சமையல்

இரட்டை அடுக்கு பிஸ்கட் கேக் – Eggless & Without Oven (வர்ஷா ராஜேஷ்) – December 2020 Contest Entry 16

டிப்படையான வெறும் மூன்று பொருட்களைக் கொண்டு, வீட்டிலேயே இரட்டை அடுக்கு கேக்கை எளிதில் தயாரிக்க முடியும். இந்த  பிஸ்கட் கேக் எல்லா  திருவிழாக்களுக்கும்  பொருத்தமானது

தேவையான  பொருட்கள் :

  1. Parle-g பிஸ்கட் – 250 g
  2. வேகவைத்த பால் – 5 teaspoons
  3. சர்க்கரை தூள்- 3 teaspoons
  4. வெண்ணெய் காகிதம் -2
  5. நறுக்கிய பாதம் – 6-10#s
  6. Bourbon பிஸ்கட் – 150 g

#ad

செய்முறை :

  • முதலில் 250 கிராம் Parle-G பிஸ்கட்டை உடைத்து அரைக்கவும்
  • பின்னர், ஒரு  கலவை  கிண்ணத்தில்  பிஸ்கட் பொடியை  சேர்த்து, அத்துடன் 2 டீஸ்பூன் சர்க்கரை  தூள்  மற்றும்  மூன்று டீஸ்பூன் வேகவைத்த  பால் சேர்க்கவும்
  • இது அனைத்தையும் ஒன்றாக கலந்து மாவாக  தயாரிக்கவும்
  • மாவு தயாரானதும் , வெண்ணெய் காகித்தில் சம்மாக பரப்பி, அழுத்தி  சதுர  வடிவம்  போல  செய்ய வேண்டும்
  • பின், குளிர்சாதன பெட்டியில் 10 நிமிடம் மாவை உறைய வைக்கவும் (Freeze it)
  • அடுத்து, Bourbon பிஸ்கட்டை பொடியாக அரைத்து அதை ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்.
  • பின்னர், அதில் 3 டீஸ்பூன் வேகவைத்த  பால் மற்றும் நறுக்கிய பாதாம்  சேர்த்து மாவாக  தயாரிக்கவும்.
  • 10 நிமிடம் கழித்து  குளிர்சாதன  பெட்டியில்  இருந்து Parle-g பிஸ்கட்  மாவை  எடுத்து  தனியாக  வைக்கவும்.
  • மீண்டும் ஒரு  வெண்ணெய்  காகித்ததை  எடுத்து,  Bourbon  மாவை  சம்மாக பரப்பி, அதன்  மேல்  Parle-g  மாவை  வைக்கவும்
  • வெண்ணெய் காகிதத்தில்  மாவை  அழுத்தி,  சதுர  வடிவம்  வருவது போல் செய்ய வேண்டும்
  • பின்னர், குளிர்சாதன  பெட்டியில் 10 நிமிடம் மாவை  உறைய வைக்கவும்
  • அதன் பின், குளிர்சாதன பெட்டியில்  இருந்து எடுத்து, கேக்கை சதுர வடிவில் வெட்டி பரிமாறலாம்

அனைவருக்கும்  முன்கூட்டிய இனிய புத்தாண்டு  நல்வாழ்த்துகள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: