முருகா உன் திருவருள் வேண்டும்
ஒருகாலும் உனை மறவாதிருக்கவும் ,
கலங்காமல் யான் எப்போதிருக்கவும் ,
சலங்கை கிண்கிணி ஒலி கேட்கவும் ,
பன்னிரு கருணை விழிகள் பார்க்கவும் ,
முன் எட்டு எடுத்து விரைந்து வருவாய் !
முருகா நிறைவாய் திருவருள் புரிவாய் !
முருகா உன் திருவருள் வேண்டும் .
குற்றம் கண்டெனை ஒதுக்கி விடாமல் ,
சற்றே மனம் இறங்கி அருள்புரிவாய் .
பெற்ற தாய் புறந்தள்ளினாள் எனில் ,
உற்ற பிள்ளைக்கும் செய்வழி யாது ?
தந்தையும் தாயுமானவனே நீ எனக்கு ,
சிந்தையில் உறை உயர் சிகாமணியே !
முருகா, உகந்துன் திருவருள் புரிவாய் !
முருகா, உன் திருவருள் வேண்டும்.
பிறிதொன்றும் வேண்டேன் முருகா ! உன்
சிறியேனுக்கும் விரும்பி அருள் தருவாய் !
பசியாற, உனைக் கண்டென் கண் பசியாற
பிசிறின்றி நீயுமுன் மயில் மீதேறி வருவாய் !
உனை வணங்குவோர்க்கு ஓர் குறையுமில்லை
நினைத்தாலே வினை வெயில் கண்ட பனியாகும்
முருகா, உந்தனருள் எப்போதும் வேண்டும்
முருகா உன் திருவருள் வேண்டும் வேண்டுமே !
#ad
GIPHY App Key not set. Please check settings