சிறு தானியங்கள் இப்போது பலரும் பயன்படுத்தத் துவங்கி இருக்கிறார்கள். அதில் நாம் சாதாரண அரிசியில் செய்யும் கலந்த சாதம் மாதிரி வரகு, குதிரைவாலி போன்றவற்றிலும் பண்ணலாம்.
அதேப் போல் பக்ஷணம் பண்ண முடியுமானு பார்ப்பதற்காக, வரகு அரிசியில் தேன்குழல் பண்ணத் தீர்மானித்தேன்.
முன்னெல்லாம் முள்ளுத் தேன்குழல், ஓமப்பொடி, ரிப்பன் பக்கோடா, மிக்சர்னு விதம் விதமாப் பண்ணிட்டு இருந்தேன். இப்போ பண்ணும் ஒரு தேன்குழலையே தீர்க்கணும்னு கவலையா இருக்கு.
தேவையான பொருட்கள்
- வரகு அரிசி – அரைக் கிலோ
- பாசிப்பருப்பு – நூறு கிராம்
- கடலைப்பருப்பு – நூறு கிராம்
- உப்பு – ஒரு டீ ஸ்பூன்
- பெருங்காயம் – அரை டீஸ்பூன்
- மாவு பிசைய நீர், வெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் எதில் பொரிக்கிறோமோ அதில் ஒரு அரைக் கரண்டி எண்ணெயைப் பொங்கக் காய்ச்சி மாவில் விட்டுப் பிசையலாம்.
- பொரிக்க எண்ணெய் உங்கள் விருப்பம் போல். நான் தேங்காய் எண்ணெய் அல்லது கடலை எண்ணெயில் பண்ணுவேன்.சுத்திகரிக்கப்பட்ட எந்த எண்ணெயும் பயன்படுத்துவது இல்லை.
தேன்குழல் செய்முறை
- முதலில் மாவைத் தயார் செய்துக்கணும், அது எப்படினு பாக்கலாம்
- அரைக் கிலோ வரகை எடுத்து வெறும் வாணலியில் வறுத்து, 100 கிராம் பாசிப்பருப்பு, 100 கிராம் கடலைப்பருப்பையும் அதே போல் வெறும் வாணலியில் வறுத்து அதோடு சேர்த்தேன்
- மிஷினில் கொடுத்து மாவு திரிச்சாச்சு.
- அப்புறம் மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிசைந்துக்கணும்
- எட்டுக் குழிக்கரண்டி மாவோடு ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய், பெருங்காயம் அரை டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் உப்புச் சேர்த்து நன்கு கலந்து கொண்டு, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டுச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையணும்.
- வெண்ணெய் பழக்கம் இல்லைனாலோ பிடிக்காது என்றாலோ அல்லது இல்லை என்றாலோ, பொரிக்கும் சமையல் எண்ணெயிலேயே அரைக்கரண்டியை நன்கு சூடு பண்ணி மாவில் விட்டுக் கைகளால் நன்கு கலந்த பின்னர், மாவில் ஜலம் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப் பிசைய வேண்டும்.
- முதல் ஈட்டில் ஒரு டீ ஸ்பூன் உப்புப் போட்டது எங்களுக்குக் கொஞ்சம் ஜாஸ்தியாத் தெரிஞ்சதாலே, அடுத்த ஈட்டில் முக்கால் டீ ஸ்பூன் தான் உப்புச் சேர்த்தேன். அது சரியா இருக்கு.
- ஆகவே உப்பு அதிகமாய்த் தெரிந்தால் நீர் விட்டுப் பிசையும் முன்னர் இன்னும் கொஞ்சம் மாவைச் சேர்க்கலாம்.
- தீபாவளி பக்ஷணம் செய்யறதிலே இது ஒரு சௌகரியம். மாவையும் சாப்பிட்டுப் பார்க்கலாம். பக்ஷணமும் பண்ணினதைச் சாப்பிட்டுப் பார்க்கலாம். அது என்னமோ தெரியலை! பக்ஷணத்தைச் சாப்பிட்டுப் பார்த்துட்டு உம்மாச்சிக்குக் காட்டலாம். உம்மாச்சி கோவிச்சுக்கறதில்லை. கீழே பிசைந்த மாவு பாத்திரத்தில்
அடுத்து அடுப்பில் வேகும் தேன்குழல்கள்👇
- சத்தியமாய்ச் சொல்றேன். இது வரகு அரிசியில் செய்த தேன்குழல் தான். ஏனெனில் நம்ம ரங்க்ஸுக்கே ஆச்சரியம்! இப்படி வெள்ளையா வருதேனு! 😊
சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇
ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி
சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇
Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
கீதாக்கா சூப்பரா இருக்கு ரெசிப்பி!!!
கீதா
நன்றிங்க
தி/கீதாவா அது? நீங்களும் பண்ணிப் பாருங்க!
Thank you