2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8
பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15
இதுவரை:
கவியினியாள் கர்ப்பமாக இருப்பதை அலுவலகத்தில் எல்லோரிடமும் கூறுகிறாள் அவளின் தோழி மதி. ஆதியும் அவளின் ஒவ்வொரு ஆசையையும் நிறைவேற்றி வைக்க முயல்கிறான். அவளுக்கு உதவியாய் இருந்து பார்த்துக் கொள்கிறான். சூழல் இப்படி இருக்க புது வருடம் அவர்களுக்கு என்ன ஆச்சர்யங்களை தரப்போகிறது என்பதை காண்போம்.
இனி:
புது வருடத்தை நல்லபடியாக அமைத்து தர வேண்டி கோவிலுக்குச் சென்று வழிபட்டு விட்டு இரண்டாம் நாளே மருத்துவமனைக்குச் சென்றோம்.
ஈரோட்டில் உள்ள உறவினரின் மருத்துமனைக்கு வந்தோம். அங்கும் என்னைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் விசாரித்து எழுதி வைத்துக் கொண்டனர்.
“ஆர்.சி.எச் ஐடி சொல்லுங்க” அங்கிருந்த செவிலியர் கேட்டதும் இருவரும் விழித்தோம்.
“அப்படின்னா”
“நீங்க இன்னும் அரசாங்கத்துல பதிவு பண்லயா.. ஆரம்ப சுகாதார மையத்துல பண்ணணும். அங்க பண்ணிருந்தா இந்நேரம் ஐடி வந்துருக்கும்.”
“ஆமா.. அன்னிக்கு அந்த ஹாஸ்பிடல்ல சொன்னாங்க நான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் கவி”
“என்ன ஆதி இதெல்லாமா மறப்பிங்க”
“பரவால்ல வெயிட் பண்ணுங்க.. நான் டாக்டர்ட்ட கேட்டுட்டு வரேன்” நான் கத்தி பேசியதை கேட்ட செவிலியர் எங்களை அமரச் சொல்லிவிட்டு மருத்துவரிடம் கேட்கச் சென்றார்.
“எப்போ சொன்னாங்க ஆதி”
“தைராய்டு டெஸ்ட் குடுத்துருந்தோம்ல.. அது ரிசல்ட் சொல்ல ஹாஸ்பிடல்ல இருந்து கால் பண்ணாங்க.. ஒரு தடுப்பூசி போடணும்.. கவெர்மென்ட்ல போடுவாங்க.. இல்ல எங்ககிட்ட போட்றதுனாலும் வாங்கன்னு சொன்னாங்க.. அப்போதான் ஆரம்ப சுகாதார மையத்துல போய் பதிவு பண்ணி நம்பர் வாங்கிட்டு வாங்கன்னு சொன்னாங்க கவி”
“இது எதுவுமே ஏன் என்கிட்ட சொல்லல.. செக்அப் போறப்ப சொல்லாம உன்கிட்ட கால்ல இவ்ளோ சொல்லிருக்காங்க.. நீயும் அத மறந்துட்ட.. கவனம்லாம் போன்ல லேப்டாப்ல தான் இருக்குல்ல ஆதி உனக்கு”
“இல்லை கவி.. ஏதோ ஒர்க் டென்ஷன்”
“தைராய்டு ரிசல்ட் என்னாச்சு?”
“நார்மல் தான்.. அதனாலதான் நான் அப்படியே விட்டுட்டேன். இதோட சீரியஸ்னஸ் எனக்கு தெரில”
எதுவும் பேசாமல் கோவமாக அமர்ந்திருந்தேன்.
“கவியினியாள்” செவியிலியர் என்னை அழைத்தார்.
“மேடம்கிட்ட சொன்னேன். நீங்க மறுபடியும் கூட போய் அந்த ரெஜிஸ்டர் பண்ணிடுங்க.. இப்போ ஸ்கேன் டாக்டர் இருக்காங்க.. மூணாவது மாசம் ஸ்கேன் பாக்க இது கரெக்ட் ஆனா டைம்.. அது பாத்துட்டு ஒரு டெஸ்ட் ஒன்னு குடுக்கணும். மரபணு சோதனை அது கொடுத்துட்டு மேடம் பாத்தரலாம். ஒரு பத்து நிமிஷத்துல கூப்பட்றேன்”
நான் மனதை அமைதிபடுத்திக் கொண்டேன். ஸ்கேனில் பார்க்கப் போகும் குழந்தை நல்லபடியாக இருக்க வேண்டும் என்று மட்டும் வேண்டிக்கொண்டேன்.
சீக்கிரமே என்னை அழைத்தார்கள். ஸ்கேன் ரூம் மிகவும் அமைதியாக இருந்தது. என்னிடம் அதிகம் பேசவில்லை. என் பெயரையும் வயதையும் கேட்டுக் கொண்டு ஸ்கேன் செய்யத் தொடங்கினார்.
ஸ்கேன் பார்த்து உடன் இருந்த உதவிப் பெண்ணிடம் ஒவ்வொன்றாய் சொல்லச் சொல்ல அவர் கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொண்டார். சில நிமிடங்களில் தேவையானதைப் பார்த்துக் கொண்டு என்னை கிளம்பச் சொன்னார்.
வயிற்றை துடைத்துக் கொண்டு வெளியே வந்து அமர்ந்தேன். ஆதி என்னிடம் எதுவும் பேசவில்லை.
நானும் தான் நிறைய மறக்கிறேன். தைராய்டு டெஸ்ட் என்னவாயிற்று என்று கேட்டிருக்க வேண்டும். நானும் தான் அலைபேசியில் நேரம் செலவளிக்கிறேன். ஆதியிடம் அப்படி கோவப்பட்டிருக்கக் கூடாது.
“ஹலோ மிஸ்டர் ஆதி” ஆதியின் காதருகே சென்று கூப்பிட்டேன்.
ஆதி எதுவும் பேசவில்லை.
“ஆதி நமக்கு பையனா பொண்ணான்னு சொல்லிட்டாங்க”
“என்ன சொல்ற கவி.. என்ன குழந்தைன்னு சொன்னாங்களா”
“ஹாஹா.. சும்மா சொன்னேன் உன்னை பேச வைக்க.. என்ன ஜெண்டர்ன்னு கேக்கக் கூடாதுன்னு சைன் வாங்கிட்டு தான் உள்ளயே விட்டாங்க”
“அதான பார்த்தேன்”
“ப்ளசன்டா பொசிஷன்னு சொன்னாங்க.. அது வெச்சு கண்டுபிடிக்கலாம்ன்னு அக்சயா சொல்லிருக்கா.. அவகிட்ட கேக்கறேன்” நான் கர்ப்பமாக இருப்பதை முதன்முதலில் பகிர்ந்து கொண்ட என் நெருங்கிய தோழி அக்சயாவை அலைபேசியில் அழைத்தேன் ஆர்வம் தாங்காமல்.
“என்.டி ஸ்கேன்க்கு வந்துருக்கேன். ப்ளசென்டா ஆன்டீரியர்ன்னு சொன்னாங்க அப்போ என்ன குழந்தைடி”
“அத வெச்சு சொல்றது சும்மா கெஸ் தான்டி.. பொசிஷன் தான் அது..”
“பரவால்ல சொல்லு.. உனக்கு எப்படி இருந்தது. இப்படி இருந்தா என்ன குழந்தை”
“எனக்கு போஸ்டீரியர் பையன்னு சொல்லுவாங்க.. அதே மாதிரி பையன். ஐஸ்வர்யாக்கும் பையன் போஸ்டீரியர். சிலருக்கு அப்படியே நடக்கும் சிலருக்கு மாறும். இதயதுடிப்பு வெச்சு சொல்லலாம் சொல்லுவாங்க.. அதுவுமே நூறு சதவீதம் சொல்ல முடியாது. எல்லாமே பாதி உண்மை பாதி பொய்”
“அப்போ எனக்கு பொண்ணா.. சரி கூப்பட்றேன் வை டி”
“ஆதி.. அக்சயா நமக்கு பொண்ணு பொறக்கும்னு சொல்றா பொசிஷன் வெச்சி”
“சந்தோசம் தான”
“இல்லை எனக்கு பையன் வேணும்”
“எதுனாலும் ஓகேன்னு சொன்ன, இப்போ என்ன பையன் வேணும்கிற”
“எங்க வீட்ல நானும் அமுதினியும் தான.. பையன் பொறந்தா அம்மா அப்பா சந்தோசப்படுவாங்க”
“அப்போ ரெண்டாவதா பையன் பெத்துக்கலாம் கவி”
“அதுக்குள்ள அடுத்த குழந்தை ஆசையா”
“ஆமா.. எத்தனை வேணா பெத்துக்கலாம்”
“உனக்கென்ன எனக்கு தான ஸ்கேன் பிளட் டெஸ்ட் செக் அப்லாம்”
“ஏன் கவி இன்னிக்கு என்னை உள்ள கூப்பட்ல..”
“இவங்க ஸ்கேன் மட்டும் தான் பாக்கறாங்க.. ரிப்போர்ட் தந்தப்பறம் தான் நம்ம டாக்டர் பாக்க முடியும். அவங்க தான அத்தை சொன்ன டாக்டர்”
“ஆமா.. “
“என்கிட்டயே எதும் பேசல.. நானும் எதும் கேக்கல.. அவங்களுக்குள்ள பேசிக்கிட்டாங்க.. அததான் கேட்டேன். பேபி ஹார்ட் ரேட் நூத்தி எழுபதுன்னு சொன்னாங்க.. செர்விக்ஸ்ன்னு என்னவோ சொன்னாங்க”
“நெட்ல பாத்த ஹார்ட் ரேட் நார்மல் தான் வருது.. வேறென்ன கவி சொன்னாங்க”
“நம்ம குழந்தை எப்போ பொறக்கும்னு தெரியுமா ஆதி”
“தேதி சொன்னாங்களா எப்போ கவி?” என ஆதி ஆவலோடு என் பதிலுக்குக் காத்திருந்தார்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings