in ,

கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 19) – ஜெயலக்ஷ்மி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

”இப்டி முதலாளிகிட்ட பேச்சு வார்த்த நடத்தி, தொழிலாளிகளுக்கு கிடைக்க வேண்டிய மினிமம் வேஜஸ வாங்கித் தராம அவங்க வயித்ல  அடிக்றது, பாண்டட் லேபர், சைல்ட் லேபர்லல்லாம் காம்ரமைஸ் பண்ணிக்கிட்டு, அந்தக் குழந்தைகளோட எதிர்காலத்த அழிக்கணும்னு நெனக்றதெல்லாம், நிச்சயம் நம்ம வாழ்க்கைல ரிஃப்ளக்ட் ஆகும். நாம நிச்சயம் நல்லா இருக்க மாட்டோம். எத்ன பேருக்கு இப்டி ரெஸ்க்யூ பண்ற அதிகாரம் இருக்கு? நெறய சோஷியல் வொர்க்கர்ஸ் எந்த எக்ஸ்பெக்டேஷன்ஸூம் இல்லாம அவங்க காச செலவு பண்ணிட்டு வந்து பண்ணனும்னு நெனைக்கிறாங்க. நாம இல்லாம அவங்களால தனியா பண்ண முடியுமா?. நாம இதுக்காகத்தானே சம்பளம் வாங்கறோம். வாங்கற சம்பளத்துக்கு கொஞ்சமாவது உண்மையா இருக்க வேண்டாமா? அப்படி பண்ணலன்னா இந்த டிபார்ட்மெண்ட் எதுக்கு?”  என்று பொரிந்து தள்ளினாள்.

”கரெக்ட்தான் மேடம். இனிமே நாங்க இந்த விஷயத்துல காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டோம் மேடம்” என்றனர்.

ஏற்கெனவே நான்கு வருடங்களுக்கு முன்பு கொத்தடிமைகள் மீட்கப்பட்ட பகுதியில் மீண்டும் ஆய்வு செய்யுமாறு அரசாங்கத்திடமிருந்து உத்தரவு வந்திருந்தது. அப்பகுதி ஆய்வாளரை ஆய்வு செய்யச் சொன்னபோது, தற்போது அப்பகுதியில் கொத்தடிமைகள் எவரும் இல்லையென அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.  

எனினும், ஃபிப்ரவரி ஒன்பது கொத்தடிமை ஒழிப்பு தினத்தை சும்மா பெயருக்கு கொண்டாட விரும்பவில்லை நித்யா.  அதற்கு முன்னர் கொத்தடிமை தொழிலாளர்களாக சிக்கிக் கொண்டவர்களை மீட்டெடுத்துவிட்டு சந்தோஷமாகக் கொண்டாட விரும்பினாள்.

சமூக சேவகரைத் தொடர்பு கொண்டாள்.

”பாண்டட் லேபர் அபாலிஷன் டே’க்கு முன்னாடி பாண்டட் லேபர்ஸ் ரெஸ்க்யூ பண்ணியே ஆகனும்னு சொன்னேனே, ஏதாவது இன்பர்மேஷன்ஸ் கிடைச்சுதா, ஸர்?”

”இல்லைங்க மேடம், ட்ரை பண்ணிட்டுதான் இருக்கேன். அதர் டிஸ்ட்ரிக்ட்ஸ்லதான் இருக்கு”

”அந்த இன்ஃபர்மேஷன்ஸும் கொடுங்க. கன்சர்ன்ட் ஆபிஸர்ஸ்க்கு ஃபார்வேட் பண்றேன். நாம ஒண்ணு பண்ணலாம். போர் இயர்ஸ் முன்னாடி பாண்டட் லேபர்ஸ் ரெஸ்க்யூ பண்ண இடத்திலேயே பார்த்தா என்ன?”

”பார்க்கலாம் மேடம்” என்றார்.

நகை செய்யும் பட்டறைகளில் கூட்டாய்வு செய்ய புறப்பட்டுச் சென்றனர்.

கோட்டாட்சியருக்கு வரதட்சிணை சாவு குறித்த விசாரணை இருந்ததால், குழுவினர் அவர் வருவதற்காக காத்திருந்தனர். குழுவினர் தெருவில் காத்திருப்பதை அறிந்து வேக வேகமாக வந்து சேர்ந்தார் அவர்.

ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினர்.  ஒன்றையும் கண்டறிய முடியவில்லை.

“ஏம்மா இப்படி என் நேரத்தை வீணாக்குறீங்களே“ என்றார் கோட்டாட்சியர் அவருக்கிருந்த வேலைப்பளுவில்.

“நகை செய்யற இடம் எங்கிருக்கும்?”” என்று கேட்டாள்.

“அந்த சந்துக்குள்ள இருக்கு, மேடம்“ என்றார் ஒரு காவலர்.

ஈஸ்ட்மென் கலர்ல அடுக்கடுக்கான நெருக்கமான கட்டிடங்களுக்கிடையில் ஒற்றை ஆள் நடந்து செல்வது போன்ற சந்தில் நுழைந்து சென்றனர்.

“மேடம், இந்த கட்டிடத்ல மாடில இருக்கு“ என்றார் சமூக சேவகர்.

“எப்படி கண்டுபிடிச்சீங்க?“

“இப்பதான் ஒரு சின்னப்பையன் டீ வாங்கிட்டு போனான்.  அவன ஃபாலோ பண்ணோம், மேடம்“ என்றார்.

மேலேறிச் சென்றனர்.  அழுக்கும், பாக்கு கறையும் படிந்த படிகள்.

“கைப்பிடில கை வைக்காதீங்க மேடம், தூசியா இருக்கு“ என்றார் சமூக சேவகர்.

பாழடைந்த இருண்ட குகைக்குள் நுழைவது போல் இருந்தது, கழிவறையின் நாற்றம் குடலைப் புரட்டியது. 

முதல் மாடியிலிருந்த வீட்டில் இரண்டு பேர் படுத்திருந்தனர்.

            “நகை செய்ற  இடம் எங்கிருக்கு? “

            “அது மேல இருக்கு“

            “நீங்க எங்க வேல செய்றீங்க?“

            “நாங்க பக்கத்து பில்டிங்ல வேலை செய்றோம்“

            “மேலே செல்லும் படிக்கட்டில் இரும்பு கேட் போட்டு பூட்டப்பட்டிருந்தது.

“அத திறக்க சொல்லுங்க“ என்றாள் நித்யா. எங்களுக்கு தெரியாது அது வேற ஓனர். பூட்டிட்டு போயிருப்பாரு“ என்றார்கள்.

            ஃபோன் நம்பர் எதுவும் இல்லையா? “

            “இல்லை“என்றார்கள்.

            ஒரு ஹாலில் பாய்கள் விரிக்கப்பட்டு இரண்டு வரிசையாக சிறிய சிறிய இடைவெளியில் மரப்பலகையிலான பணிமனைகள் வைக்கப்பட்டிருந்தன.  தரையில் சம்மனமிட்டு அமர்ந்துக்கொண்டு பணிமனையின் மீது ஆளுக்கொரு நகையை வைத்துக் கொண்டு ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.  தங்க நகையை சூடுபடுத்துவதற்கான எரிவாயு இரப்பர் குழாய்கள் இரு வரிசைகளுக்கும் நடுவில் கிடந்தன.

            பின்புற வரிசையில் ஒரு சிறுவன் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தான்.

            “இதர் ஆவோ“, “துமாரா நாம் கியா?“, “உமர் கித்னா“ என தனக்கு தெரிந்த அரை குறை ஹிந்தியில் விசாரித்தாள் நித்யா.

            “தனது வயது 15 என தெரிவித்தான் அப்பையன்.

            “சேலரி கித்னா?“ என்று கேட்டாள்.

            “வேலை செய்வதற்கு தக்கவாறு கிடைக்கும்“ என்றான் அதற்கு மேல் அவளது ஹிந்தி உதவாததால் சமூக சேவகரை அழைத்து மொழி பெயர்க்கச் சொன்னாள்.

            “ ஒரு  மாதத்திற்கு  சுமாராக எவ்வளவு சம்பளம் கிடைக்கும், எவ்வளவு வேலை செய்வாய் என கேட்கப்பட்டதற்கு, “மூவாயிரம் ரூபாய்“ கிடைக்கும் என்றான்.  “எவ்வளவு நேரம் வேலை செய்வாய்?  என்றதற்கு காலை 8 மணியிலிருந்து இரவு பதினொரு மணி வரை வேலை செய்வதாக கூறினான். 

            “வெறும் மூவாயிரமா? அட்வான்ஸ் ஏதாவது வாங்கியிருக்கானானு கேளுங்க என்றாள்.

            ஊரிலிருந்து கூட்டி வரும்போது ஐந்தாயிரம் ரூபாய் தந்ததாகக் கூறினான். 

            “அடப்பாவி வெறும் ஐந்தாயிரம் அட்வான்ஸ். மூவாயிரம் சம்பளம். 15 மணி நேரம் வேலை வாங்குறாங்களே! “ என்றாள் நித்யா.

            “பாண்டட்  லேபர்க்கான எல்லா க்ரைடீரியாவும் இருக்கே“ என்றார் கோட்டாட்சியர்.

            “எஸ், ஸார்“ என்றாள் நித்யா.

            “உரிமையாளரைப் பார்த்து ஏன் இப்படி சின்னப்பையன வேலைக்கு வச்சிருக்கீங்க.  மினிமம் வேஜ்ஸும் கொடுக்கல!” என்று கேட்டாள் நித்யா.

            “அவர் என் வைஃப்போட தம்பி“ என்றார் உரிமையாளர்.

            “சொந்தக் காரங்கனா, பாண்டட் லேபர் இல்லைனு சட்டத்தில எங்கும் சொல்லலையே“ என்றார் சமூக சேவகர்.

            “உங்க வைஃப்போட ஆதார் கார்ட காட்டுங்க“ என்று அவரிடம் கேட்டபடியே, அந்தச் சிறுவனின் ஆதாரையும் கேட்டாள் நித்யா.

            அவரது அலைபேசியில் தனது மனைவியின் ஆதாரைக் காண்பித்தார் உரிமையாளர். 

            அந்தப் பையன் தனது கால்சட்டைப் பையிலிருந்து ஆதாரை எடுத்து காண்பித்தான்.

            அவரது மனைவியின் தந்தை பெயரும், இந்த பையனின் தந்தை பெயரும் வேறு வேறாக இருந்தது. நல்லவேளை அவர் மனைவியின் ஆதாரில் கணவர் பெயரைக் குறிப்பிடாமல் தந்தையின் பெயரைக் குறிப்பிட்டிருந்தனர்.

            “ஏன் சார் உங்க மாமனார் பேர் வேற, இவனோட அப்பா பேர் வேற, எப்படி உங்களுக்கு மச்சினன் ஆனான்? “ என்றாள் நித்யா.

            “ரிலேடிவ்ஸ்“என்றார் அவர்.

            “அந்த ரிலேஷன்ஷிப் எல்லாம் ஃபேமிலி கணக்கில வராது சார். மேலும், அட்வான்ஸ் வேற கொடுத்து கூட்டிட்டு வந்திருக்கீங்க.  கெமிக்கல்ஸ், இன்ஃப்ளேமபிள் கேஸ் யூஸ் பண்ற ஹசார்டஸ் என்வைரான்மெண்ட். சைல்ட் லேபர், பாண்டட் லேபர் ரெண்டுமே வரும்“ என்றாள் நித்யா.

            அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினார்கள்.

“மேடம்,  இந்த பில்டிங்ல நிறைய பசங்க இருக்காங்க!“ என்றார் இன்னொரு சமூக சேவகர்.

            அதே தெருவின் மூலையிலிருந்த அந்த கட்டிடத்தில் நுழைந்து மாடியில் ஏறினார்கள். கதவு உட்புறம் தாழிட்டிருந்தது. 

            மறுபடியும்…. ரிபீட்டு……..

            தட்டல் – மிரட்டல் – மெல்லத் திறந்தது கதவு! உள்ளே சென்றால், அதைவிட அதிர்ச்சி காத்திருந்தது.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உயிரைத் தந்துவிடு (அத்தியாயம் 7) – தி.வள்ளி, திருநெல்வேலி.

    கண்களில் மின்னிடும் மின்னல் (மின்னல் 20) – ஜெயலக்ஷ்மி