“உறங்குவது போல் நடித்தேன்
உனது ரகசிய நாடகத்தை ரசிக்க”
இந்த ஹைக்கூ கவிதை, இக்கதை தொகுப்பில் உள்ள ஒரு கதையின் ஊடே வருவது. ஹைக்கூ மட்டுமல்ல, கதைகளும் வாசிப்பனுபவத்தை இனிமையாக்கும், மெல்லிய காதல் இழையோடும், சுவாரஷ்யமான தொகுப்பு தான்
இந்த சிறுகதைகள் அனைத்தும், பிரபல இணையப் பத்திரிக்கைகளில் பிரசுரிக்கப்பட்டு, பலராலும் விரும்பி வாசிக்கப்பட்டது. அதை மின் புத்தக (ebook) வடிவில் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
உங்களில் பலரும் ஏற்கனவே இதை வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். வாசித்து மின்னஞ்சல் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்த அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்