என்னோடு தான் உன் ஒவ்வொரு நாளும் நீ கண் விழித்ததும் பார்க்கும் கடவுள் நான் தான் உன் உறவும் நட்பும் என்னோடு தான் உன் உணவுப் பொழுதுகளும் என்னோடு தான் உன் பொழுது போக்கும் என்னோடு தான் உன் பயணப் பொழுதுகளும் என்னோடு தான் உன் தேடல் என்னோடு தான் உன் இசை மழை என்னோடு தான் உன் வசை மழையும் என்னோடு தான் உன் தூங்கா இரவுகள் என்னோடு தான் உன் சந்தோஷம், அழுகை,கோபம், துக்கம், எரிச்சல், ஏக்கம், காதல், அன்பு, நட்பு, பிரிவு எல்லாம் என்னோடு தான் இப்படி உன் எல்லாமுமாய் நான்... எப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறேன் என்னில் இருக்கும் எழுத்துக்களையும் பொத்தான்களையும் உன் விரல்களால் எப்போதும் தட்டிக் கொண்டே இருக்கிறாய் என் சக்தி முழுவதும் உறிஞ்சி எடுத்து மீண்டும் உயிர் கொடுத்து மீண்டும் உயிர் உலரும் வரை உன் கையில் தான் நான்... உழைப்பின் வெப்பத்தால் ஓய்ந்து விடுகிறேன் நான் உன் கைபேசியாய் வாழ்க்கைப் பட்டதற்கு ஓயாமல் உழைக்கிறேன் உன் ஆரோக்கியமும் தொலைந்து என் ஆயுளும் கரைந்து... வேண்டாமே... என்னையும் கொஞ்சம் தூங்க விடு...
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021ல் வெற்றி பெற்ற 20 சிறுகதைகள், நம் ‘ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின்’ வெளியீடாக, ISBN எண்ணுடன், அங்கீகரிக்கப்பட்ட ஒரு உலக சாதனை நிகழ்வில் அச்சு புத்தகமாக வெளிவர இருக்கிறது.
இந்த நிகழ்வில் புத்தகம் வெளியிடும் எழுத்தாளர்களுக்கு, உலக சாதனை சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
உலக சாதனை நிகழ்வில் நீங்களும் புத்தகம் வெளியிட விரும்பினால், இதில் கொடுத்துள்ள வழிமுறையை பின்பற்றுங்கள். நன்றி 👇
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
Awesome