தேவையான பொருட்கள்
கம்பு மாவு – 3/4 கப்
கோதுமை மாவு – 1/4 கப்
வெண்ணெய் -1/2 கப்
பொடித்த சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் – 1/2 டீ ஸ்பூன்
ஓமம் – 2 ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை
கம்பு மாவு மற்றும்கோதுமை மாவை சலிக்கவும்
வெண்ணெய் மற்றும் பொடித்த சர்க்கரையை நன்றாக கிரீம் பதம் வரும் வரை கலக்கவும்
பிறகு அதில் வெண்ணிலா எசன்ஸை சேர்க்கவும்
பின் ஓமம் , சலித்த மாவு இரண்டையும் அதில் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்
Ovenஐ 180 டிகிரியில் 10 நிமிடம் Preheat செய்ய வேண்டும்
மாவை குக்கீ கட்டர் அல்லது பாட்டில் மூடி கொண்டு விருப்பமான ஷேப்பில் கட் செய்து, Preheat செய்த Ovenல் 25 நிமிடம் Bake செய்தால் கம்பு ஓமம் பிஸ்கட் ரெடி
இந்த பிஸ்கட் இனிப்பு குறைவாக, ஓமம் வாசனை தூக்கலாக அருமையாக இருக்கும்
“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
எழுத்தாளர் சஹானா கோவிந்தின் நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇
டேஸ்டியான கம்பு ஓமம் பிஸ்கட் செய்முறை சூப்பர். செய்து பார்க்கிறேன்.
நன்றி