இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்
சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 105)
தாய் தந்தை மற்றும் தமக்கை பவானி மூவரும் ஒரு குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க ராமேஸ்வரம் புறப்பட, மூவரையும் ரயில் நிலையத்தில் இறக்கி விடச் சென்றான் பவன்
அவர்களுக்கான பயணசீட்டு கொடுத்து விட்டு வண்டியில் ஏற்றி விட்டு, வீட்டிற்கு திரும்பினான். பவன் தன்னுடைய பைக்கில் கடைக்குச் சென்று சிற்றுண்டியை எடுத்து விட்டு வருகையில், “ஹலோ பவன், வாட்ஸப் மேன்?” என்ற குரல் கேட்ட திசையை நோக்கினான்.
அவனுடைய தோழன் ராஜேஷ் நின்றிருந்தான்.
“ஹாய் ராஜேஷ்… ஐ டிடண்ட் எக்ஸ்பெக்ட் யு ஹியர். எப்படி இருக்க? ஸ்கூல் டேஸ்ல பார்த்தது. அப்புறம் நீ அமெரிக்கா போயிட்டு எப்ப இந்தியா வந்த? வாட் அபௌட் யு?” என கேள்விகளை அடுக்கினான்
பல காலமாக பிரிந்திருந்த நண்பர்கள் சேர்ந்த தருணம் எப்படி இருக்கும்? பழைய கதைகளும் கேள்விகளும் நிறைந்ததாக இருந்தது.
நண்பனிடமிருந்து விடைபெற்று வீடு வந்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இரவில் ரயிலில் பயணம் செய்யும் வேளையில் “தன் தம்பி வீடு சென்றானா” என்பதை அறிய பவனின் தமக்கை அவனை செல்பேசியில் அழைத்தாள் பவானி. பலமுறை முயற்சித்தும் கிடைக்கவில்லை என்று எண்ணியவாறு, தன்னை அறியாமல் காற்றின் ஜாலத்தால் கண் அசந்தாள்
அதே நேரம் வாசலில் ஏதோ தெரிவது போல் தோன்றியது அவனுக்கு. அதை என்னவென்று பார்க்க சற்று ஆவலுடன் பைக்கை நகர்த்தினான் பவன்
அவனிடம் பேசி விட்டு வரும் போது தன்னுடைய அலைபேசி எண்ணை கொடுத்து விட்டு வந்த நினைவில் வந்தவனுக்கு, வாசலில் தோன்றிய உருவம் திகைப்பை தந்தது.
அருகே வர வர அந்த தோற்றம் மறைவதை உணர்ந்தான்.
“பிரமை தான்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு வாசலில் ஏறி, பைக்கை நிறுத்தி விட்டு திரும்பினான். கதவின் அருகில் ஒரு பேப்பர் துண்டை பார்த்தான்
அதில் ஆங்கில எழுத்தான “I” பொறிக்கப்பட்டிருந்தது. சற்று நேரம் அதையே சிந்தித்துக் கொண்டிருந்தான். அவன் மனம் குழம்பிய நிலையில் தன்னை அறியாமல் உறங்கிப் போனான்.
ராமேஸ்வரம் போய் சேர்ந்த குடும்பம், அவர்களின் உறவினர் வீட்டிற்கு சென்றனர் அங்கே சென்று அனைவரையும் கண்டு இன்பமாய் கலந்துரையாடினர். பவனின் தாய்க்கு தன் மகனின் ஞாபகம் வரவே, அவனின் அக்காவிடம் கூறி பவனை அழைக்குமாறு கூறினார்.
‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள்’ என்ற ரிங் டோன் ஒலிக்க, தமையன் அழைப்பை எடுக்க காத்திருந்தாள் பவானி
ஏதோ பாட்டை முணுமுணுத்துக் கொண்டே எழுந்தவன், பச்சை பட்டனை அழுத்தி “அக்கா” என்றான்
அடுக்கடுக்காய் திட்டு விழுந்தது. ஏன் என்று புரியாதவன் போல் விழித்தவனுக்கு, “எத்தன தடவ கால் பண்றது? ஏன்டா அட்டென்ட் பண்ணல? அப்படி என்ன உனக்கு வேலை? மிஸ்ட் கால் பாத்தா திருப்பி கூப்பிட மாட்டியா?’ என்ற கேள்விகளுடன் விடிந்தது பவனின் காலைப் பொழுது.
“எனக்கு கால் வந்தா நான் அட்டென்ட் பண்ண மாட்டேனா? நான் உன்னை திட்டலாம் என்று இருந்தேன். சரி விடு, போய் ரீச் ஆயிட்டீங்களா?”
“ம்… ரீச் ஆயிட்டோம். முதல்ல மொபைல்ல என்ன பிராப்ளம்னு பாரு, நான் கட் பண்றேன்”
இந்த உரையாடல் நிறைவேறிய வேகத்தை போல, அன்று அவனுடைய பொழுதும் கரைந்தது. கல்லூரி சென்று வீடு திரும்பிய அவன் ஹாலில் அமர்ந்து செய்தித்தாளை வாசித்துக் கொண்டு இருந்தான்
அந்த ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தாளின் இரண்டு எழுத்துக்கள், அவன் கண்ணை உறுத்திக் கொண்டே இருந்தது. ஆங்கில எழுத்து ‘A’ மற்றும் ‘M’ என்னும் எழுத்துக்கள் தான் அவை
அதைப் பொருட்படுத்தாமல் கடந்தான். இரவு உணவிற்குப் பிறகு தொலைக்காட்சி பார்த்த வேளையில், ஜன்னல் படபடவென காற்றில் அடித்தது. அதை அடைக்க சென்றவனுக்கு, ‘திக்’ என்றது
ஜன்னல் கதவில் ‘Guilt’ என்ற வார்த்தையை கொண்ட தாள் வந்து அடித்தது.
மறுநாள் காலை ஹாலில் மயங்கிக் கிடந்தான் பவன். சூரிய ஒளி கண்ணில் பட, மெல்ல கண் விழித்தவனுக்கு என்ன நடந்தது என எந்த நினைவும் இல்லை. ஜன்னல் அருகில் கண்ட, ‘Guilt’ என்ற அந்த வார்த்தை மட்டும் கண்களில் இருந்து நீங்கவில்லை
எவ்வளவு யோசித்தும் அவனை சுற்றி என்ன நிகழ்கிறது என அவனால் அறிந்து கொள்ள இயலவில்லை. தரையில் இருந்து எழுந்து, சோபாவில் அமர்ந்தான்
‘எல்லாம் தன் பிரமை’ என மனதில் தைரியத்தை வரவழைத்து கல்லூரிக்கு சென்றான். இருப்பினும் நேற்றைய இரவின் தாக்கம் அவனுள் இருந்தது.
மாலை வீட்டிற்கு வந்து தன் அன்னைக்கு அழைத்து விவரத்தை கூறலாம் என நினைத்தவன், அவர்களை கலவரப்படுத்த வேண்டாமென பொதுவாய் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்
தண்ணீர் பருக குளிர்சாதன பெட்டியின் அருகே சென்றவன், திகைத்துப் போனான். இரண்டு நாட்களுக்கு முன்னால் அவன் கதவருகே கண்ட ‘I’ எனும் எழுத்து அங்கே இருந்தது
சற்று யோசித்தவனுக்கு, ஏதோ புரிவது போல் இருந்தது. அந்த ‘I’ என்னும் எழுத்துடன் நேற்று செய்தித்தாளில் கண்ட ‘A’ மற்றும் ‘M’ சேர்த்து, ஜன்னலில் கண்ட வார்த்தையும் சேர்த்தால், “I am guilt” என ஒரு வாசகம் உருவானது
ராமேஸ்வரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, ரயில் பயணத்தை தொடங்கினர் பவனின் குடும்பத்தார். தன் தம்பியின் உரையாடலில் ஏதோ கலக்கம் தெரிவதாக தாய் கூறியதால், அவளை அழைத்தாள் பவானி
தாங்கள் புறப்பட்ட தகவலை அவனுக்கு சொல்வதற்காக அவன் நம்பரை டயல் செய்ய, அவன் அழைப்பை எடுக்கவில்லை
“பவனுக்கு என்ன ஆனது? என்ன பிரச்சினை?” என பவானி யோசித்த வேளையில் ரயில் ராமேஸ்வரத்தை கடந்திருந்தது.
மறுநாள் காலை ரயில் கோவை வந்து நின்றது. எவ்வளவோ அழைத்தும் பவன் போன் எடுக்காததால், அவர்களே ஒரு டாக்ஸி பிடித்து வீடு வந்து சேர்ந்தனர்.
மூவரும் வீட்டிற்கு வந்து கதவை திறந்ததும் அதிர்ந்து போனார்கள். வீடெங்கும் குப்பைகள் சிதறி இருந்தது, நாற்காலி மேசைகள் எல்லாம் புரண்டு கிடந்தன
நடுகூடத்தில் சுருண்டு கிடந்த உருவம் கண்டு அருகில் சென்ற பவானி, அது தன் தம்பி என உணர்ந்ததும், “பவன்” என கத்தினாள்
தண்ணீர் தெளித்து அவனை எழுப்பிய குடும்பத்தினரை கண்டதும், தன்னை மறந்து அழத் தொடங்கினான் பவன். இதுவரை அவனை அப்படி கண்டிராத அவர்கள், அவனை அமைதிப்படுத்தினார்.
“ஏ பவன்… என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்க? வீடு ஏன் இப்படி இருக்கு?சொல்லுடா” என அக்கா உலுக்க, தட்டுத்தடுமாறி வார்த்தைகள் அவன் வாயில் இருந்து வந்தது
“எனக்கு ஒண்ணுமே ஞாபகமில்ல, நேத்து என்ன நடந்துச்சுன்னு தெரியல. என் மைண்ட் பிளாங்கா இருக்கு” என்றான்
“வீடு ஏண்டா இப்படி இருக்கு? திருடன் யாராவது வந்துட்டாங்களா?” வினாவினாள் பவனின் அம்மா
“ஆம்” என்று தலையசைத்தான். பதறிப் போன அவனின் பெற்றோர், கேள்விகளின் அம்புகளை அவன் மீது செலுத்தினர்.
எல்லா கேள்விகளையும் கேட்டு அவன் அமைதியாய் இருந்தான். பெற்றோரின் கேள்விகளை வைத்து ஒரு கதையை உருவாக்க அவனுக்கு சமயம் தேவைப்பட்டது. சில நிமிடங்கள் கழித்து அவன் வாய் மலர்ந்தது
“ஆமா… நேத்து நைட் நான் தூங்கிட்டு இருந்தேன். அப்ப ஏதோ சவுண்ட் கேட்டுச்சுனு வந்தப்ப இரண்டு திருடர்கள் நின்னுட்டு இருந்தாங்க நான் லைட் போட்டதும் எல்லாத்தையும் தட்டிவிட்டு தப்பிச்சு ஓடிட்டாங்க , பிடிக்க போனப்ப என்ன தள்ளிவிட்டு தலையில அடிச்சுட்டாங்க. அதனால தான் நான் மயங்கிட்டேன்னு நினைக்கிறேன்” என்று சொல்லி முடித்தான்
தன் பிள்ளைக்கு என்னவாயிற்று என பதற்றத்துடன் அவன் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த அவனது பெற்றோர், அவனை அமைதிப்படுத்தினர்
எழுந்து அவன் அறையில் ஓய்வு எடுக்கும் படி கூறி விட்டு, அவரவர் அறைக்கு சென்றனர்.
பவனின் கண்களில் ஏதோ பயத்தை உணர்ந்த அவன் சகோதரி, சிறிது நேரம் கழித்து அவன் அறைக்குச் சென்றாள்.
அவன் உறங்காமல் எதையோ நினைத்து மனதளவில் குழம்பிப் போய் இருக்கிறான் என்பதை, அவனது கண்கள் காட்டிக் கொடுத்தது
பவானி வந்து நிற்பதை கூட உணராமல், அவன் தீவிரமாக சிந்தனையில் மூழ்கியிருந்தான்
‘தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வீட்டினரிடம் கூறலாமா வேண்டாமா?’ என ஒரு போரே அவன் உள்ளத்தில் வெடித்துக் கொண்டிருந்தது
அந்த நேரத்தில் “பவன்” என்று அக்கா பவானி அழைக்க, குரல் கேட்டது நிமிர்ந்தான்
அவனின் கலக்கத்தை புரிந்து கொண்டவளாக, “என்ன ஆச்சு பவன் உனக்கு? நீ பொய் சொல்றேன்னு எனக்கு தெரியும், எந்தத் திருடனும் அந்த இடத்தை விட்டு சும்மா போக மாட்டான். அடிச்சான்னு சொன்ன, திருடன் சும்மா உன்னை அடிச்சுட்டு எந்த பொருளும் எடுக்காமயா போவான்? உண்மைய சொல்லு, என்ன நடந்தது” எனக் கேட்டாள் பவானி
தமக்கை தன்னை உணர்ந்து கொண்டதை புரிந்த பவன், “நானே உன்கிட்ட சொல்லலாமா வேண்டாமானு யோசிச்சுட்டு இருந்தேன். ப்ளீஸ்… இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும், அப்பா அம்மாவுக்கு தெரிய வேண்டாம், அவங்க பயந்துருவாங்க”
“என்னடா சொல்ற? அவங்க பயப்படுற அளவுக்கு நீ என்ன சொல்லப் போற. ஏதும் பெரிய ப்ராப்ளமா? சொல்லு” என அக்கறையுடன் கேட்டடாள்
அவர்களை ரயில் நிலையத்தில் விட்டு வந்ததில் இருந்து, நேற்று மாலை நடந்தது வரை அனைத்தும் பரபரப்புடன் கூறினான்
அவனை திகிலுடன் பார்த்தவள், “சரி, நேத்து நைட் என்ன ஆச்சு?” எனக் கேட்டாள் பயத்துடன்
“ஈவினிங் காலேஜ் போயிட்டு வந்து பிரெஷ் ஆகிட்டு டிவி ஆன் பண்ணினேன். அப்ப எனக்கு ஒரு நம்பர்ல இருந்து கால் வந்தது, எடுக்கறதுக்குள்ள கட்டாயிடுச்சு. நான் அதை பெருசா எடுத்துக்கல, மறுபடியும் ஒரு மணி நேரம் கழிச்சு அதே நம்பரில் இருந்து கால் வந்தது.
அட்டென்ட் பண்ணினப்ப ஏதோ ஒரு டிஸ்டபன்ஸ் தெரிஞ்சது. அதோட வாய்ஸ் கொஞ்சம் கொஞ்சமா ஹை ஆச்சு. அப்புறம் ஒரு சவுண்ட், நான் பயந்து மொபைல கீழ போட்டுட்டேன்”
“அப்படி என்ன சவுண்ட் பவன்?”
“ஒரு அலறல், யாரோ பயங்கரமா அழுகிற சவுண்ட். அது இன்னும் என் காதுல கேட்டுட்டே இருக்கு. எனக்கு அதுக்கு அப்புறம் தனியா இருக்க ஒரு மாதிரி இருந்துச்சு. சரினு உனக்கு கால் பண்ணி பேசலாம்னு அடிச்சேன்”
“எனக்கு எந்த காலும் வரலையே பவன், எப்ப பண்ண?”
“உனக்கு டயல் பண்ணா, அந்த நம்பருக்கு தான் கால் போச்சு”
“ஏ… என்ன சொல்ற? உண்மையாவா?”
“ஆமா… நான் உனக்கு அம்மாக்கு அப்பாக்கு என் பிரெண்ட்ஸுக்கு, நிறைய தடவை ட்ரை பண்ணேன். ஆனா, என்னோட கால் அந்த நம்பருக்கு மட்டும் தான் டயல் ஆச்சு”
“இது ஏதும் பிராங்கா இருக்க போகுதுடா”
“இல்ல… அது இல்ல. அப்புறம் தான் ப்ராப்ளமா ஸ்டார்ட் ஆச்சு. எனக்கு திரும்பி அதே நம்பர்ல இருந்து மெசேஜ் வந்துச்சு. முதல்ல நான் வீட்ல எப்படி அந்த லெட்டரை பார்த்தேனோ, அதே மாதிரி தான் எனக்கு மெசேஜ் வந்தது. அந்த கடைசி வார்த்தையும் அதே மாறி ஹாண்ட் ரைட்டிங்ல தான் இருந்தது. ஒரு தடவை இல்ல ‘ஐ அம் கில்ட்’னு பத்து வாட்டி மெசேஜ் வந்தது” என்று கூறி தனக்கு வந்த மெசேஜ்களை அக்காவிடம் காண்பித்தான் பவன்.
அதில் மேலும் வரையாடுகள் காணப்பட்டன, அவள் அது என்னவென்று கேட்க, “அதப் படி, உனக்கே புரியும்” என்றான் பவன்
அதை வாசித்தாள் பவானி
“யார் நீ? யார் நீ கேக்குறேன்ல?” என பவன் மெசேஜ் அனுப்பியிருக்க
“என்ன விளையாடுறீங்களா? ஆர் யூ கிட்டிங்? என்ன தெரியலையா?” என்றது எதிர்முனை
“தெரியல மிஸ்டர், யார் நீ? உனக்கு என்ன வேணும்? என்ன எதுக்கு டிஸ்டர்ப் பண்ற?”
“எனக்கு நீதான் வேணும்” என்றதும் செய்தி முடிந்திருந்தது.
“அந்த கடைசி மெசேஜ் வந்ததும் சத்தமா சிரிப்பு சத்தம் கேட்டது” என்ற பவன், “அதுக்கப்புறம் எனக்கு மெசேஜ் பண்ண தோணல. அந்த லாஸ்ட் மெசேஜ் கூட ஒரு சிரிப்பு சவுண்ட் வந்தப்பா, வீடு ஆடுற மாதிரி தோணுச்சு. அப்பறம் சடனா கதறல் சவுண்ட், மாறி மாறி ரெண்டும் சேர்ந்து எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி ஆயிடுச்சு. அந்த டென்ஷன்ல தான் குப்பையை கவுத்து, எல்லாத்தையும் தள்ளி விட்டுட்டேன். ஒரு கன்ஃப்யூஸ் ஸ்டேட்டுக்கு போயிட்டேன். அப்புறம், என்ன ஆச்சு எனக்கு தெரியல” என முடித்தான் பவன்
அவனை கண் சிமிட்டாமல் பார்த்தாள் பவானி. இருவரும் சற்று நேரம் எதுவும் பேசவில்லை
பின், “பவன்… அந்த நம்பருக்கு இப்ப ட்ரை பண்ணி பாரு” என பவானி கூற
“வேண்டாம்… எனக்கு என்னமோ தப்பா தோணுது. சாம்திங் வெரி சீரியஸ்”
“பாத்துக்கலாம் நீ பண்ணு” என தமக்கை தைரியம் சொல்ல
“ஓகே… நான் கால் பண்றேன்” என அந்த எண்ணுக்கு அழைத்தான் பவன்
கால் கனெக்ட் ஆனதும் ஸ்பீக்கரில் போட்டான், நேற்று இரவு கேட்ட அதே அலறல் மறுபடியும் கேட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்,
கதறல் நின்றவுடன் பவன் பேசத் தொடங்கினான், “ஹலோ…யார் நீ?”
நிசப்தம்
“ஹலோ யார் நீ? என்ன எதுக்கு இப்படி டிஸ்டர்ப் பண்ற? உனக்கு என்ன தான் வேணும்?”
அழுகையுடன் சேர்ந்த ஒரு குரல் கேட்டது.
“பவன் அண்ணா… நான் தான் அங்கிதா”
‘அங்கிதா’ என்ற பெயரைக் கேட்டதும், பவனின் நெஞ்சில் புதைந்திருந்த பல நினைவுகள் அவன் கண் முன்னே தெரிந்தது
அவன் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்த வேளையில், அதே கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்தாள் அங்கிதா.
பவனின் வகுப்பு மாணவர்கள், ராகிங் என்ற பெயரில் செய்த நிகழ்வுகளை தாங்க இயலாமல் அழுது கொண்டிருந்த அங்கிதாவை முதல் முதலில் பார்த்த ஞாபகம் வந்தது
அதில் இருந்து பவன் அவளைக் காப்பாற்றியதும், “அண்ணா ரொம்ப தேங்க்ஸ் அண்ணா. நான் ரொம்ப பயந்துட்டேன். எனக்குனு யாருமே இல்ல, நீங்க தான் வந்து உதவி பண்ணீங்க. ரொம்ப தேங்க்ஸ் அண்ணா” என்றாள் அங்கிதா
“இனி நீ பீல் பண்ணாத, நான் உனக்கு ஒரு நல்ல அண்ணனா நான் இருப்பேன்” என்று வாக்கு கொடுத்தான் பவன்
“என்ன ஆச்சு அங்கிதா உனக்கு? நீ ஏன் இப்படி பேசற போன்ல?” என்று கண்கலங்கிய நிலையில் அவளிடம் கேட்டான்
“அண்ணா, ஒரு மாசத்துக்கு முன்னாடி உங்கள பார்க்க வரும் போது எனக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சி”
“என்ன சொல்ற அங்கிதா? எப்படி? என்னாச்சு?”
“ஆக்சிடெண்ட்ல நான் அங்கேயே இறந்துட்டேன், ஆனா உங்கள பாக்க வேணும்கற ஆசை மட்டும் முடியல. உங்கள பார்க்கணும் உங்ககிட்ட இந்த விஷயத்தை எப்படியாவது சொல்லனும்னு தான் நான் காத்துகிட்டு இருந்தேன். நீங்க படிப்புக்காக கோயம்புத்தூர் வந்துட்டீங்க, சென்னையில ஒரு தங்கச்சி இருக்கிறத மறந்துட்டீங்களே. உங்களை இத்தனை நாளா தேடிட்டு இருந்தேன்” என அவள் கூற, அவன் கண்ணில் கண்ணீர் நிரம்பி வழிந்தது
செய்து தந்த சத்தியத்தை மறந்த குற்றவுணர்ச்சியில் வாடினான் பவன். அவனின் நிலையை கண்டு பவனின் தமக்கையும் வருந்தினாள்.
“எனக்கு இருந்த ஒரே சொந்தம் நீங்க தான், எனக்கு அண்ணான்னு கூப்பிட ஒருத்தர் தான் இருந்தாங்க, அவருக்கு நான் இறந்தது தெரியப்படுத்த தான் நான் வந்தேன். உங்கள டிஸ்டர்ப் பண்ணிருந்தா என்னை மன்னிச்சுடுங்க ப்ளீஸ்”
“நீ சாரி சொல்ல கூடாது அங்கிதா, நான் தான் அதை சொல்லணும். உன்னை பத்திரமா பாத்துக்கறேன்னு சொன்னேன். ஆனா எனக்கு நீ இறந்தது கூட தெரியாம போயிடுச்சு. ஐ அம் சாரி” என வருத்தத்துடன் கூறினான் பவன்
“இல்லண்ணா, நான் பீல் பண்ணல. ஆனா உங்கள பாக்கணும்னு தான் வந்தேன். உங்களை பாத்துட்டேன், இது போதும், நான் போறேன். ஆனா நான் போனாலும் உங்க கூட தான் இருப்பேன். என்னை மறந்துடாதீங்க” என அங்கிதா கூறிய நொடி திரை அணைந்தது.
தன்னை அண்ணனாய் நேசித்த அங்கிதா, இறந்தது கூட அறியாமல் போன தன் நிலையை எண்ணி வருந்தினான் பவன். தம்பியை எப்படி தேற்றுவது என தெரியாமல் அவன் தோளை தட்டி சமாதானம் செய்து விட்டு வெளியேறினாள் பவானி
அங்கிதாவின் ஞாபகங்கள் அவனை வெகுவாய் வருத்தியது
“அங்கிதா” என்ற அலறலுடன் எழுந்தான் பவன்
ஒன்றும் புரியாமல் விழித்தவன், அப்போது தான் உணர்ந்தான், அத்தனை நேரம் நடந்த அனைத்தும் கனவு என
கனவு என்பதை அவனால் இப்போதும் நம்ப இயலவில்லை. பிரமை பிடித்தவன் போல் எழுந்து அமர்ந்தான்
அவனின் கதறல் கேட்டு பதறியபடி ஓடி வந்த அவன் அன்னை, “பவன், என்னாச்சு? எதுக்கு கத்துற?” எனக் கேட்க
“அம்மா… நான் ஒரு பயங்கரமான கனவு கண்டேன். அதுல அங்கிதானு ஒரு பொண்ணு பேயா வந்தது”
“கனவா, என்னடா சொல்ற? ஆனா இந்த பேர் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே?” என பவனின் அன்னை யோசிக்க
சட்டென நினைவு வந்தவனாய், “ஐயோ… அதே பேர்ல தான் போன வாரம் நம்ம பக்கத்து தெருவுல ஒரு பொண்ணு ஏக்சிடெண்ட்ல செத்து போச்சு” என்றவனின் இதயம், பலமாக துடிக்கத் தொடங்கியது.
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
அட்டகாசம்
அருமை
கடைசி வரை நல்ல திகில்!
Good skrip keep doing
Good story! Incredible story writing,narrative skills
Good
Gud💥
Good one✨
It’s very interesting story..keep going
Good one sharu. Continue the great work. All the very best 👌
Good one sharu. Continue the great work. All the very best
கதை..யார் நீ ..எழுத்தாக்ஷர்..சாரு கீர்த்தனா..ஊர்..கோவை ..கல்லூரி மாணவி..கதை எண்.105
கதை மிக அழகாக பின்னப்பட்ட வல்ல போல நேர்த்தியாக எழுதப்பட்டு உள்ளது.
கதை இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதியிருக்கலாமோ என தோன்றியது.சட்டென முடிந்த விட்டது போல ஓர் feel..மற்றபடி அருமையான கதை..எழுதிய கல்லூரி மாணவி கீர்த்தனாவுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்..