உங்களோட கேப்பபிலிட்டி எனக்கு நல்லாவே தெரியும். இன்றைய தேதிக்கும் உலகத்திலேயே தலை சிறந்த விஞ்ஞானிகள்னா அது நீங்க நாலு பேரும் தான்.. நம்ம நாட்டையே பெரும்பாடு படுத்தின அந்தப் பெருந்தொற்று.. இன்னைக்கு எங்க போச்சுனே தெரியல.. அதான் உங்கள நம்பி ஒரு விஷயத்த உங்ககிட்ட ஒப்படைக்கப் போறேன்”

ரெடியா இருக்கோம்.. சார்.. என்ன விஷயம்னு சொல்லுங்க..’, என்பது போல நால்வருமே தலை ஆட்டினர்.

“ஒரு கிருமி எப்படி எங்கேயோ உருவாகி, உலகமெல்லாம் பயணம் செஞ்சிச்சோ.. அதே போல நாம ஒரு கிருமிய உருவாக்கினா என்ன?”

“சா….ர்…”, என நால்வருமே ஒரு சேரக் கத்த..

“முழுசா கேளுங்க சயின்டிஸ்ட்ஸ்.. அந்தக் கிருமி எப்படிப்பட்டதா இருக்கணும்னா.. மிக ஈஸியா பரவணும்.. மிக வேகமா பல்கிப் பெருகணும்.. உலகத்துல மூலை முடுக்கெல்லாம் பரவி மனிதகுலம் முழுக்க இது கவர் பண்ணனும்..”

“ச… சா..ர்..”

“அந்தக்கிருமியோட பேரு என்னனா…..”குட் வைரஸ்”. வைரஸ்னாலே ஏன் கெடுதலாவே இருக்கணும்.. அதனால இது வித்தியாசமான செயல்களை எல்லாம் செய்யும்.. இது ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் போனவுடனே முழு உடலையும் முழுசா ஆராய்ஞ்சு… எங்கெங்க என்னென்ன பழுதோ.. அதையெல்லாம் ஒவ்வொன்னா சரி செய்யனும்.. கூடவே மூளையக் கூட நல்லா பிரஷ் ஆக்கி விடணும். அங்க எந்த நச்சுபொருளோ.. நாரகாச சிந்தனையோ உதயமாகக் கூடாது..”

“அதாவது நோ டாக்டர்ஸ்.. நோ ஹேட்டர்ஸ்.. இப்படி உலகம் மாறணும்னு சொல்றீங்க..”

“எக்ஸ்ஸாட்லி”

“வாவ்.. மிக உயர்ந்த சிந்தனை சார்.. இது எந்த அளவுக்கு சாத்தியப்படும்னு தெரியல… ஆனாலும் ட்ரை பண்ணிப்பார்க்கறோம்.. என்ன ப்ரண்ட்ஸ்??”

“வாவ் சார்.. சிம்ப்ளி அப்ரிசியபுல் தாட்”

“ஓகே.. உங்களோட இப்போதைய புரஜக்ட் முடிச்சவுடனே.. இதுல இறங்குங்க.. இன்னொரு விஷயம்.. இதுவா பரவ ஆரம்பிச்சு உலகம் என்ன இது புதுசா ஒரு சாமினு உணரத்தொடங்கும் போது இதப்பத்தி சொல்லலாம். ஏன்னா சிலருக்கு இது சுத்தமா பிடிக்க வாய்ப்பே இல்ல.. என்ன.. கரெக்ட் தானே?”

“எஸ் சார்.. எங்களுக்கும் புரியுது.. நிச்சயமா இந்த விஷயம் லீக் ஆகாது”

“ஓகே.. கெளம்புங்க.. சீக்கிரம் வெற்றி நடையோட திரும்பி வாங்க..”

“என்னப்பா சொல்ற? இப்படி ஒரு புரஜக்டா..!?”

“ஆமாங்க..”

“என்னாச்சு.. இந்த அமைச்சருக்கு.. எதுக்கு எங்க மேல அவருக்கு இவ்ளோ கோவம்? எதுக்கு சாமி மாதிரி அவர் சிந்திக்க ஆரம்பிச்சிருக்கார்.. இது ரொம்ப தப்பாச்சே..!”

“ஆமா சார்.. அதான் உங்ககிட்ட உடனே சொல்லணும்னு தோண ஓடோடி வந்துட்டேன்”

இப்படி பேசிக்கொண்டிருந்தவர்கள்.. உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரும், உலகின் டாப் விஞ்ஞானிகளில் ஒருவரும்..

அந்த டாப்பர் பணம் பார்க்க ஆரம்பிச்சது பூரா.. மருந்து தயாரிப்பில் தான்.

எல்லா நோய்க்கும் மருந்து தயாரிப்பார். உலகம் முழுதும் அனுப்பிவைப்பார். முதலில் குறைந்த விலைக்கு கொடுத்து மற்றவர்களை கதற அடிப்பார். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக விலையை ஏற்றி உலக மார்க்கெட்டில் கோலோச்சுவதே இவர் வேலை.

இதில் யாராவது, எவரது கம்பெனியாவது முன்னிலை பெற முயன்றால், முதலில் பேரம் பேசுவார்.. படியவில்லை என்றால் உலக கிரிமினலாக வேண்டாத வேலையெல்லாம் செய்து படியவைப்பார். இல்லையென்றால் எவ்வளவு தூரத்துக்கும் சென்று ஆளையே காணாமல் போக வைப்பார். அதனால் யாருமே இவரிடம் அதிகம் வைத்துக்கொள்வதில்லை.

இப்படி மருத்துவத்துறையில் கோலோச்சுபவருக்கு இனி மருத்துவமே அழிய ஒரு புதுத்திட்டம் உதயமாகியுள்ளது எனத்தெரிந்தபின் எப்படி அமைதியாக இருப்பார்..

குதிகுதியென குதித்தார்.

“எங்கிட்ட உடனே இந்த விஷயத்த கொண்டு வந்ததுக்கு நன்றி. எப்படியும் உன் நண்பர்கள் மூன்று பேரும் இதுல தீவிரமா ஈடுபட்டு ஜெயிக்கத்தான் போறாங்க.. ஆனாலும் இத முறியடிக்கணுமே!!!”

“அதுக்குத்தானே நான் உங்ககிட்ட வந்திருக்கேன். அப்படி ஒன்னு நடந்தா.. அத முதல்ல நாமே உபயோகிப்போம். ஆனா அது வெளிய போறதுக்கு முன்னாடி நான் அதுல எதாவது மாற்றும் செஞ்சு.. அத வேற மாதிரியான விளைவுகளை ஏற்படுத்திற மாதிரி மாத்திவிட முயற்சிக்கிறேன். ஏன்னா நாங்க நாலு பேரும் ஒன்னா சேந்துதான் இந்த ஆராய்ச்சிய தொடங்கப்போறோம். அது மட்டுமில்ல.. நீங்க முன்னாடியே சொன்ன மாதிரி.. ஒரு வித்தியாசமான கிருமிய நான் ரகசியமா உருவாக்கிட்டு வரேன். அது கிட்டத்தட்ட முடியற ஸ்டேஜ்ல இருக்கு.. அது மட்டும் வெளிய வந்தா.. அத முறியடிக்கற மருந்தும் கூட தயாராகிக்கிட்டே இருக்கு.. இதுல பல வித்தியாசமான காம்பினேசன்ல கெமிக்கல்ஸ மிக்ஸ் பண்ணியிருக்கேன்.. இப்படியெல்லாம் யாருமே யோசிக்க மாட்டாங்க.. அதனால உங்க நம்பர் ஒன் ஸ்பாட் என்னைக்குமே உங்கள விட்டு போகவே வாய்ப்பே இல்ல.. அப்படியே என்னையும் கொஞ்சம் நல்லா கவனிச்சிங்கனா நல்லா இருக்கும்..”

“ஓ நிச்சயமா.. இதுவரை இல்லாத மாதிரி.. இனி என் கவனிப்பு இருக்கும்.. ஓகே..  எந்த ஆராய்ச்சி முடிஞ்சாலும் எங்கிட்ட முதல்ல சொல்லுங்க..”

“ஸ்யூர் சார்..”

==
ஆராய்ச்சிக்கூடம்..

ராஜ், ராம், சச்சி, கிஷோர் தங்களது சென்று கொண்டிருந்த தனித்தனி ஆராய்ச்சிகளை முடித்திருந்தனர்.

இப்போது சுகாதார அமைச்சரின் ஆலோசனை படி.. புதிய ஆராய்ச்சியை சேர்ந்தே ஆரம்பித்திருந்தனர். கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது.

மெள்ள மெள்ள தங்களது ஆராய்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்களை 10% 25% 35% என படிப்படியாக முன்னேறிய படி இருந்தனர்.

சுகாதாரத்துறை அமைச்சருக்கு எல்லாவித அப்டேட்டும் சென்று கொண்டிருந்தது.

பிரேக் வேளையில் ஒரு பிரேக்கிங் நியூஸ்..

“நாட்டில் புதிய அபாயகரமான வைரஸ்” இது தாக்கிய அடுத்த நொடி.. நினைவுகளை மொத்தமும் இழக்கச் செய்கிறது. முக்கியமான நிறுவனங்களின் நிர்வாகத்தலைவர்கள் ஐந்து பேரை இதுவரை தாக்கியுள்ளது. இதனால் இது எதிரி நாட்டிலிருந்து ஏவப்பட்ட ஒரு கிருமியாகவே பார்க்கப்படுகிறது.

செய்தியைக் கண்டதும் மூவருக்கு அதிர்ச்சி… ஒருவருக்கு மட்டுமே மகிழ்ச்சி..

அடுத்தடுத்த நாட்களில் நாடு முழுவதும் பீதி கிளம்பியது.

அக்கிருமி தாக்கிய நிறுவனங்களின் மதிப்பு சந்தையில் வேக வேகமாக குறையத் தொடங்கியது. இந்த வித்தியாசமான தாக்குதல் அனைவருக்கும் பெரும் பயத்தைக் கொடுத்தது.

 அப்போது தான் உலகப் பெரும்பணக்காரர் இலியட் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

“வணக்கம். எப்போது இக்கிருமி வந்ததோ. அப்போதே அதற்கான மருந்தினை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் எங்களது விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். இன்னும் சிறிது நாளில் இதற்கான மருந்து உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் பெற்று வெளியாகும் ஆனால் விலை மட்டும் சாமானியருக்கு சாத்தியமில்லாததாய் இருக்கும். அதனை மட்டும் மருந்து வெளியீட்டு அன்று தெரிவிக்கிறேன்”

இந்த அறிவிப்பே உலகம் முழுதும் வரவேற்பு பெற்றது. அடுத்த ஒரு வாரத்தில் இக்கிருமி இன்னும் இருபது நாடுகளுக்கு பரவியது.

எப்போது மருந்து வரும் என அனைவரும் தவிக்க ஆரம்பித்தனர்.

==

சுகாதார அமைச்சர் மீண்டுமொரு முறை அவசரச் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

முகம் மிகவும் சோகமாக இருந்தது.

“நாம உலகுக்கு ஒரு நன்மை செய்ய யோசிச்சா, அதுக்குள்ள யாரோ புகுந்து இவ்ளோ கொடூரமான கிருமிய பரவ வச்சிட்டாங்க.. அத முறியடிக்கற மருந்தும் இன்னும் வரல..”

“ஆமா சார்.. நம்ம ஆராய்ச்சியும் இப்பத்தான் 60% முடிஞ்சிருக்கு.. அதுக்குள்ள இந்த கொடும்வைரஸ் உலகம் பூரா பரவிடும் போல இருக்கே..”

“அந்த மருந்தையும் இன்னும் ரிலீஸ் பண்ணல..”

“நாங்களும் அதற்கான முயற்சியில இறங்கி இருக்கோம் சார்.. மெள்ள முன்னேறி செல்லும் போது, நமக்கே என்ன ஆராய்ச்சி பண்றோம்னு மறந்து போற மாதிரி ஒரு பீலிங் வந்து, மறுபடியும் முதல்ல இருந்தே தொடங்க வேண்டியதா இருக்கு”

“என்ன.. அப்படியா இருக்கு.. இது எதோ சூழ்ச்சி மாதிரி இருக்கே…”

“ஆமா சார். எங்களுக்கும் எதுவும் புரியல..”

“இந்தக் கிருமி கூட நிறுவனத்தலைவர்கள மட்டும் தாக்குதுனா.. இது தானா பரவல… இது ஏவப்படுது.. எங்கிருந்தோ சரியான திசையில செலுத்தப்படுது.. யார் எவர்னு முன்னாமே ப்ளான் போடப்பட்டு.. சரியா அவங்கள மட்டும் தாக்குது..”

“ஆமாம்.. எனக்கும் கூட இது தோணுச்சு..”

“நாம என்ன பண்ணுவோம்.. இப்படி பண்ணலாமா.. எல்லா நிறுவனத் தலைவர்களையும் ஒரு இடத்தில கூப்பிட்டு சீக்ரெட்டா வச்சு பாதுகாப்போம். இது சரியான முடிவ கொடுக்கும்..”

“கண்டிப்பாக சார். நல்ல திட்டம்.. எனச் சொன்னது மூன்று பேர் மட்டுமே..”

ஒருவருக்கு இதைக் கேள்விப்பட்டது அவ்வளவு ஹேப்பி..

அப்போது ராஜ் மீது அந்தக் கிருமியின் தாக்குதல் நடந்தது.

==

“என்ன சொல்றீங்க  நம்ம நாட்டின் டாப் மோஸ்ட் சயின்டிஸ்ட் மேலேயும் அந்தக் கிருமி தாகுதலா?”

“ஆமா.. இப்ப எனக்கு ஒரு விஷயம் துல்லியமா விளங்குது.. நாம பண்ற இந்த ஆராய்ச்சி எப்படியோ வெளிய லீக் ஆகியிருக்கு.. அத பிடிக்காதவங்கத்தான் இந்த வைரஸ கிளப்பி விட்டிருக்கணும்”

“எஸ்.. உங்க கெஸ்ஸிங் ஈஸ் கரெக்ட்”

“அடுத்த தாக்குதல் கூட உங்க மூணு பேர்ல ஒருத்தர் மேல இருக்கலாம். இல்லேனா மூணு பேர் மேலேயும் கூட இருக்கலாம்”

“அதுக்குள்ல விரைவா நாங்க மருந்து கண்டுபிடிக்க முடியுமானு பார்க்கறோம்”

“அதுவரைக்கும் இந்த புதுக்கிருமி ராஜ்ஜ அதிகம் சேதப்படுத்தாம இருந்தா சரி..”

==

“என்ன சொல்ற..? ராஜ் மேல எதுக்கு இந்த அட்டாக்?”

“சார்.. எல்லாம் ஒரு பயமுறுத்தலுக்காகத்தான். அவருக்கே தெரியாம நம்ம ரெகவரி இன்ஞ்செக்சன அவருக்கு போட்டு விட்டுட்டேன். அவர் இன்னும் நாலு நாள்ல ரெக்கவர் ஆகிடுவார். அப்புறம் இன்னொரு புது விஷயம்.. ஹேப்பியான விஷயம் ஒன்னு நடக்கப் போகுது”

“ஓ.. என்னது சீக்கிரம் சொல்லு?”

“எல்லா சீஈஓ வையும் ஒரே இடத்துல தங்க வச்சு.. நம்ம கிருமிகிட்ட இருந்து காப்பாத்த போறாங்களாம்..”

“அப்படியா.. அதுல என்ன ஹேப்பி நமக்கு.. அப்பறம் எப்படி நம்ம கிருமி அவங்களத் தாக்கும்!?!?”

“நீங்க ஒன்னு யோசிச்சீங்களா? எதுக்கு ஒவ்வொருத்தரா ஒவ்வொரு நாள்ல தாக்கிக்கிட்டு, எல்லோரையும் ஒண்ணா ஒரே இடத்துல சேக்கறோம்.. நீங்க ஒண்ணா அட்டாக் பண்ணுங்கனு நமக்கு ஒரு வாய்ப்ப அவங்களே ஏற்படுத்தி தராங்க”

“வாவ்… அங்க ஆங்கிள்ல நான் யோசிக்கலையே!”

“சரி.. அவங்கள எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்த அடுத்த ரெண்டு நாள்ல நம்ம மருந்த ரிலீஸ் பண்றோம்”

“குட்.. நல்ல தாட்.. அப்பறம் அவங்கள அடைச்சு வைச்சிருக்கற எடத்துக்குள்ல நம்ம கிருமி எப்படி போகும்?”

“இதுவரை எப்படி போச்சோ.. அப்படியே போகும்?”

“இதுக்கு பின்புலத்துல ஒரு பெரிய டீமோட உழைப்பு இருக்கும் போலயே..”

“சரிதான்.. ஒரு பதினஞ்சு பேர் கொண்ட எனது குழு.. அல்லும் பகலும் இதுக்காக உழைச்சிட்டு இருக்காங்க..”

“ஓ.. அந்தக்கிருமிய தடுக்க மீதி மூணு பேரும் எல்லா முயற்சிகளும் பண்ணுவாங்க தானே!”

“கரெக்ட்.. அதே முயற்சிகளை பண்ணும் போது எங்கிட்ட அதப்பத்தி சொல்லுவாங்க தானே!”

“ஓ.. அடடா.. ஹா.. ஹா..”

சந்தோசமாக சிரித்தனர் இருவரும்..

==

அனைவருக்கும் தகவல் அனுப்பப் பட்டுவிட்டது. ஒவ்வொருவராக அந்த ஐந்தடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் வர ஆரம்பித்திருந்தனர்.

அதன் நுழைவாயிலில் மிகப்பிரமாண்டமான கம்ப்யூட்டரும், திரையும், அதி நவீன கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. உள்ளே நுழையும் ஒவ்வொரு தூசியும் கூட வீடியோ எடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது.

அனைவரும் இரண்டு நாட்களில் அங்கு வந்து சேர்ந்து விட்டனர்.

இன்று எப்படியாவது அந்த கிருமியை உள்ளே அனுப்பி எல்லோரையும் அட்டாக் செய்ய திட்டமிட்டது அந்த தீய மனம்.

அதன் திட்டப்படி.. கேமராக்கள் பழுதாக்கப்பட்டு.. மதியத்தில் அனைவரும் கிருமியின் தாக்குதலுக்கு உள்ளாயினர்.

நாடே அதிர்ச்சியில் உறைந்தது.

அனைவருக்கும் அடுத்து ஒரு பெருமகிழ்ச்சி காத்திருந்தது.

அன்று மாலையே அங்கு கிருமியால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தனர்.

“எப்படி.. எப்படி.. எப்படி.. இது சாத்தியம்!?!?!”

==

குற்றவாளிக்கூண்டில் கிஷோர் பிலிப்பும், உலகின் டாப் பணக்காரர் இலியட்டும் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு என்ன இது? எப்படி இது நடந்தது? என்பதை யூகிக்கவே முடியவில்லை. இப்பொழுது ராஜ் முழுமையாக குணமாகி விட்டார்.

ராம் மற்றும் சச்சி… இருவரும் மாறி மாரி பேச ஆரம்பித்தனர்.

“சுகாதாரத்துறை அமைச்சரின் உத்தரவுப்படி நாங்க ஒரு ஆராய்ச்சியில ஈடுபட்டிருந்த போது தான் இந்த வைரஸ் நம்மள படாத பாடு படுத்த ஆரம்பிச்சிருந்துச்சு..”

“ராஜ் தாக்கப்பட்டதுல‌ தான் எங்களுக்கு விஷயம் வெளிய இருந்து இல்ல.. உள்ள இருந்து தான் நடக்குதுனு புரிஞ்சிச்சு..”

“தனியா சீக்ரெட் புரஜக்ட் பண்ற கிஷோர் மேல சந்தேகம் வந்துச்சு.. தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பிக்க, இவர் இந்த இலியட்ட அடிக்கடி மீட் பண்றதையும் தெரிஞ்சிக்கிட்டோம்”

“எங்க தயாரிப்புல உருவான ஒரு புது கிருமிய.. பயப்படாதிங்க.. இது ‘குட் வைரஸ்’.. இதப்பத்தி விளக்கமா அப்பறம் பார்க்கலாம். இந்த குட் வைரஸ் முழுசா உருவாகிடுச்சு.. எப்போ எல்லா சீஈஓ மேலேயும் வைரஸ் தாக்குதல் நடந்துச்சோ.. அப்பவே எங்க குட் வைரஸ டெஸ்ட் பண்ணி பார்க்க முடிவெடுத்தோம்”

“அத கிஷோர் மேல உபயோகிக்க..  உடனடியா அவன் மனசுல இருந்த தீய எண்ணங்கள் மறைய ஆரம்பிச்சிடுச்சு…”

“அவனா கிருமி மாதிரியே, அதனோட மருந்தையும் எல்லோரும் அனுப்ப எல்லோரும் சரியாயிட்டாங்க..”

“அந்த முழு மருந்தையும் எடுத்து இப்ப பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பிச்சாச்சு.. இனி பரப்ப வேண்டியது இந்த குட் வைரஸ் மட்டும் தான்”

“குற்றமில்லாத, நோயில்லாத உலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்”

“நோ ஹேட்டர்ஸ்.. நோ டாக்டர்ஸ்”

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

2500 – வள்ளுவ ஆண்டு (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ புதுவைப்பிரபா, புதுச்சேரி

டிஎன்ஏ திருட்டு (சிறுகதை) – ✍ லட்சுமி பாலா, சிவகாசி