தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 டம்ளர்
உளுத்தம் பருப்பு – 1/4 டம்ளர்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
Checkout Senbagam Ganesh’s YouTube link for more recipes – https://m.youtube.com/channel/UC9LpUnEj5lLVtaKoAl2iXgw/videos
செய்முறை
1) முதலில் பச்சரிசி , உளுத்தம் பருப்பு இரண்டையும் சேர்த்து நன்றாக கழுவி, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
2) ஊறியதும் மை போல் நைசாக அரைத்துக் கொள்ளவும்
3) அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு , தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
4) ஒரு வாணலியில் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் சூடு பண்ணவும்
5) எண்ணெய் சூடானதும் கரைத்து வைத்திருக்கும் பணியார மாவை ஒரு குழிக்கரண்டி எடுத்து எண்ணெய்யில் மெதுவாக ஊற்றவும்
6) பணியாரம் மேலே எழும்பி வந்ததும் ஒரு நிமிடம் வேக விட்டு மறுபுறம் திரும்பி விட்டு ஒரு நிமிடம் வேக விடவும்
7) இருபுறமும் நன்றாக வெந்ததும் பணியாரத்தை எண்ணெயிலிருந்து எடுக்கவும்
வெள்ளைப் பணியாரத்திற்கு பொருத்தமான கார சட்னி வைத்து சூடாக பரிமாறவும்.
சிறு குறிப்பு : பணியார மாவு அரைத்ததும் பத்து நிமிடம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, அதன் பின்னர் பணியாரம் ஊற்றிப் பாருங்கள் பணியாரத்தின் வடிவம் படத்தில் உள்ளது போல் அழகாக வரும்
Silk Fluence Studio
Order Customized Festive Bangles at Reasonable Prices…👇
Checkout Instagram page for Sample Designs – https://instagram.com/mathiv2020?igshid=11636k373gwho
GIPHY App Key not set. Please check settings