அனைவருக்கும் வணக்கம்,
சஹானா இணைய இதழின் தீபாவளி 2020 போட்டி அறிவிப்பை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
போட்டி அறிவித்த ஒரே நாளிலேயே, இன்ப அதிர்ச்சியாய் பல பதிவுகள் ஈமெயில் மூலம் நீங்கள் அனுப்பியது, நானே எதிர்பாராத ஒன்று, மிக்க மகிழ்ச்சி
கிடைக்கப் பெற்ற பதிவுகளில் சிலதை தேர்வு செய்து, தினமும் வெளியிட எண்ணி இருக்கிறேன்.
அதன் மூலம், எத்தனை பேர் அதை வாசிக்கிறார்கள் என்பதை, தேர்வு செய்வதற்கு ஒரு அளவீடாய் (Selection Parameter) எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது
அது ஒரு அளவீடு மட்டுமே, அதை வைத்து மட்டுமே தேர்வு செய்யப் போவதில்லை.
ஆனால் நிறைய பேர் வாசித்திருந்தால், அந்த பதிவிற்கு அதற்கேற்ப மதிப்பெண் கூடும்
எந்த பதிவை எத்தனை பேர் வாசித்தார்கள் என்பது பின்னர் பகிரப்படும்.
எனவே, உங்களுக்கு பிடித்த பதிவை வாசித்து வெற்றிப் பெறச் செய்யலாம்
நீங்களும் தீபாவளி 2020 போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பினால், இந்த linkல் போட்டி அறிவிப்பை காணலாம்👇
https://sahanamag.com/diwail2020contest/
தீபாவளி ரெசிபி போட்டி மட்டுமின்றி, மறக்க முடியாத தீபாவளி போட்டி மற்றும் குழந்தைகளுக்கான படம் வரையும் போட்டியும் உள்ளது. பாருங்கள், பங்கு பெறுங்கள், பரிசை வெல்லுங்கள். நன்றி
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
இனி, இன்றைய பதிவு, எளிமையான மற்றும் சத்தான இனிப்பு “வேர்க்கடலை உருண்டை” செய்முறையை, திருமதி. ராணி பாலகிருஷ்ணன் அவர்கள் பகிர்ந்துள்ளார், அதைப் பார்ப்போம்…
தேவையான பொருட்கள் :-
- வறுத்த வேர்க்கடலை – ஒரு தம்ளர்
- பொடித்த வெல்லம் – ஒரு தம்ளர்
- நெய் – ஒரு ஸ்பூன்
செய்முறை :-
- வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும்
- பொடி செய்த வெல்லம் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு திருப்பவும்
- அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாகப் போட்டு சுற்றி எடுக்கவும்
- வேர்க்கடலை ஒன்றிரண்டாக உடைந்தால் போதுமானது. வெல்லம் பொடியாகி நெய்யுடன் கலந்து உருண்டைகளாகப் பிடிப்பதற்கு ஏதுவாக இருக்கும் .
இந்த கடலை உருண்டை செய்வதற்கு மிகவும் எளிதானது. தின்பதற்கும் மிகவும் சுவையாக இருக்கும்
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் விருப்பமானதாக இருக்கும். அதோடு, சத்துகள் மிகுந்த ஆரோக்கியமான தின்பண்டமாகும்
வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்
சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇
ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி
சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇
Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
Very nice…tried it and my kids loved it 😍
Thank you so much for the response
Thank you very much dear
Super Anuty.. 👏👏
Thank you very much dear
Very healthy recipe
Thank you very much dear
Thk u for this recipe mam.. i m looking for peanut recipes box bcoz of high rich protein recipe…
Thank you very much dear
Super recipe. Tried at home and enjoyed. Thanks
Thank you very much dear