sahanamag.com
மற்றவை

கண்டாமணி… (தி. ஜானகிராமன் சிறுகதை விமர்சனம்) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

டிசம்பர் 2021 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

தி. ஜானகிராமன் அவர்கள் எழுதிய ‘கண்டாமணி’ சிறுகதையை  சமீபத்தில் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. மிக அருமையா நெகழ்வான கதை, சமீபத்தில் படித்ததில் மனதை மிகவும் பாதித்த கதையும் இதுவே

தி. ஜானகிராமன் அவர்களின் ஒவ்வொரு படைப்பும் ஒரு பொக்கிஷம் தான். இச்சிறுகதை ‘கண்டாமணி’, அவர் எண்பதுகளில் கல்கி தீபாவளி மலருக்கு எழுதியது

கதையின் நாயகன் மார்க்கம் மற்றும் அவர் மனைவி சிறிய அளவில் சமையல் செய்து, வருபவர்களுக்கு உணவளித்து வருகின்றனர். ஆத்மார்த்தமாக அதை அக்கறையாக செய்து வருகின்றார்கள்.

அவர்கள் அறியாமல் அவர்கள் செய்த பிழையாய், குழம்பில் பாம்புகுஞ்சு  ஒன்று விழுந்து விட, அதை கவனிக்காமல், ஒரு வயதானவருக்கு உணவிட்டு விடுகிறார் மார்க்கம்.

பெரியவர் சாப்பிட்டு விட்டு சென்ற பின்பு கணவன் மனைவி இருவரும் அதை கவனிக்கின்றனர். இருவர்  மனமும் பதைபதைக்கிறது.

இறைவனை வேண்டுகின்றனர். தாங்கள் செய்த பிழைக்கு மாற்றாக ஒரு பெரிய கண்டாமணியை வாங்கி கோவிலில் தொங்கவிட்டு விடுவதாக வேண்டிக் கொள்கின்றனர்.

விடிந்ததும் வந்த செய்தி, அவர்கள் வீட்டில் இரவு சாப்பிட்ட அந்தப் பெரியவர் காலமாகி விட்டார் என்பது. மாரடைப்பில் இறந்ததாக மருத்துவர் சொல்ல, விஷயம் அத்துடன் முடிகிறது. கடவுள் காப்பாற்றியதாக நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் மார்க்கம்

ஒரே மாதத்தில் அவர்கள் வேண்டிக் கொண்டபடி, செய்யச் சொன்ன கண்டாமணி தயாராகி விட்டது. ஒன்றரை முழ நீளம்.. தூக்க முடியாத கனம்… கம்பீரம், அழகு… முற்றத்தில் மணியை வைத்து விட்டுப் போக…பார்ப்பவர்கள் எல்லாம் அதன் அழகை சிலாகிக்கின்றனர்.

அந்த மணி அங்கிருப்பதை தாங்க முடியாமல், கோவிலில் சமர்ப்பிக்கின்றனர். அந்த கோவில் மணி ‘டாண் டாண்’ என்று அடிக்கும் போது ஊரே மார்க்கத்தைப் பெருமையாகப் பேசுகிறது. ஆனால் குற்ற உணர்வில் தவிக்கின்றார் மார்க்கம்.

அர்த்தஜாம பூஜையின் போது அடிக்கப்படும் மணியோசை, அவர் தூக்கத்தை தொலைக்கிறது. நிலைகொள்ளாமல் தவிக்க, சிறிய வெள்ளி மணியை செய்து வைத்துவிட்டு, அந்த கண்டாமணியை திரும்ப எடுத்துக் கொள்ளலாமாவெனக் கேட்கிறார் கோவிலில்.

ஊரார் எல்லோரும் சிரிக்கின்றனர். இவ்விதம் செல்கிறது கதை.. முடிவு என்ன?

தி.ஜானகிராமன் அவர்கள் கதையை கொண்டு செல்லும் விதமும், நடையும், பிரமாதம். அவருடைய பாணியில் அக்கதை மனசாட்சி, ஒருவனை எந்த அளவு சித்திரவதை பண்ணும் என்பதை அழகாக எடுத்துரைக்கிறது

சாட்சியே இல்லாமல் போனாலும், மனசாட்சியிலிருந்து ஒருவன் தப்பிக்க முடியாது என்பதே அவர் கதை கூறும் உண்மை. தெரியாமல் செய்த பிழையும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை தெளிவாக விளக்குகிறது

ஒரு சிறுகதையில் இவ்வளவு உணர்ச்சி பிரவாகம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது இக்கதை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீள எனக்கு பல மணி நேரம் ஆனது

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!