in ,

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் (சிறுகதை) – வளர்கவி, கோவை

எழுத்தாளர் வளர்கவி கோவை எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கிராமத்திலிருந்து சென்னைக்குக் குடிபோனவர் குரியகோஸ். மகளின் படிப்புக்காக சென்னைக்குள் ஆனால் சென்னை நகரை விட்டுக் கொஞ்சம் தள்ளி இருந்தது அந்த அப்பார்ட்மெண்ட். அதில் தன் மகளைத் தங்க வைக்கத் திட்டம்!

கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப்படித்தால், மகள் கெட்டுப் போய்விட வாய்ப்பு உண்டு என்ற நினைப்பில், அப்பார்ட்மெண்டில் வீடு வாடகைக்குப் பிடித்துத் தன்னோடேயே தங்க வைத்து, கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.

குரியகோஸுக்குக் கொஞ்சம் ஆஸ்மா அலர்ஜி உண்டு. அதனால், அப்பார்ட்மெண்ட் ‘லிஃப்டில்’ தான் மாடி பிளாட்டுக்குச் சென்று வருவார்.

சென்னை நகரின் அரக்கப்பரக்க ஓடும் வேகம் அவருக்கு வியப்பைத் தந்தது. தினமும் மகள் கல்லூரிக்குப் போனதும் வாசலில் நின்று, ‘அனுபவி ராஜா அனுபவி’ நாகேஷாக  தெருவை வேடிக்கை பார்ப்பார். அவர் அப்பார்ட்மெண்டுக்கு எதிரில் ஒரு ஐடி கம்பெனி. அதில் வேலை பார்க்கும் பெண்களும், ஆண்களும் நவநாகரீக உடையில் பரபரப்பாக இயங்குவது அவருக்கு ஆச்சரியமும் அதிசயமாகவும் இருக்கும்.

மகள் வித்யாவை படிப்புக்குப்பின் இப்படி ஒரு கம்பெனியில் வேலை பார்க்க அனுப்பி வைக்க வேண்டும் நினைப்பில் கனவில் தினமும் லயித்திருப்பார்.

அன்று கொஞ்சம் மழை. லேசான டிரிசிலிங். அந்தத் தூறலில் ஆஸ்துமா தன் வேலையைக் காட்டத் தொடங்க, கையில் விக்ஸ் இன்ஹேலரை மூக்கருகே வைத்து உறிஞ்சினபடியே அப்பார்ட்மெண்டுக்கு எதிரில் இருந்த அந்த ஐடி கம்பெனியை அப்பார்ட்மெண்ட் வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அடிக்கடி மூக்கில் இன்ஹேலரை வைத்து உறிவதும் எடுப்பதுமாக இருந்தார். மூக்கடைப்புக்கு அது இதமாக இருந்தது!.

அப்போது… அப்பார்ட்மெண்ட் கார் ஒன்று அப்பார்ட் மெண்டிலிருந்து வெளிய கிளம்பிச் செல்ல, அதற்கு வழியை விட்டு ஒதுங்கி அதைப் பார்க்கத் திரும்பினார் குரியகோஸ்…

அதே சமயம், ஐடி கம்பெனியிலிருந்து இருபத்தைந்து வயதிருக்கும்  ‘ஜீன்ஸ் பேண்ட் டி ஷர்ட்டு’ அணிந்த அழகான யுவதி ஒருத்தி சாலையைக் கடந்து வேகமாக இவர் அருகே வந்து எங்கோ பார்த்துக் கொண்டிருந்த இவரிடம் வாயில் ஒரு சிகரெட்டை உதட்டில் உட்கார வைத்தபடி,

“ஸார்… லைட்டர் பிளீஸ்!’ என்று நெருப்புக்குக் கையேந்த,  தன் கையிலிருந்த உறைபோன ஒயிட் விக்ஸ் இன்ஹேலரின் வெளுப்பு சிகரெட்டாக அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.. இவர் புகை பிடிப்பதாக நினைத்து நெருப்புக்குக் கையேந்தினாள்.

ஆஸ்த்துமா அதிகரிக்க மூக்கருகே இன்ஹேலரை உறியக் கொண்டு போன குரியகோஸை, ஒரு நமட்டுப் பார்வையோடு  பார்த்துவிட்டு, அவள் சிரித்து நகர, குரியகோஸ்… ‘குடி கெட்டதுபோ!… ஹாஸ்டலில் விட்டா தப்புன்னு நெனைச்சு ஒரு அப்பார்ட்மெண்டைப் பிடித்தது… ஊரைத் தெரிஞ்சுக்க உதவிச்சே…!! அரைக் காசுன்னாலும் அரசாங்கக் காசா இருக்கணும்னுதான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, காலணா சம்பாதிச்சாலும்  அது கிராமத்துக் காசா இருந்தாப் போதும்டா சாமி!’ நல்ல சென்னை வாழ்க்கைடா  இது!!! .

ஐடி காசுக்கு ஆசைப்படவும் வேண்டாம்…. ! பண்பைச் சீரழிக்கிற பட்டண வாழ்க்கையும் வேண்டாம்னு முடிவு பண்ணினார்.

எழுத்தாளர் வளர்கவி கோவை எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    விழியோரம் உறங்கும் கனவு (இறுதி அத்தியாயம்) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

    மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா??!! (சிறுகதை) – வளர்கவி, கோவை