எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காஞ்சனா, எங்க உன் பையன் ரவியை காணோம் என கேட்டார் கணவர் சந்திரன்.
அவனுக்குத்தான் பிளஸ் டூ எக்ஸாம் முடிந்துவிட்டது. நண்பர்களுடன் சினிமாவுக்கு போகிறேன் என்றான். சரி போயிட்டு வாடா என்று சொன்னேன்.
மதியம் வந்து சாப்பிட்டானா என கேட்டார் கணவர்.
மதியம் சாப்பாட்டுக்கு வரலைங்க, அவன் பசங்களோட சேர்ந்து ஹோட்டல சாப்டுட்டு அப்படியே சினிமாவுக்கு போயிட்டு வரேன் என்கிட்ட காலையிலேயே சொல்லிட்டான்.
காலையில நான் வீட்ல தான் இருந்தேன். ஏன் என்கிட்ட சொல்லல? அவ்வளவு திமிரா உன் பையனுக்கு என கேட்டார்.
உன்கிட்ட கேட்டா நீங்க போக வேண்டாம்னு சொல்லுவீங்க, பசங்களோட சேராதீங்க அப்படின்னு சொல்லுவீங்கன்னு உங்க கிட்ட சொல்லல, அதான் அவன் என்னிடம் சொல்லிவிட்டு கிளம்பி போனான். ஏன் என்னிடம் சொல்லிக் கொண்டு போக கூடாதா? இதில் என்ன தப்பு இருக்கு என கேட்டாள் மனைவி.
நான் தப்பு என்று சொல்லவில்லை. நான் வீட்டில் தானே இருந்தேன். என்னிடம் ஒரு வார்த்தை நான் சினிமாவுக்கு போறேன் பா, சாயங்காலம் வர லேட் ஆகும் என்று சொன்னால் என்ன? என கேட்டார் கணவர்.
சரிங்க அவன் பரிட்சை முடிச்சிட்டான், சரின்னு கிளம்பி போயிட்டான் அவனுடைய நண்பர்கள் கூட, அவன் வந்தால் அவனிடம் எதுவும் கேள்வி கேட்காதீர்கள். அப்புறம் அவன் வருத்தப்படுவான் என்றாள் மனைவி.
நீ அவனுக்கு அதிகமா சப்போர்ட் பண்ற, அவன் செய்யற தப்புக்கெல்லாம் நீ உடந்தையாய் இருக்கின்றாய். பின்னாடி வேற எதுலையாவது போய் முடிய போகிறது ஒரு நாள், கண்டிக்க வேண்டிய விஷயத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டியது உன்னுடைய கடமை என எடுத்துரைத்தார் கணவர்.
சரி சரி என் பையன பத்தி எனக்கு தெரியும், அவனைப் பற்றி தப்பாக நினைத்துக் கொண்டிருப்பதால் தான் அவன் உங்களுக்கு தப்பானவனாகவே தெரிகின்றான். நம்ம பையன நாமாகவே தப்பாக நினைத்தால் தவறு என்று உங்களுக்கு தெரியாதா? நம்முடைய பையன் நல்ல பையன் தான் என்று நம் குழந்தை மீது நமக்கு நம்பிக்கை வர வேண்டும் என்றாள் மனைவி.
நான் நம்முடைய பையனை கெட்டவன் என்று சொல்லவில்லை. பையன்களின் சாகவாசம் அவனைக் கெட்டவனாக மாற்றி விடுமோ என்று தான் பயப்படுகிறேன் என்றார் கணவர்.
சரி, எனக்கு ரெண்டு தோசை ஊத்தி கொடு நான் சாப்பிடுகிறேன், உன் பையன் வந்த பிறகு தானே நீ சாப்பிடுவே எனச் சொல்லிக் கொண்டே சாப்பிட அமர்ந்தார்.
சாப்பிட அமரும் போது மனைவியின் செல்போன் அழைத்தது. யாரு உன் மகன் தான் கூப்பிடுவான். வர லேட் ஆகும் என்று சொல்லுவான் எடுத்துப் பேசு என்றார் கணவர்.
மனைவி எடுத்து செல்போனில் பேச கணவர் சொன்னது போலவே மகன் ரவி தான் பேசினான். அப்பா வந்துட்டாங்களா என்று கேட்க அப்பாவிடம் செல்போனை கொடுங்கள் என்று சொன்னான் ரவி.
அப்பா நான் பஸ் ஸ்டாண்டில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் நானும் என்னுடைய நண்பர்களும் இருக்கின்றோம் பா என்றான் ரவி.
ஏன்டா என்னடா செய்தீர்கள் என்று கேட்க, ஒரு பைக்ல நாலு பேரு போனதற்காக எங்களை உள்ளே உட்கார வைத்திருக்கிறார்கள் என்றான் ரவி.
அப்பாவிற்கு கோபம் வந்து அடிபட்டா தாண்டா தெரியும். அடிய வாங்கிட்டு வா, அப்பதான் அடுத்த தடவை இந்த தப்ப செய்ய மாட்டே என்று அப்பா சொல்லிவிட்டு செல்போனை வைத்து விட்டார்.
இருந்தாலும் மனது கேட்காமல் ஊற்றிய தோசையை கூட சாப்பிடாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.
அங்கே போய் பார்த்த பிறகு தான் அவனுடைய நண்பர்கள் எல்லாம் கையில் இருந்த பணத்தை கட்டி விட்டு கிளம்பி விட்டார்கள்.
ரவி மட்டும் போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்திருந்தான். ரவியின் அப்பா 500 ரூபாய் கட்டி விட்டு ரவியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
வீட்டுக்குள் நுழைந்த உடன் அப்பாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு இனிமேல் இந்த தப்பை செய்ய மாட்டேன் பா. உங்களின் அனுமதி இல்லாமல் நான் எங்கேயும் போக மாட்டேன். இந்த ஒரு தடவை மட்டும் என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்ல சரி சரி போய் கை அலம்பிட்டு வா, சாப்பிடலாம் என்று கூற மிகவும் சந்தோஷத்துடன் முகம் அலம்ப சென்றான் ரவி.
எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings