in

நம்பிக்கை (கவிதை) – சாந்தி மாரிமுத்து – December 2020 Contest Entry 15

நம்பிக்கை (கவிதை)

அணுக்களின் அளவு தெரியும் -அதன் 

மகிழ்ச்சி தெரியுமா  உங்களுக்கு?

எண்ணத்தின் அலைநீளம் தெரிந்தால் 

போதாது -அதன் 

வலிமை அறிய வேண்டும்

இயற்கையை இருட்டடைப்புச் செய்து 

வசந்தத்திற்கு வரவேற்பா?

நம் முகம் தொலைப்பில் -ஒரு

முகவரி தேவையா ?

மனங்களின் அறிமுகங்கள் நிகழ 

இதயங்களின் விலாசங்களே தேவை.

நம்பிக்கை !

எண்ணத்திற்கான 

பிரத்யேக டானிக். 

அளவில்லா ஆனந்தம் கொண்டவருக்கு

நம்பிக்கை ஒரு ஊற்று

எதிர்காலத்தை தேடுபவர்க்கு 

நம்பிக்கை ஒரு ரேகை.

இருளில் தத்தளிப்போருக்கு 

நம்பிக்கை ஒரு வெளிச்சம் .

நம்பிக்கை சிலநேரம் நிறம் நீர்த்து 

அவநம்பிக்கையாகவும் 

நிறம் கூடி அதீத நம்பிக்கையாகவும் 

மாறுவதுண்டு. 

வெட்டப்படும் நகங்கள் கூட 

வளருகிறதே !- வெட்டுகின்ற.

நமக்கு வேண்டாமா நம்பிக்கை?

வாழ்க்கை வண்டி ஓடுவது –

நம்பிக்கை என்ற அச்சாணியால் தான் .

நம்பிக்கை விதை விதைக்காமலேயே 

அறுவடைக்குத் தயாராவதில் அர்த்தமில்லை .

நம்பிக்கை இல்லாதபொழுது 

வெற்றிக்கு விலாசம் 

எங்கே எழுதுவது?

அலைகின்ற  மனத்தை 

நிலைப்படுத்தும் கடிவாளமே நம்பிக்கை !

குழப்பத்திற்கு என்றும் 

குட்பை  சொல்லவைக்கும்  நம்பிக்கை!

வாயென்பது வாய்மைக்கு என்று 

வாதமிடுவது நம்பிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

என்னவன் ❤ (சிறுகதை) – கரோலின் மேரி – December Contest Entry 14

இரட்டை அடுக்கு பிஸ்கட் கேக் – Eggless & Without Oven (வர்ஷா ராஜேஷ்) – December 2020 Contest Entry 16