in ,

மனித நேயம் (சிறுகதை) – மணிராம் கார்த்திக்

எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

[விசு என்னும் நண்பரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் பற்றிய கதை]

மதுரை.

என் பெயர் விசு. வயது 30க்கு மேல்.என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை , என் மனதை பாதித்த நிகழ்வை உங்களோடு பகிர்கிறேன்.

என் சொந்தக்காரர் ஒருவரின் திருமணதிற்கு சென்று விட்டு காலை 11 மணிக்கு மேல் இருக்கும் , வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தேன்.

நான் மட்டும் சென்று இருந்ததால் உடனே திரும்ப முடிந்தது. என் அம்மா அல்லது அப்பாவை கூட்டிட்டு போயிருந்தால் , அவ்வளவு தான். என்னால் இரவு தான் திரும்ப முடியும். சொந்தங்களுடன் பேசி தீராது.

கல்யாண வீட்டு சாப்பாடு, கண்ணை கட்ட ஆரம்பித்தது. வீட்டிற்கு எப்போடா போவோம் , போனதும் ஒரு தூக்கம் போடணும்னு மனசு மட்டும் இல்ல, என் உடம்பும் சொல்லிட்டே இருக்கு. அவளோ வெயில்.

இரு சக்கர வாகனத்தில் வேகமாய் பைபாஸ் சாலையில் வந்து கொண்டு இருந்தேன். அப்போது என் கண்முன்னே, ஒரு பெரியவரின் இரு சக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்தார். சட்டென கூட்டம் கூடியது. நானும் என் வாகனத்தை நிறுத்தி விட்டு சென்று எட்டி பார்த்தேன்.

என் அப்பாவின் வயசு இருக்கும் , வாகனத்தில் வரும் போது பிரஷர் குறைந்து சற்று மயக்கம் அடைவது போல தெரிந்து சுதாரிப்பதற்குள் கீழே விழுந்து விட்டார். அப்போது அந்த பெரியவரின் ஓட்டுனர் உரிமம் கீழே விழுந்து இருந்தது. அதில் பெயர் “மோகன் தாஸ் காந்தி” என்று இருந்தது.

அந்த பெயரை பார்த்ததும் எனக்கு அவரின் மீது மரியாதை வந்தது. அங்கே கூடியிருந்த கூட்டத்தில் நான் மட்டும் தான் இளைஞன். மற்ற அனைவரும் என்னை விட வயதில் மூத்தவர் என்பதை விட பெரியவர்கள்.

அனைவரும் நம்மிடம் இந்த பெரியவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூறிவிடுவார்களோ , என்று நினைத்து  அங்கே இருந்து  கிளம்பினேன். அப்போது , என் அம்மாவின் செல்போன் அழைப்பு.

நான் எடுத்து பார்த்து , பேசாமல் , இன்னும் 10 நிமிடத்தில் வீட்டிற்கு போயிருவோம் , அங்க போய் பேசிக்கொள்வோம் என்று சென்று விட்டேன்.

சிறு தயக்கம் இருந்தாலும் , நமக்கு எதுக்கு வம்பு என்ற எண்ணம். வீட்டிற்கு போறோம் சிறு தூக்கம் தூங்கியாகனும் என்ற எண்ணம் எனக்கு வந்து விட்டது.

வீட்டிற்கு 10 நிமிடத்தில் சென்று விட்டேன். வீட்டிற்கு சென்றேன். முன் அறையில் தலையில் ரத்தம் லேசாக வழிந்த கட்டுடன் அப்பா சுந்தரம். அம்மா மீனாட்சி கையில் ஜூஸ் டம்ளருடன் சமையல் அறையில் வெளியில் வந்தாள்.

“என்னடா , போன் பண்ணா எடுக்க மாட்டியா?” என்று அம்மா என்னை பார்த்து கேள்வி கேட்டாள்.

நான் அதற்க்கு பதில் சொல்லாமல் , அப்பாவை விசாரித்தேன். அப்பாவின் அருகில் என் வயது புது நபர் அமர்ந்து இருந்தார்.

அப்பா என்னிடம் பேசினார் , “ விசு , இந்த தம்பி தான் என்னைய காப்பாற்றி கூட்டிட்டு வந்துச்சு. ரோட்ல வண்டியில் வந்து கொண்டு இருக்கும் போது தடுமாறி கீழே விழுந்துடேன். கீழே விழுந்து தலையில அடி , ரத்தம் வர ஆரம்பிச்சது , எனக்கு மயக்கம் ஒரு பக்கம்,  தண்ணி தாகம் என்ன பண்ண தெரியல, அப்போ அங்க யாருமே இல்ல , அந்த வழியா வந்த இந்த தம்பி தான் என்னைய பார்த்து , பக்கத்துல இருக்கிற மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய் முதல் உதவி செய்து என்னைய காப்பாத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கார். “ என்று கூறினார்.

அந்த நபரை பார்த்து நான் நன்றி கூறிய படி கையை கூப்பினேன்.

“நன்றி எல்லாம் வேணாம். என் அப்பாக்கு இது போல் என்றால் சும்மா விட்டு போவேனா ?“ என்று அந்த நபர் கூறினார்.

மேலும் என் அப்பா சுந்தரம் தொடர்ந்து “தம்பிக்கு காலை 10.30 க்கு இன்டர்வீயூ இருக்காம். என்னால அங்க போகமுடியல, அவருக்கு என்னைய காப்பாத்த போய் வேலைக்கு போக முடியல , ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று என் அப்பா கூறியது , என்னை மேலும் அந்த நபரின் மீது மரியாதையை அதிகரிக்க செய்தது.

“பரவா இல்லைங்க. இந்த வேலை இல்லைன்னா என்ன வேற வேலை கிடைக்கும்.” என்று அசாத்தியமாக கூறினார் அந்த நபர்.

“உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்பா , உங்க நல்ல மனசுக்கு நல்லது நடக்கும்” என்று என் அம்மா மீனாட்சி அந்த நபரை தன் பங்கிற்கு பெருமிதமாக பேசினாள்.

“சரி நான் கிளம்புறேன் , நீங்க உடம்ப பார்த்துக்கங்க ,” என்று அந்த நபர் கிளம்ப முயற்சித்தார்.

“பிரதர் உங்க பெயர் சொல்லவில்லையே?” என்று அவரின் கையை கொடுத்தபடி கேட்டேன்.

“என் பெயர் , மோகன் தாஸ் காந்தி , என் தாத்தா வச்சது , அவர் ஒரு காந்தியவாதி “ என்று கூறி விடை பெற்றார் மோகன் தாஸ் காந்தி. எனக்கு அப்போது சட்டென்று கன்னத்தை அறைந்த மாதிரி இருந்தது.

வேலையை விட்டு விட்டு என் அப்பாவிற்கு உதவி செய்த மனித நேயம் மிக்க அந்த நபர் எங்கே? வீட்டிற்கு வந்து தூங்க போறேன் , ஆனா அந்த சாலையோரம் கிடந்த வயதானவரை காப்பாத்தாம வந்த நான் எங்கே?

எனக்கே என் மீது இனம் புரியாத வெறுப்பு.. இனி மாற்றியாகணும் , என்ற முடிவு எனக்கு. மனித நேயம் மிக்க சில மனிதர்கள் இருக்க தான் செய்கிறார்கள். நமக்குள் இருக்கும் மனித நேயத்தை வெளி கொண்டு வருவோம். மற்றவர்களுக்கு ஆபத்து காலத்தில் உதவி செய்வது மிக பெரிய விஷயம். அவர்களுக்கு நாம் கடவுளை போல் தெரிவோம்.

நமக்கோ அல்லது நம் குடும்பத்தினருக்கோ ஏதும் நடக்கும் வரையில்,

நாம் அதனை பற்றி யோசிப்பது இல்லை. 

நமக்கு எதுக்கு வம்பு என்று அங்கிருந்து நகர்வோம்.

மனித நேயம் மலர வேண்டும். மனிதனே கடவுள் போல தோன்றுவான்.

மனித நேயம் வளரட்டும் , அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம்….

எழுத்தாளர் மணிராம் கார்த்திக் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அவரவர் நியாயங்கள்!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

    நீ இல்லாமல் நானும் வாழ்கின்றேனே? (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு