2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5
இதுவரை:
ராம்குமார் திதி கொடுக்க வராதது எண்ணி தவிக்கிறாள் மகா ..உல்லாச உலகில் ராம்குமார் வந்தனாவும்.
இனி:
இரண்டு நாட்கள் சொர்க்கத்தின் உச்சியில் இருந்த வந்தனாவும், ராம்குமாரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். இருவருக்குள்ளும் ஒரு சோர்வு, அடுத்து வரும் நாட்களில் யதார்த்த வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமே என்று.
வந்தனா அவன் தோளில் சாய்ந்து கொண்டே, “ராம்.. நீ அவசியம் சென்னைக்கு நாளை போகனுமா? இன்னும் ரெண்டு நாள் என்கூட இருந்தால் என்ன” என்று சிணுங்கினாள்.
“என்னடா.. இன்னும் கொஞ்ச நாள் தானே…பொறுத்துக்கோ. அப்புறம் நாம எப்போதும் சேர்ந்துதானே இருக்கப் போகிறோம். நீ சென்னை வீட்டைப் பாக்கலியே… ரொம்ப அழகா வந்திருக்கு.. அழகான தோட்டம்.. ஸ்விம்மிங் ஃபூல் அமைக்கச் சொல்லியிருக்கேன். இன்னும் வேலை முடிய ஒரிரு மாதம் ஆகும். இன்டீரியர் மட்டும் 2 கோடி… பக்காவாப் ப்ளான் வச்சிருக்கேன் .எல்லா வேலையும் முடிந்து ரெடியாகட்டும், உன்னைக் கொண்டு போய் காண்பிக்கிறேன். நீயும் அம்மாவும் சென்னை வந்து வீட்டை பார்த்துட்டுப் போங்க. உங்களுக்கு தேவையானது… வேறு ஏதாவது மாறுதல் சொன்னா அதையும் செஞ்சிடலாம்.”
“ஓகே ராம்! எனக்கும் அந்த வீட்டை பாக்கனும்னு ஆசையா தான் இருக்கு .கொஞ்சம் ஷூட்டிங் எல்லாம் அதிகம் இல்லாத சமயம் சொல்றேன் ..ஏதாவது லீவு, ஸ்டிரைக் வரும். அந்த நேரத்துல நானும், அம்மாவும் சென்னை வர்றோம்.”
வந்தனாவுடன் வீடு திரும்பிய ராம்குமார். அடுத்து மதியம் கிளம்பக் கூடிய பிளைட்ல சென்னைக்கு டிக்கெட் போட்டான். வந்தனாவிடமும், அவள் அம்மாவிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிய ராம்குமாருக்கு, மகாவை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற கவலை மனதில் வந்து அமர்ந்துகொண்டது.
இந்த மகா ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்பாள். இவளை சமாளிப்பது பெரும் பாடுதான்.. திதி கொடுக்க வேற போகவில்லை மகா ரொம்ப கோபத்தில் இருப்பாள் அவளை எப்படி சமாதானம் பண்ணுவது.. வராததற்கு என்ன காரணம் சொல்வது என்று யோசித்தான்.
திடீரென ஒரு யோசனை தோன்ற.. ஏர்போர்ட்டுக்கு கார் அனுப்பச் சொல்லி மகாவுக்கும், கார் எடுத்து வரச்சொல்லி சுந்தரத்திற்கும், போன் பண்ண நினைத்தவன் தன் நினைப்பை மாற்றிக் கொண்டான்.
சென்னை ஏர்போர்ட்டில் இறங்கியவன் நேராக தன் நண்பன் டாக்டர் ஆனந்தராஜை போய் பார்த்தான்.
“டேய் ராம் என்னடா நீ கால் டாக்சியில் வந்திருக்க ..வீட்ல ஏழெட்டு கார் வச்சிருப்ப… உன் பி.எம்.டபிள்யூ கார் ஏன்னாச்சு ..ஓ அது பெங்களூர்ல சின்ன மேடம் வீட்ல நிக்கிதா ..”
“டேய் ஆனந்த்! என்ன பத்தி நல்லா தெரிஞ்சும் கலாய்க்கிற… நான் ஒரு அவசர உதவியா தான் உன்னைத் தேடி வந்திருக்கேன். வந்தனா மேட்டர்லாம் அப்புறமா சொல்றேன். இப்போ எனக்கு ஒரு உதவி செய்யனும்” என்று ரெண்டுநாள் நடந்ததை சொல்லி முடித்தான் .
“உன்னுடைய ஸ்கிரிப்ட்ல என்னுடைய ரோல் எங்க இருக்குடா.. “
“டேய்! இப்ப நான் போயி மகாகிட்ட திதிக்கு வராததுக்கு ஒரு சரியான காரணம் சொல்லனும். எனக்கு தலையில ஒரு கட்டும்… கையில ஒரு கட்டும் போட்டு விடு. நான் போயி ஏதாவது காரணம் சொல்லி மகாவை சமாளிச்சிடுவேன். அவ ஒரு சென்டிமெண்ட் இடியட்.. சென்டிமென்ட்டா ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி பிளே பண்ணினா உருகிப் போயிடுவா…”
“பக்காவா பிளான் வச்சிருக்கியா! சரியான கில்லாடிடா… இப்படி கெட்டிக்காரத்தனமா இருந்தா தான் ரெண்டு குதிரையில வண்டி ஓட்ட முடியும். அது சரி அப்புறம் கட்டைப் பிரிக்கும் போது காயத்தை எங்கேன்னு கேட்டா என்னடா சொல்லுவே ..”
“அதெல்லாம் நான் அப்ப ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கறேன் இல்ல நாலு நாள் நார்த் இண்டியா போயிட்டு வரேன்னு சொல்லிட்டு பெங்களூர் போயிட்டு வரும் போது காயம் ஆறிப் போயிருச்சுன்னு சொல்லிடுவேன் ..”
“அடப்பாவி, சரியான ஆளு தாண்டா நீ! பாவம் மகா சிஸ்டர்! எனக்கென்ன நீ சொல்றபடி செய்றேன்” என்ற ஆனந்த் கட்டை போட்டு விட்டான். அங்கிருந்து ஒரு கால் டாக்சி பிடித்து நேராக வீடு வந்து இறங்கினான் ராம்குமார் .
அவனை அந்தக் கோலத்தில் பார்த்த மகா பதறிக் கொண்டு ஓடி வந்தாள் …
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings