2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23
காவ்யா, ஜெய், ஆதர்ஷ் மூன்று பேரும் வழக்கமான ரெஸ்டாரண்டில், வழக்கமான இடத்திலமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தார்கள்.
“ரொம்ப தேங்க்ஸ் ஆதர்ஷ் ..உங்க உதவி ரொம்ப பெரிசு. உங்க ஃப்ரெண்ட் உதவியால எங்க குடும்பத்தை நல்லபடியா காப்பாத்திட்டீங்க.. நீங்க செஞ்ச இந்த உதவிய நான் மறக்க மாட்டேன்” நெகிழ்வாக பேசினான் ஜெய்.
” நீரஜா ரொம்ப பயந்து போயிருந்தாங்களே ப்ரோ… இப்ப எப்படி இருக்காங்க. ..”
“குடும்பத்தினர் எல்லோரும் ஒன்னா இருந்திருக்காங்க. இவளை மட்டும் தனியா கட்டிப்போட்டு மிரட்டவும் அவ ரொம்ப பயந்துட்டா..மத்த எல்லாரும் ஓகே தான் ..கொஞ்சம் கொஞ்சமா நார்மல்சிக்கு திரும்பிட்டாங்க.. இன்னும் ஒன்னு ரெண்டு நாள்ல நார்மலாயிடுவாங்க. ..”
“நீரஜா வேலைக்கு வரவே பயப்படறா.. ஆனால் அவள் சம்பாத்தியம் குடும்பத்துக்கு தேவையும் கூட ..அதனால வேற இடத்தில வேலை தேடறேன்னு சொல்றா.. இந்த வேலையை விட்டுடறேன்னு சொல்லிகிட்டிருக்கா…”
“அவசியம் இல்ல ஜெய்! ஒன்னு புரிஞ்சுக்கோங்க…வம்பு பேசுறவங்களுக்கும்… முதுகுக்குப் பின்னாடி பேசுறவங்களுக்கும் மரியாதை கொடுத்து வாழ்க்கைல பயந்துகிட்டிருந்தா, அதுக்கு ஒரு முடிவே இல்லாம போயிடும். நான் நீரஜாகிட்ட பேசுறேன். அவங்க எங்க கம்பெனில என்ன வேலை பார்க்க முடியுமோ, அந்த வேலை பார்க்கட்டும். புரெடக்க்ஷன் சைடுல பாக்கட்டும் .அதுக்காக வேலையை விட வேண்டாம் ..”
தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்த காவ்யா..
” என்ன மன்னிச்சிடு ஜெய் ..இவ்வளவுக்கும் காரணம் எங்கப்பான்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்குது ..ஆதர்ஷையும், நீரஜாவையும் பத்தி யாரோ அப்பாகிட்ட தப்பா சொல்லியிருக்காங்க. உடனே இவர் இந்த மாதிரி பண்ணியிருக்காரு. எனக்கே எங்கப்பா பண்ணினத நினைச்சா கேவலமாயிருக்கு. நான் நீரஜா கிட்டயும், அப்பா அம்மா எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்டதா சொல்லிடு .”
காவ்யா சட்டென்று உடைந்து போய் அழ ஆரம்பித்தாள். “காவ்யா அழாதீங்க ..உங்கப்பா மட்டுமல்ல.. இந்த வேலைய உங்கப்பா செய்யலைன்னா.. எங்கப்பா செஞ்சிருப்பாரு.. அவரும் இதே டைப் தான். இவங்க ஏன் இப்படி இருக்காங்கன்னு சுத்தமா எனக்குப் புரியல. இவங்களுக்கு முக்கியமானதெல்லாம் இவங்களுடைய பணம், புகழ், அந்தஸ்து, பிஸினஸ் இவ்வளவே ..இவங்களுக்கு உறவுகள் எவ்வளவு முக்கியம்னு தெரியல …மென்மையான உணர்வுகளும், மனமும் இவங்களுக்கு கிடையாது .”
“ப்ரோ நீங்க இன்னும் ரெண்டு, மூணு நாள்ல சிங்கப்பூர் போகணும்னு சொன்னீங்க.. அதுக்குள்ள நாம ஏதாவது ஒரு முடிவெடுக்கனும்”
“ஆதர்ஷ் ப்ரோ ! நேத்து நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது என் மனசு ஒரு நிலையில இல்லை. என் குடும்பத்தை இங்க விட்டுட்டுப் போறதுக்குக் கூட பயமாயிருக்கு. எந்த நேரத்தில் யாரால ஆபத்து வரும்னு தெரியல.. இத்தனைக்கும் எனக்கும் காவ்யாவுக்கும் உள்ள காதல் அவங்க அப்பா, அம்மாக்கு இன்னும் தெரியாது. தெரிந்தால் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க …என்ன நடக்கும்”
“ஒன்னு புரிஞ்சுக்கோங்க ப்ரோ.. இந்த கூட்டம் காதல மதிக்கிற கூட்டம் கிடையாது. அவங்களால உங்க உயிருக்கு கூட ஆபத்திருக்கு… அதனால நீங்க யோசிக்காமல் இப்போதைக்கு சிங்கப்பூர் போறது தான் மிகச் சரியான முடிவு. நீரஜாவையும், உங்க குடும்பத்தையும், நான் பத்திரமா பார்த்துக்கறேன். நீரஜாவுக்கு இனிமேல் என்னால் எந்தப் பிரச்சனையும் வராது. என்னால் அவங்களுக்கு ஏற்கனவே நிறைய பிரச்சனை. அதனால் இனிமே எங்க கம்பெனில வேலை பார்த்தாக் கூட புரெடக்க்ஷன் சைடுல வேலை பாக்கச் சொல்றேன். அதனால நீங்க அவங்களப் பத்தி கவலைய விடுங்க ..”
“இந்தக் கல்யாணம் நடக்கலைன்னா உங்கப்பாவும், காவ்யா அப்பாவும் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு புரியல… எனக்கு என்ன முடிவெடுக்கிறதுன்னு தெரியல..”
“காவ்யா நீ என்ன நினைக்கிற ..அதச் சொல்லு..”
” கண்டிப்பா உண்மை ஜெய் .. எங்கப்பாவால உன் உயிருக்கு ஆபத்து ஏதாவது ஏற்படும்னா அதை விட நீ சிங்கப்பூர் போயிடு என்ற காவ்யா மெதுவாக…” நிச்சயம் பண்ண கல்யாணத்த எப்படி நிறுத்தன்னு தெரியல..நீங்க ஏதாவது யோசனை வச்சிருக்கீங்களா?”
“நான் ரொம்ப யோசிச்சதுல ஒரு முடிவு எனக்கு சரியா தோணுது .ஆனா நீங்க ரெண்டு பேரும் ஒத்துக்குவீங்களான்னு எனக்குத் தெரியல…”
“சொல்லுங்க ஆதர்ஷ் ப்ரோ.. ஏதாவது செய்யனும் கண்டிப்பா …”
“ப்ரோ.. நான் சொல்லுவது முழுக்க, முழுக்க உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா மட்டுமே.. செய்யப்போற ஒரு விஷயம் .” காவ்யா ஜெய் இருவரும் ஆதர்ஷ் என்ன தீர்வு கூறப் போகிறான் என்பதை ஆவலுடன் கேட்க தயாரானார்கள் ..
“இப்போதைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கல்யாணம் பெரியவங்க குறிச்சபடி நடக்க வேண்டியது. ரெண்டு வீட்டாரும் என்னையும், நீரஜாவையும் பத்தி சந்தேகப்பட்டாங்களே ஒழிய உங்கள் இருவர் காதல் இன்னும் அவங்களுக்குத் தெரியல ..அது நமக்கு மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்.
நானும் காவ்யாவும் கல்யாணம் முடிந்த கையோடு பெரியவர்களுக்கு தெரியாமல் டைவர்ஸ் அப்ளை பண்ணிடுறோம். .காவ்யா வெளியுலகத்திற்கு என் மனைவியாக எங்கள் வீட்டின் மருமகளாக இருக்கட்டும். என் அம்மா அவங்களை நன்றாக பார்த்துக் கொள்வாள். மேலும் நானும் அவங்ளை என் உடன்பிறவா சகோதரியாக நினைத்துக் கொள்வேன். இந்த ஒரு வருடத்தில் காவ்யா தன்னுடைய படிப்பை முடிக்கட்டும். நீங்களும் உங்களுடைய வேலையில் செட்டில் ஆகிக் கொள்ளுங்கள்.”
“ஒரு வருடம் கழித்து, இதே போல நாம பேசி முடிவு பண்ணுவோம். அன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் பிளான் பண்ணி கல்யாணம் பண்ணிக்கங்க ..நான் காவ்யாவுக்கு டைவர்ஸ் கொடுத்திடுவேன் ..”
” அப்பவும் பெரியவங்க எப்படி விடுவாங்க .? “
“நீங்க சிங்கப்பூர்ல செட்டில் ஆயிட்டீங்கன்னா. கல்யாணம் பண்ணிட்டு அங்க போயிடுங்க ..கொஞ்ச காலம் வரைக்கும் நீங்க அங்கேயே இருந்தீங்கன்னா ..அவங்க கோபம் தணிஞ்சிடும் ..அப்ப இருக்கிற சந்தர்ப்பத்தைப் பொறுத்து நாம முடிவு பண்ணிக்கலாம்..இது நமக்குள்ள ஒரு எழுதப்படாத ஒப்பந்தமா இருக்கட்டும் “
“நம்ம அப்பாக்கள் மாதிரி கிரிமினலான ஆட்களுக்கு அவங்க வழியிலேயே போய் தான் நம்ம காரியத்த சாதிக்கனும். இதுக்கு நீங்க ரெண்டு பேரும் சரின்னு சொன்னா நாம இதை ஃப்ரோசீட் பண்ணுவோம்… இல்லை நீங்க வேற ஏதாவது யோசனை இருந்தாலும் சொல்லுங்க ப்ரோ..”
காவ்யாவுக்கும் ஜெய்க்கும் இதைவிட வேறு நல்ல யோசனை இருப்பது போல தோன்றவில்லை …இந்த ஒப்பந்த திருமணத்திற்கு இருவரும் தலையசைத்தனர்.
(அலை வீசும் 🐬)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings