மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
உயிர்க்காற்றை அடைத்து
விற்கிறாள் பலூனை…
உயிர்வாழ கையளவு
பருக்கை கிடைக்குமென்று..
வறுமையின் வண்ணத்தை
தீட்டுகின்றன
விலைபோகாத பல
வண்ணப் பலூன்கள்…
விற்று தீராத
பலூன்களோ
விலை பேசுகின்றன
இவளின் எதிர்காலத்தை…
சுருங்கி விரியும்
பலூன்களின் வயிற்றை
நிரப்புகிறது
இவளின் மூச்சுக்காற்று..
மூச்சுக்காற்றில் கர்ப்பமான
வண்ண பலூன்களுடன்
முரண்படுகிறது
இவளின்
காய்ந்த வயிறு …
பல வண்ண
பலூன்களை போலவே
காற்றில் பறக்கவிடப்படுகின்றன
இவளின் வண்ணக்கனவுகளும்..
கண்சிமிட்டும் பலூன்களை கண்டுகொள்ளாமல்
கடந்து செல்கிறது
மக்கள் கூட்டம்
இவளின்
ஒட்டிய வயிறு
எழுதிய “வறுமை”
கவிதையினை வாசிக்காமலே…!
(முற்றும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇