மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் – 1
பாசிப்பருப்பு – 100 கிராம்
வெல்லம் – 150 கிராம்
ஏலக்காய் – 3
முந்திரிப்பருப்பு – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
செய்முறை:
- ஆப்பிளை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- இரண்டு முறை பாசிப்பருப்பை நன்கு கழுவிய பின்னர் குக்கரில் போடவும்
- நறுக்கி வைத்திருக்கும் ஆப்பிளையும் பாசிப்பருப்புடன் சேர்த்து மிதமான சூட்டில் மூன்று விசில் வரும் வரை காத்திருக்கவும்.
- சூடாறியதும் வெந்திருக்கும் பாசிப்பருப்பையும் ஆப்பிளையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- வெல்லத்தை நன்கு இடித்து சுடு தண்ணீரில் சேர்த்து கொதிக்க விட்டு வெல்லப் பாகை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- அதன் பின்னர் கனமான கடாயில் நெய் ஊற்றி அரைத்து எடுத்து வைத்திருக்கும் பாசிப்பருப்பு ஆப்பிளை அதில் சேர்த்து மிதமான சூட்டில் விடாமல் கிண்டிக் கொண்டே இருக்கவும்
- சிறிது சிறிதாக பாகை ஊற்றிக் கொண்டே கட்டி விழாமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
- அல்வா பதம் வரும் வரை தொடர்ந்து விடாமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்
- உங்களுக்கு தேவையான அளவு நெய்யையும் அவ்வப்போது சேர்த்து ஊற்றலாம்
- ஆப்பிள் பர்ஃபியை இறக்குவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் ஏலக்காயை பொடியாக்கி சேர்த்து கொள்ளவும்
- ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஆப்பிள் பர்ஃபியை கொட்டி சமன் செய்து விடவும்
- சூடு ஆறிய பின்னர் உங்களுக்கு விருப்பான வடிவில் கத்தியால் மார்க் செய்து துண்டு துண்டாக வெட்டி வேறொரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும். அதன் மீது முந்திரிப்பருப்பை வைத்து அழகு படுத்தி கொள்ளவும்.
அவ்வளவு தான், சத்தான சுவையான மற்றும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஆப்பிள் பர்ஃபி தயார்.
நீங்களும் முயற்சி செய்து மறக்காமல் உங்களுடைய கமெண்ட்ஸை கீழே பதிவு செய்யவும். மீண்டும் அடுத்த ஒரு அற்புதமான டிஸ்ஸோடு உங்களுடன் சந்திக்கிறேன்.
(முற்றும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
அருமை டா. சத்தான பர்பி. செய்முறை விளக்கமும் அருமை.