in ,

அம்மா என்றால் அம்மா தான் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

பள்ளிசெல்லத்  தயாராகும்  என்னைப்  பார்த்துப்

          பார்த்துப்போ  இருபக்க  சாலை  தன்னை

துள்ளிநீயும்  தெருநடுவில்  ஓடி  டாதே

          துரத்திவரும்  வண்டிமோதும்  என்பார்  பாட்டி !

பள்ளியிலே  யாரிடமும்  சண்டை  போட்டும்

          பக்கத்தில்  இருப்போனைச்  சீண்டிப்  பார்த்தும்

தள்ளுமுள்ளு  செய்துவிளை  யாடிக்  கொண்டும்

          தறுதலையாய்  ஆயிடாதே  என்பார்  தாத்தா !

 

புத்தகத்தைப்  பேனாவைத்  தொலைத்தி  டாமல்

          புதுப்பேனா  தனைப்பார்த்துத்  திருடி  டாமல்

வித்தையினிக்  காட்டுகின்ற  குரங்கா காமல்

          வினையமுடன்  நடந்திடுவாய்  என்பார்  அண்ணன் !

புத்தியோடு  விளையாடி  மைதா  னத்துப்

          புழுதியிலே  சட்டையினை  அழுக்காக்  காமல்

பத்திரமாய்  வரவேண்டும்  என்றே  அக்கா

          பாடத்தை  எடுத்திடுவாள்  அருகில்  வந்தே !

 

எல்லோரும்  எதைஎதையோ  சொல்லு  வார்கள்

          எப்படிநான்  நடக்கவேண்டும்  என்று  ரைப்பர்

வல்லவனாய்  ஆவதற்குப்  படிக்க  வேண்டும்

          வயதிதுதான்  போனாலோ வாரா  தென்பர் !

எல்லோரைப்  போலன்றி  அம்மா  மட்டும்

          எடுத்துவைத்த  சாப்பாட்டை  மிச்ச  மின்றி

நல்லபடி  நீஉண்ண  வேண்டு  மென்று

          நயமாகச்  சொல்லிடுவார்  முத்த  மிட்டே !

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    உழைப்பே உயர்வு தரும் (சிறுகதை) – வேலூர். D. சீனிவாசன்

    பனி விழும் மது வனம் ❤️(இறுதி பாகம்) – பவானி உமாசங்கர்