2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28
எய்ம்ஸ் மருத்துவமனையில் அவனுக்குத் தெரிந்த மருத்துவர் இருந்ததால் உடனடியாக ஐ.சி.யு.வில் சேர்த்து குளுக்கோஸ் ஏற்றச் சொல்லிவிட்டு “டாக்டர் என்னாச்சு’’ என்று பதறினான்.
“கொஞ்சம் பொறுமையாக இருங்கள் அரசு. உங்கள் அம்மாவிற்கு ஒன்றுமில்லை. அவர்கள் சாப்பிடாமல் இருந்திருக்கிறார்கள். வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை.” என்றார் டாக்டர் குணா.
வெளியே வந்த போது அப்பாவும் பாபுவும் பேசிக் கொண்டிருக்க, திலக், பூனம், அனாமிகா மூவரும் வேகமாக வந்து “அரசு, அம்மாவிற்கு என்னாச்சு? என்ன பிரச்சினை” என்று கேட்டார்கள்.
“ஒன்றுமில்லை. சரியாக சாப்பிடாததனாலே வந்த மயக்கம்தான்.”
அனாமிகா “இதுக்குத்தான் சொன்னேன் ஒழுங்காக வீட்டிற்குப் போய் அம்மாவைக் கவனி” என்று கத்தினாள்.
எல்லோரும், ஜே.கே.பாபு மற்றும் அங்கிருந்த அனைவரும் திரும்பிப் பார்க்க, மெதுவாக பூனத்தின் பின் மறைந்து கொண்டாள் அனாமிகா.
டாக்டர் குணா வந்து, “அரசு பிரச்சினை ஒன்றுமில்லை. அம்மா ஒழுங்காகச் சாப்பிடவில்லை என்று நினைக்கிறேன். குளுக்கோஸ் போட சொல்லி இருக்கிறேன். போய்ப் பாருங்கள்” என்றார்.
வேகமாக உள்ளே வந்த அரசு அம்மா விழித்திருப்பதைப் பார்த்து “என்னாச்சும்மா? என்றான் கதறி அழுதுகொண்டே.
கையைக் காட்டி அருகில் அழைத்து அவனை அப்படியே ஆரத்தழுவிக் கொண்ட ராணி அம்மா “எப்படிப்பா இருக்கே?” என்றாள்.
“எனக்கென்ன குறைச்சல். கல்லு மாதிரி இருக்கேன். நீங்க…. நீங்க… “ அரசினால் அழுகையை அடக்க முடியவில்லை.
“அழாதே கண்ணா. இப்போ என்னைப் பார்த்து அழுகிறாய். உன்னைக் காணாமல் தினம் தினம் அழுதேன் தெரியுமா?” என்றாள் அம்மா.
அதற்குள்ளாக கொண்டு வந்த ஆரஞ்சு பழத்தில் ஜூஸ் பிழிந்து “அம்மாவிற்கு கொடுங்கள்” என்றாள் அனாமிகா.
ஜூஸை வாங்கி அம்மாவிற்கு கொடுத்து விட்டு கண்களைத்துடைத்துக் கொண்டான்.
“அப்புறம் அரசு. நான் மிகவும் வலிமையான பெண். மகனே இப்படிப்பட்ட செயல்களுக்கெல்லாம் எளிதில் பயந்து விடுபவள் அல்ல. இந்த இந்த மயக்கமெல்லாம் ஒரு நாடகம் தான். அப்பா சொன்னார். நான் நடித்தேன் அவ்வளவு தான்.” அன்றாள் அம்மா.
“ஏதோ அரசு வீட்டுக்கு வந்தானே” என்றார் அப்பா.
“இது மருத்துவமனை அப்பா. நான் இன்னும் வீடு திரும்பவில்லை.” என்றான் அரசு.
“என்ன திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறதா?” என்று பாபு கேட்க, “சார் கார் வந்தாச்சு. வீட்டிற்கு கிளம்புவோமா?” என்றான் ஓட்டுநர்.
“அரசு இதெல்லாம் யாரு… இந்தப் பெண்ணைப் பார்த்தால்… “ என்று அனாமிகாவைக் காட்டி கேட்டாள் அம்மா.
“அது..” என்று சிரித்தான் அரசு.
“எங்களுக்குத் தெரியும். பாபு தான் எல்லாம் வந்து சொல்றாரே. ராணி உன் வருங்கால மருமகள். நம்மள பொண்ணு பார்த்து அலைய வேண்டாம்னு அவனே தன் வருங்காலத்தை தெரிந்து கொண்டான்” என்றார்.
பின்னாலே நின்று சிரித்த ஜே.கே. “பேரு என்னம்மா. வா உட்கார்”
“அனாமிகா”
“அனாமிகாவா….இனியாவது எங்களை விட்டு போக மட்டியே அரசு. “ என்றாள் அம்மா.
“போக விட மாட்டேன் அத்தை” என்று அனாமிகா சொல்ல எல்லோரும் சிரித்தனர்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings