in ,

முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 17) – ”கவி இமயம்” இரஜகை நிலவன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12   பகுதி 13   பகுதி 14   பகுதி 15   பகுதி 16

திலக்கும், அரசும் அந்த மஹாராஷ்டிரா தொழிற்சாலைகளுக்கு உதவி செய்யும் அலுவலகத்திலிருந்து கொஞ்சம் தளர்ச்சியோடு இறங்கி வந்தனர்.

“இவ்வளவு பணம் லஞ்சமாக கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் என் தந்தையாக இருந்தால் ஒருவேளை கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, பெற வேண்டியதைப் பெற வேண்டும் என்ற கோணத்தில் செயல்பட்டிருப்பார். இவ்வளவு பணம் லஞ்சமாக கொடுப்பதிருக்கட்டும் முதலில் வியாபாரம் செய்யத் தொடங்குமுன்னே லஞ்சம் கொடுத்து லோன் வாங்கி, கட்டிடம் போட்டு ம்கூம்… திலக். சரி வரும் என்று தோன்ற வில்லை.” என்றான் அரசு.

“அரசு நீ ஓடுகிற குதிரை. உனக்கு கடிவாளம் போட்டு கண்களை இருபுறமும் மறைத்து நேரே பார்க்க ஓட விட்டிருக்கிறது. இந்த வாழ்க்கை.! இப்போது உன் குறிக்கோள் சுய சம்பாத்தியம், அதற்காக சில நிப்பந்தங்களுக்குக்கட்டுப் பட்டுத்தான் ஆகவேண்டும்.”

“உனக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ஒன்றைப் பெறுவதற்கு ஒன்றை இழந்துதான் தீர வேண்டும். இது வாழ்வின் விதி. அந்த விதியை மீற முடியாத சூழ்நிலை. நீ செய்யப் போகும் வியாபாரத்திற்கு இந்த லஞ்சம் முதலீடாக இருக்கட்டும்.” என்றான் திலக்.

“சரி சொல்லி விடலாம் என்கிறாயா?” என்று கேட்டான் அரசு.

“ஆம்” என்று தலையாட்டினான் திலக்.

திரும்ப வேக வேகமாக மாடியேறி வந்து “லோன் சாங்ஷன் செய்து விடு” என்றான் அந்த எம்.ஐ.டி.சி. கிளார்க்கிடம்.

அவன் கொஞ்சம் கூட கூசாமல் “என் பணம் …” என்று கேட்டான்.

“எனக்கு லோன் வந்து சேர்ந்த மறுநிமிடம்..”

“ஏமாற்ற மாட்டாயே?”

“கண்டிப்பாக என் வாழ்வில் யாரையும் ஏமாற்றியதில்லை.”

“சரி. நாளைக்கு காலையில் உன் வங்கி கணக்கு எண் கொண்டு வா. அங்கே எங்கள் செக் போய் விடும்.” என்றான் கிளார்க்.

கீழே இறங்கி வந்து “தாங்க்யூ திலக். நான் கொஞ்சம் கொஞ்சமாக இனி சமாளித்துக் கொள்கிறேன். நீ காந்திவிலி போக வேண்டுமென்றாயே… இனி கிளம்பு” என்றான்.

“வெரிகுட், அரசு. உனக்கு இவ்வளவு தன்னம்பிக்கை வந்து குறித்து மிக்க சந்தோசம்.”

“இந்தக் கட்டிடம் வளர ஆரம்பிக்கும்போதே நான் பெங்களூர் போய் மெஷினரிக்கு ஆர்டர் கொடுத்து விட்டு வரலாமென்று நினைக்கிறேன்.”

“சொல்லாதே, செய். மேலும் இந்தியன் மெஷினரிக்கு இணையாக ஜப்பான் கம்பெனியொன்று போட்டி போட்டு இந்தியாவில் பாதி விலைக்கு மார்க்கெட்டிற்கு வந்துள்ளது. அதையும் கவனி.”

ஜப்பான் மெஷினுக்கு கஷ்டம்ஸ் டியூட்டி, ஆக்ட்ராய் எல்லாம் கட்டும்போது அதிமாகத்தானிருக்கும் திலக்.”

“நோ அரசு. எல்லா டியூட்டி, வரி எல்லாம் சேர்த்து குறைந்த விலைக்குத் தருகிறான்.”

“அப்புறம்  அந்த எக்ஸ் போர்ட் ஆர்டர் என்னாயிற்று எல்.சி. ஓப்பன் பண்ணியாகி விட்டதா? திலக் ஞாபகம் திரும்ப நினைவுக்குக் கொண்டுவந்தான்.

“ம் கூம். ஒரு மாதமிருக்கிறது. உன்னிடமும் உன் தங்கையிடமும் வருகின்ற புரொடக்‌ஷன் போக மீதி வெளியே வாங்க வேண்டியதற்கு ஆர்டர் கொடுத்தாகி விட்டது.”

“இன்னும் கம்பெனிக்கு பெயர், முகவரி, பேங்க் அக்கவுண்ட் எதுவுமே இல்லாததால் ஒரு வாரத்திற்குள் எல்லாம் ஆரேஞ்ச் பண்ணி இ .. மெயில் அனுப்புகிறேன். போனுக்கே நாலாயிரத்து நானூற்றுக்கு மேலாகி விட்டது.”

“சரி விடு. சம்பாதிக்கிற பணம் தானே. உடனடியாக பெயர்…. வைத்து… ஆமாம் என்ன பெயர் வைக்கலாம் என்று ஆசைப் படுகிறாய்?”

“எனக்கு உதவி செய்த திலக் ஞாபகமாக ‘திலகர் எக்ஸ்போர்ட் ஏஜென்ஸி’ என்று நினைத்துள்ளேன்.”

“நோ.நோ.. அது தவறு. உன் அம்மா பெயர் வைக்கலாமே. அவர்கள் பெயர் என்ன?”

“ராணி”

“‘ராணி எக்ஸ்போர்ட்ஸ்’ என்று பெயர் சூட்டலாம்” என்று திலக் சொன்னதற்கு ஆமோதித்தான் அரசு.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நீயும் ஒரு தாயே! (கவிதை) – வைஷ்ணவி

    நேற்றைய நான் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை