2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6
இதுவரை:
அப்பாவுக்கு திதி கொடுக்க கூட வராமல் நடிகை வந்தனாவுடன் உல்லாசமாய் இருக்கும் ராம்குமார் ,ரெண்டு நாள் கழித்து வீடு வருகிறான் தலையில் கட்டுடன்..
இனி:
கையில், தலையில் கட்டுடன் வந்திறங்கிய ராம்குமாரை பார்த்து பதறித்தான் போனாள் மகா.
“என்னங்க! என்ன ஆச்சு? எப்படி அடிப்பட்டது …ஏன் நீங்க போன் பண்ணவே இல்ல.. உங்க போன் சுவிட்ச் ஆப்ல இருந்தது. எனக்கு ஒரு விஷயமும் தெரியாம ரொம்ப பதறிப் போயிட்டேன். இப்ப பார்த்தா இப்படி அடிபட்டு வந்து நிக்கிறீங்க. நாங்க எல்லோரும் எங்க போய்ட்டோம்? ஒரு போன் பண்ணா ஓடி வந்திருக்க மாட்டனா? ..ஏங்க கால் டாக்சியில் வந்தீங்க? எனக்கு போன் பண்ணி இருந்தா சுந்தரம் அண்ணன ஏர்போர்ட்டுக்கு அனுப்பி இருப்பேனே” என்றாள் மகா படபடப்பாக கண்கலங்க.
தன்னுடைய சென்டிமெண்ட் ட்ராமா ஒர்க்கவுட் ஆவதைப் பார்த்து மனதுக்குள் சந்தோஷபட்டுக் கொண்டான் ராம்குமார்.
“இரு.. இரு மகா! ஏன் இப்படி அவசரப்படுற.. நான் ஒன்னொன்னா சொல்றேன். நீ அப்பா திதின்னு திடீர்னு போன் பண்ணினதும் நான் டென்ஷன் ஆயிட்டேன். சுந்தரைப் பார்த்துக்க சொல்லிட்டு வந்திடலாம்னு நெனச்சேன். கிளையண்ட்ஸ்ஸைப் பார்த்து விஷயத்தை சொல்றதுக்காக போற வழியில ஒரு சின்ன ஆக்சிடண்ட்”
“என்னங்க சின்ன ஆக்சிடென்ட்னு சொல்றீங்க! இவ்வளவு அடிபட்டிருக்கு… நீங்க உடனே போன் பண்ணி எனக்கு தகவல் சொல்ல வேண்டியது தானே”.
“பதறாத மகா ..உடனே என்ன ஆஸ்பத்திரியில் சேர்த்திட்டாங்க ..ஆனா ஒரு நாள் முழுக்க என்னால ஒண்ணுமே செய்ய முடியல… தலையில அடிபட்டிருந்ததால ஸ்கேன் எடுத்துப் பார்த்தாங்க. உனக்கு போன் பண்ணனும்னா என்னுடைய போன் கார் டேஷ்போர்டில் மாட்டிகிச்சு. போன் சுவிட்ச் ஆப் ஆயிடுச்சு…வெளிகாயம் தான் வேற ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு சொல்லிட்டாங்க. பெங்களூர் பிரான்ச் மேனேஜர் கூட இருந்து கவனிச்சுக்கிட்டாரு. அதனால இதைச் சொல்லி உன்னை பயமுறுத்த வேண்டாம்னு தான் உன் கிட்ட சொல்லல”
“என்னோட ஃப்ரெண்ட் டாக்டர். ஆனந்த் இல்ல. அவன் பிளைட்ல என் கூட வந்தான். அவன் வந்து என்னை கார்ல வீட்ல டிராப் பண்ணிடறேன்னு சொன்னான். அதனாலதான் நான் சுந்தரத்தை வரச்சொல்லி சொல்லல ..பாதி தூரம் வரும்போது அவனுடைய கார் மக்கர் பண்ணிடுச்சு. அப்புறம் கால் டாக்ஸி பிடிச்சு நான் இங்கே வந்துட்டேன் அவன் வீட்டுக்குப் போறான் “
“சரி.. சரி.. வந்து கொஞ்சநேரம் படுத்து ரெஸ்ட் எடுங்க. இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கீங்க! தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு. மாமா தான் உங்கள காப்பாத்தி இருக்காங்க .அடுத்த பட்ஷத்தில நல்லபடியா திதி கொடுத்துடுவோம். நான் உங்களுக்கு குடிக்கிறதுக்கு சூடா ஏதாவது எடுத்துட்டு வரேன் ..தங்கம்.. பெட்டிய கொண்டு ஐயா ரூம்ல வை..” என்று சொன்னவள் ராம்மை பெட்ரூமுக்கு அழைத்துச் சென்று..படுக்க வைத்தாள். “நான் போய் ஏதாவது சாப்பிட எடுத்துட்டு வரேன்” என்று அவள் கிழே இறங்கினாள்..
ராம் அவசரமாக போனை எடுத்து டயல் செய்தான். போனை எடுத்த வந்தனா “ஹாய் டார்லிங்! என்ன வீட்டுக்கு போய் சேர்ந்தாச்சா ..உன் பொண்டாட்டிய எப்படி சமாளிச்ச…”
“எனக்கு ஆக்சிடெண்ட் ஆகி, அடிபட்டுருச்சின்னு ரெண்டு கட்டைப் போட்டுட்டு வந்து சீனைப் போட்டேன். அப்படியே மகா நம்பிட்டா… பாவம் கண்ணீர் விட்டுட்டா… இப்ப சாப்பிடுறதுக்கு ஏதாவது எடுத்துட்டு வரேன்னு போயிருக்கா! உன் கதை என்னாச்சு? என்ன பண்ணிக்கிட்டிருக்க? “
“நான் K.S. சார் பட சூட்டிங்கில் தான் இருக்கேன். சார் ரொம்ப கோவிச்சுக்கிட்டாரு. நான் சூட்டிங்கை கேன்சல் பண்ணதுக்கு கார்த்திக் வேற மொறைச்சிகிட்டிருக்கான். கிடக்கிறாங்க விடு! அதபத்தி எல்லாம் கவலைப்படலை. இரண்டு நாள் செம ஜாலியா இருந்ததில்ல ராம்.”
“ஆமாம் எனக்கு சென்னை வரவே மனசில்லை ..இரண்டு நாளும் 2 நிமிஷமா பறந்து போச்சு. இனி இந்த மக்கு மகா மூஞ்சிய பார்த்துக்கிட்டு எரிச்சலா வருது …”
“சீக்கிரம் ஏதாவது ஏற்பாடு பண்ணு ராம்! ரொம்ப நாள் இதை இழுத்துட்டு இருக்க முடியாது. அவளை கழட்டி விட்டாத் தான் நம்ம லைஃப் நிம்மதியா இருக்கும்.”
“கண்டிப்பா வந்தனா! ஏதாவது பிளான் பண்ணி …அவள கழட்டி விட்டுடறேன். அதுவரைக்கும் நீ பொறுமையா இரு ..”
“அடுத்தாப்பல எப்ப வருவ ராம்!”
“என்னடா இது.. இப்பதானே வந்துட்டு போயிருக்கேன். இன்னைக்கு தான் இங்க வந்து சேர்ந்திருக்கேன். அதுக்குள்ள எப்ப வரேன்னு கேக்குறியே? எப்படியும் ஒரு வாரத்துல பார்க்க வருவேன். என்னால உன்ன பாக்காம ரொம்ப நாள் இருக்க முடியாது ஹனி.. மகா வந்துட்டா.. நான் அப்புறமா உன் கிட்ட பேசுறேன். லைனை கட் பண்றேன் …நைட் மெசேஜ் பண்றேன் டார்லிங்”
“மகா மகா மகா… ஏன்டா இப்படி பயந்து சாகிற …அவ என்ன செஞ்சுடு வா உன்ன. இப்பவே அந்த மகா கழுத்தை நெரிச்சுக் கொல்லனும்னு வெறி வருது..” என்று அந்தபக்கம் வந்தனா கத்துவது அவன் காதில் விழ.. டென்ஷனாகி, “நைட் பேசுறேன் சார்” என்று போனை வைத்தான். வந்தனா கையிலிருந்த காப்பிக் கோப்பையை தரையில் ஓங்கி அடித்தாள்.
“என்னங்க ரெஸ்ட் எடுக்காம அதுக்குள்ள யார்கிட்ட போன்ல பேசிகிட்டு இருக்கீங்க …. பிஸினஸ்…பிஸினஸ்.. எப்பபாரு அதைப் பத்தியே யோசிச்சுக்கிட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்கன்னு சொல்லிட்டுத் தானே போனேன்” என்று உரிமையோடு கோபித்துக் கொண்டாள்.
“மிக முக்கியமான ஆபீஸ் மீட்டிங் …கிளையண்ட்ஸ் வந்திருக்காங்கன்னு சொன்னேன்ல மகா. அப்படியே போட்டுட்டு வந்துட்டேன். அதனால அது தொடர்பாக நிறைய வேலை பாக்கியிருக்கு. அதைத்தான் ஆபிஸ்கு போன் பண்ணி சொல்லிகிட்டிருந்தேன்”
“சரிங்க! நீங்க டைனிங் டேபிளுக்கு அலைய வேண்டாம். நான் இங்கேயே உங்களுக்கு சாப்பாடு எடுத்திட்டு வந்துட்டேன். நீங்க சாப்பிட்டுட்டு மூடி வைங்க. நான் வந்து பிளோட்டை எடுத்துட்டுப் போறேன்” என்றாள் மகா.
அப்ப்ப்பா இவ ஒரு இம்சை… எப்ப பாரு ஒவ்வொரு விஷயத்துக்கும் இப்படி செய்யுங்க அப்படி செய்யுங்கன்னு.. என்று மனதுக்குள் கருவிக் கொண்டான் ராம்.
நன்றாகப் பேசிக் கொண்டிருந்த வந்தனா கத்தி விட்டு போனை வைத்தது அவனை பெரிதும் பாதித்தது. அவளை எப்படி சமாதானப்படுத்த என்று யோசனை ஓடியது .மகா பேரை கேட்டாலே வந்தனா மூட் அவுட் ஆகி விடுகிறாள் .
சீக்கிரம் மகாவ தொலைச்சு தலைமுழுகனும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான். சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தான் அவன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் வருமா?
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings