அகத்தியன் வார்த்தெடுத்த அருந்தமிழை
அறுத்தெறிந்து விட்டு – நீ
அந்நிய மொழியை தத்தெடுத்து விட்டாய் உன் தாய்மொழியோ இங்கு தத்தளிக்கிறது!
பாண்டியனின் அவையில் இருந்தவள் இன்று தார்ச்சாலைக்கு வந்துவிட்டாள்
நடுதெருவுக்கு வந்துவிட்ட
என் தாய்மொழியை
கைப்பிடித்து அழைத்து வருவேன்
மீண்டும் ஒரு காவியம் படைக்க!
பொதிகையில் ஊற்றெடுத்து
பொற்றமிழாய் உருவெடுத்த
பைந்தமிழ் பொற்கொடியே!
அன்று கம்பனின் ஏட்டில் இருந்தாய்
இன்று என் கவிதை எழுத்தில் இருக்கிறாய் அந்தாதி பாடுமளவிற்கு அறிவில்லையே அருந்தமிழே என்னையும் அரவணைத்துக் கொள்வாய்!
பூத்த பூச்சரத்தில்
பூக்காத என்னையும்
வெண்பாவால் பூக்க வைத்த
பூ மகளே நீ வாழ்க!
குயிலின் இனிமையும்
குழலின் இன்னிசையும் கொண்ட
குறிஞ்சிக் குல மகளே நீ வாழ்க!
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings