ஆன்மீகம் நவராத்திரி

லலிதா சஹஸ்ர நாம விளக்கங்கள் – எழுதியவர் : ராமசாமி சந்திரசேகரன் (TRC)

லலிதா சஹஸ்ர நாம விளக்கங்கள்

லலிதா சஹஸ்ர நாமத்திலிருந்து சில நாமங்களுக்கு, எனக்கு தெரிந்தவரை விளக்கம்.

“சிதக்னிகூட சம்பூதா”

லலிதாதேவி எங்கே இருந்து தோன்றினாள்.

தேவேந்திரன் ஒரு மிகப்பெரிய யாகம் செய்தான். அந்த யாக குண்டத்திலிருந்து 16 வயது பாலாவாக ஜொலிக்கும் தங்கத்தட்டில் வந்து அவதாரம் செய்தாள் லலிதா தேவி.

அதனால்தான் அவளுக்கு “சிதக்னிகூட சம்பூதா” என்ற நாமம் வந்தது.

“மஹாபைரவ பூஜிதா”

மஹாபைரவரால் பூஜிக்கப் படுபவள்.

யார் இந்த மஹாபைரவர்? வேறு யாரும் இல்லை, சாக்ஷாத் பரமசிவனே தான்.

பைரவர் என்ற வார்த்தை எப்படி வந்தது? “ப” என்றால் பவம் படைத்தல், “ர” என்றால் ரக்ஷிப்பவர் காத்தல், “வ” வமனம் என்றால் அழித்தல்.

இந்த மூன்று தொழில்களையும் சிவன் லலிதாதேவியின் அருளினால் செய்கிறார்.

அப்பேற்பட்ட மஹாபைரவரால் பூஜிக்கப் படுபவர்.

“நிர்பவா பவநாசினி”

ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறக்காதவள்.

பிறப்பிலிருந்து விடுபட்டவள் மட்டும் அல்ல, தன்னை வழிபடுபவர்களுக்கு அவர்களது பிறப்பையும் அழித்து, வீடு பேற்றை அளிப்பவள்.

அதனால்தான் பவநாசினி என்ற பெயர் வந்தது

அபிராமி பட்டரும் இதையே சொல்லி பாடுகிறார்

“ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன்கைப்

பாசத்தில் அல்லற்பட இருந்தெனை நின்பாதம் என்னும்

வாசகமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டுகொண்ட

நேசத்தை என்சொல்லுவேன் ஈசர் பாகத்து நேரிழையே”

#ad

(தொடரும்)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: