2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
லதா, “ இல்லை சார் இந்த பெண் கொலையுண்ட சுசிலாதான்னு நினைக்கிறேன்”,
ஒரு நிமிடம் பைலை டேபிளில் விசிறி விட்டு லதாவின் முகத்தை பார்த்தான் தினேஷ், முகம் சிவந்தது,” ஸ்டுபிட், இடியட் கொண்டு வா அந்த ரிகார்டிங்கை யூ ஃபூல்” பயந்து வெளியே ஓடினாள் லதா.
அடுத்த 10 நிமிடத்தில் அந்த ரிகார்ட் பண்ணின குரலை பல முறை கேட்டாச்சு, மனப்பாடமே ஆச்சு தினேஷுக்கு. பின்னணியில் ஏதாவது ரயில் சத்தம், மெஷின் சத்தம், மலையாளம் இல்லை ஹிந்தி பேசற ரவுடி சத்தம், மார்க்கெட் இரைச்சல் ம்ஹூம் எதையும் காணோம்.இது என்ன பிரயோஜனம் தெரியலை, இதுக்கா லதாவை திட்டினோம்.
“லதா உனக்கு ஏதாவது வித்யாசமா கேட்டதா?”
“இல்லை பாஸ் ஆனா ஒரு பறவை சத்தம் விட்டு விட்டு வினோதமா கேக்குது, பக்கத்துல ஏதாவது மரம் இருக்கலாம்.”
தினேஷ் 11வது தடவையா திரும்ப அந்த ரிகார்டிங் கேட்டான்,
ஆமாம் மிக லேசாக லதா சொன்ன பறவை சத்தம் இது காக்காவோ குருவியோ இல்லையே, மைனாவா ஆனா அதுக்கு என்ன காச்சலா ஏன் இப்படி வித்யாசமா விட்டு விட்டு கத்தி சட்னு நிறுத்துது.சரி பறவை தொண்டைல ஏதாவது சிக்கி கத்துதா இருக்கும்.ஃபோன் ஜன்னல் பக்கத்துல இருக்கலாம், ஜன்னலுக்கு வெளியே பெரிய மரம் இருக்கலாம், அதில் இந்த தொண்டை சரியில்லாத பறவை.
சீ நேரத்தை வீணாக்கறோம்னு தெரியுது. சரி லதா, பாண்டிராஜை வரச்சொல்லு.
10 நிமிஷத்துக்கு அப்பறம் பாண்டிராஜ் தினேஷ் முன்னால நின்னான்.
தினேஷ் அவன் கிட்ட அந்த டெலிஃபோன் ரிகார்டிங்கை கொடுத்து, “ ஏ பாண்டி இதை கேளு ஏதாவது வித்யாசமா இருந்தா ஒரு பேப்பர்ல எழுதி டேபிள் மேல வை, நான் கொஞ்சம் ஆர்மீனியன் தெரு வரை போய்ட்டு வரேன்.”
பாண்டி, “என்ன பாஸ் முருகன் இட்லி கடையா?”
தினேஷ் சிரித்துக் கொண்டே “சரியான சி.ஐ.டி மூக்குடா உனக்கு, உக்காந்து சொன்னதை செய் இப்ப வரேன்”.
தினேஷுக்கு பாண்டிராஜை பிடிக்கும்,25 வயது பி.எஸ்.சி பிசிக்ஸ் கிராஜுவேட். சுறு சுறுப்பக்கு மறு பெயர், வெட்டுடான்னா , வெட்டி கட்டி கொண்டு வந்துருவான். கிரைம் நாவல் பூரா படிச்சி கரைச்சு குடிச்சவன், தமிழ்வாணனோட ‘சங்கர் லாலா’மாறுவான், சுஜாதாவோட ‘கணேஷா’ இருப்பான், அகதா கிரிஸ்டியோட ‘ஹெர்க்யூல் பாய்ரட்டா’ பல நாள்.
அவனை பத்தி ஸ்நேகமாய் ஸ்லாகித்தவாறு , முருகன் இட்லி கடையில் யூசுவல் இருக்கையில் அமர்ந்து தன் ஃபேவரைட் பொடி தோசை கெட்டி சட்னியை சம்ஹாரம் செய்தான் தினேஷ்., ஒரு ஸ்டிராங் காபி நாவின் ருசி நரம்புகளை வருடிச் சென்றது.
ஒரு திருப்தி புன்னகையோட, தாராள டிப்ஸ் , எல்லா வெயிட்டருக்கு தெரியும் ஹோட்டல் ஆரம்பிச்சதிலிருந்து ரெகுலரா வரும் இந்த ஜென்டில் மேனை.
ஆபிஸை அடைந்த தினேஷ் லதாவை பாத்து, “ என்ன லதா ஏதாவது ஃபோன் வந்ததா, சொல்ல மறந்துடப் போறே” விஷமமாய் குத்திக் காட்டிக் கொண்டே தன் இருக்கையை அடைந்தான்.
அங்கே பாண்டி ஒரு பேப்பர்பேட்ல எழுதிட்டு உட்கார்ந்திருந்தான்.
“என்னடா ஹெர்க்யுல் பாய்ராட் ஏதாவது தோண்டினயா டேப்ல.?” ,
“இல்லை பாஸ் ஒண்ணும் விசேஷமா, அந்த குக்கு கிளாக் சத்தம் வீட்டை காட்டலாம், அப்பானு கூப்படறா அவ வீட்லயே கூட சம்பவம் நடந்திருக்கலாம்” ,
“ டே டே அது குக்கு கடிகார சத்தமாடா? எனக்கு தோணலையே, ஏதோ தொண்டை கட்டின பறவை சத்தமா கேட்டதே,ஆமாம் அப்பானு கூப்படறா இல்லை?, கங்ராட்ஸ் பாண்டி நீ சங்கர்லால்தான்.”
பாண்டி கொஞ்சம் வெட்க புன்முறுவலுடன் “ஸ்விஸ் கடிகாரம் சரியா சாவி இல்லைன்னா தொண்டை கட்டின மாதிரி கேக்கும், மும்பைல என் மாமா வீட்ல இந்த சத்தம் கேட்டிருக்கேன்”,
“சரி சாயந்தரம் அந்த சுந்தரேசய்யர் வீட்டுக்கு போலாம் அட்ரஸ் தேடி வை.”
மயிலாப்பூரின் சுறு சுறுப்பான கச்சேரித் தெருவில் இன்னும் கூட பழைய அக்கிரகார வீடுகள் திண்ணையோடு இருக்கத்தான் செய்கின்றன.
புது நம்பர் 18, பழைய நம்பர் 45 இந்த வீடுதான் திண்ணையை ஒட்டி பெயர் பலகை கொஞ்சம் பல்லை இளித்தது. ஜோதிட கலா நிதி, சுந்தரேச ஐய்யர்.
ஆனால் இப்ப வீடு துக்கம் பூசி இருந்தது, அழைப்பு மணியை அழுத்தினான் பாண்டி, பின்னால் தினேஷ் சக்ரபர்த்தி.
பட்டென்று கதவு திறந்தது ஒரு 50 வயது பிராமண பெண். கதவு திறந்தவுடன் எதிர் சுவரிலிருந்து கடிகாரத்துக்கு வெளியே வந்த குக்கு பறவை 6 முறை இனிமையாக கூவி விட்டு சட்டென மறைந்தது.
பாண்டியை பாத்தான் தினேஷ்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings