in ,

நவராத்திரி மூன்றாம் நாள் அலங்காரம் – பூமாலை – பாமாலை – நிவேதனம் (நவராத்திரி பதிவு 6) எழுதியவர்: கீதா சாம்பசிவம்

மூன்றாம் நாள்

மஹா கௌரி

ன்றைய தேவதை மஹா கௌரி!  சிறுமி வடிவில் இருந்தாலும், அசுரர்களை எதிர்த்துப் போரிட்டாள்.

இதனால் இவளுக்கு ஏற்பட்ட உடல் சோர்வில், இவள் பொன்னிறம் மங்கவே, ஈசன் கங்கை நீரினால் அவள் உடலைச் சுத்தம் செய்ய உதவுகிறார்.

கசடுகள் நீங்கி மீண்டும் பொன்னிறம் பெற்றுத் திகழ்ந்த மஹா கௌரியான இவள், மன நலம் பாதிக்கப்பட்டோர், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் வணங்கும் தெய்வம் ஆவாள்.

திங்கட்கிழமைக்கு உகந்த தேவதை இவளே! தண்டகாரண்யத்தின் முனிவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் தீர, ஈசன் ஆடிய சுத்தத் தாண்டவத்தின் போது தோன்றியவள் இந்த மஹா கௌரி.

மூன்றாம் நாளான இன்று, பூக்களால் கோலம் போடுவது சிறப்பு. அல்லது அரிசியை ஊற வைத்து அரைத்த மாவினால் நக்ஷத்திரக் கோலமும் போடலாம்.

இன்றைய தினம் அம்பிகையை நான்கு வயதுள்ள பெண் குழந்தையாக, “கல்யாணி” என பாவித்து வழிபட வேண்டும்.

சிவப்பு அல்லது சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தில் ஆடைகளைக் கொடுக்கலாம்.

பூமாலை

அர்ச்சனைக்குச்  செம்பருத்திப்பூக்கள், தாமரைப்பூக்கள், செண்பகப்பூக்கள், குங்குமம் ஆகியனவற்றால் வழிபடலாம்.

பாமாலை

லலிதா நவரத்னமாலை, துர்காஷ்டகம் போன்ற துதிகளால் வழிபடலாம். அம்பிகையைக் கல்யாணியாக அலங்கரித்து கொலுவில் வைக்கலாம்.

நிவேதனம்

இன்றைய தினம் காலை, கோதுமை மாவில் உருண்டை பண்ணி நிவேதனம் செய்யலாம். அல்லது முழு கோதுமை / ரவையில் சர்க்கரைப் பொங்கல் பண்ணலாம். தயிர் சாதமும் பண்ணலாம்.

  1. கோதுமை உருண்டை
  • கோதுமை உருண்டைக்குக் கடாயில் நெய்யைக் காய வைத்துக் கொண்டு, முந்திரிப்பருப்பைப் போட்டு வறுத்துத் தனியாக வைக்கவும்
  • மீதமிருக்கும் நெய்யோடு இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்துக் காய்ந்ததும், அதில் ஒரு கிண்ணம் கோதுமை மாவைப் போட்டு வறுக்கவும்.
  • மாவு நன்கு வறுபட்டு வாசனை வரும் சமயம், ஒரு கிண்ணம் சர்க்கரை அல்லது வெல்லத்தூள் சேர்க்கவும்.
  • இனிப்பு அதிகம் வேண்டுமெனில் ஒன்றரைக் கிண்ணம் சேர்க்கலாம்.
  • இந்த மாவில் ஏலக்காய்த் தூள் சேர்த்து, வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கலாம்..
  1. கோதுமைப் பொங்கல்
  • கோதுமைப் பொங்கல் செய்ய கோதுமையை வறுத்துக் கொண்டு, வறுத்த பாசிப் பருப்போடு சேர்த்துப், பாலில் வேக வைத்துக் கொண்டு, வெந்ததும் தேவையான வெல்லம் சேர்த்துக் கரைய விடவும்.
  • சேர்ந்து வந்ததும் ஏலக்காய்த் தூள் சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழங்களைச் சேர்க்கலாம். நெய்யில் வறுத்த தேங்காய்த் துண்டுகளையும் சேர்க்கலாம். இது அரிசி சேர்த்த சர்க்கரைப் பொங்கல் மாதிரிக் குழையாது.
  • கோதுமை பிடிக்கவில்லை எனில் கோதுமை ரவையில் இதே மாதிரிப் பண்ணலாம்.
  • இதெல்லாம் முடியாதவர்கள் சாதத்தைப் பாலில் குழைய வேக வைத்துக் கொண்டு, அதில் ஒரு மேஜைக்கரண்டி வெண்ணெய், உப்புச் சேர்க்கவும்.
  • இரும்புக் கரண்டியில் நல்லெண்னெய் சேர்த்துக், கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை, பெருங்காயம் தாளித்துச் சாதத்தில் கொட்டி விட்டு, ஒரு சின்னக் கிண்ணம் தயிரை விட்டு நன்கு கலந்து, கரண்டியால் மசிக்கவும். இதையும் நிவேதனம் பண்ணலாம்.
  1. சிவப்புக் காராமணிச் சுண்டல்
  • மாலை சிவப்புக் காராமணிச் சுண்டல். இதை வெல்லம் போட்டு அல்லது காரம் போட்டுப் பண்ணலாம்.
  • காராமணியை முதல் நாளே ஊற வைத்துக் கொண்டு, மறுநாள் கழுவிக் குக்கரில் அல்லது வாயகன்ற பாத்திரத்தில் போட்டு உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.
  • பின்னர் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, கருகப்பிலை, மிளகாய் வற்றல் தாளித்துக் கொண்டு, பெருங்காயப் பொடியும் சேர்த்துக் கொண்டு, வெந்த காராமணியைக் கொட்டித் தேங்காய்த் துருவலும் போட்டுக் கிளற வேண்டும்.
  • தேவையானால் மிளகாய் வற்றல்+கொத்துமல்லி வறுத்துச் செய்த பொடியைச் சேர்க்கலாம்.
  • இனிப்புச் சுண்டல் எனில் காராமணியை உப்புச் சேர்க்காமல் நன்கு வேக வைத்துக் கொண்டு, நெய்யில் கடுகு தாளித்துக் காராமணியை வடிகட்டி அதில் சேர்த்து, ஏலக்காய்த்தூளுடன் வெல்லத்தூள்+தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி விநியோகம் பண்ணலாம்.
#ad

‘நவராத்திரி கையேடு’ போல் அமைந்த, ‘சஹானா’வின் 2020 நவராத்திரி சிறப்பிதழை வாங்க. கீழே கொடுத்துள்ள படத்தை கிளிக் செய்யவும்👇

இந்த புத்தகத்தில் உள்ள நவராத்திரி சிறப்பு பதிவுகள் பின் வருமாறு

  • நவராத்திரி வழிபாடு உருவான கதை
  • கொலுப்படி அமைத்தல் மற்றும் அலங்காரங்கள்
  • நவராத்திரி பூஜைக்கு செய்யவேண்டிய முன்னேற்பாடுகள்
  • நவராத்திரி ஒன்பது நாட்கள் மற்றும் விஜயதசமி அன்று பூஜை செய்யும் முறைகள் (தனித்தனியே விளக்கமாக)
  • நவராத்திரி ஒன்பது நாளுக்கான நிவேதன செய்முறைகள் (26 Recipes)
  • நவராத்திரிக்கான பாமாலை
  • நவராத்திரி நாட்களுக்கான தேவியின் நாமங்கள் (விளக்கத்துடன்)
  • லலிதா சஹஸ்ர நாம விளக்கங்கள் 
  • அம்பாளின் கேசாதி பாத வர்ணனைக்கான விளக்கங்கள் 
  • அம்பிகைக்கு ஆயிரம் நாமங்கள்

கொலு பொம்மைகள் / ஸ்டாண்ட் வாங்க Amazon இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

நவராத்திரி தொடர்பான அனைத்து பதிவுகளும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சிந்தூ அருண விக்ரஹாம் (நவராத்திரி இரண்டாம் நாளுக்கான நாமம் – விளக்கத்துடன்) – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)

    லலிதா சஹஸ்ர நாம விளக்கங்கள் – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)