வணக்கம்,
ஒன்றே முக்கால் அடியில் வாழ்வுக்கு தேவையான அனைத்து படிப்பினைகளையும் பொக்கிஷமாய் நமக்களித்த, திருவள்ளுவர் பற்றியும் திருக்குறளின் சிறப்பு பற்றியும், சஹானா இணைய இதழ் சேனல் வாசகர்களுக்காக பகிர்ந்துள்ளார் மங்கையற்கரசி அவர்கள்
நிறைய விருதுகளும் அங்கீகாரங்களும் பெற்றவர், ஏற்றத்தாழ்வுகள் பல கண்டு, வாழ்வில் முன்னேற்றத்தை கண்டவர்
சககலாவல்லி என்ற பதத்திற்கு ஏற்ப, சமையலில் புதுமைகள் செய்தல், கைவினை பொருட்கள் செய்தல், இது போல் இன்னும் பல திறமைகள் கொண்டவர்
தமிழ் மீதும் தமிழ் ஆக்கங்களின் மீதும் ஆர்வம் கொண்டு, அதை அடுத்த தலைமுறைக்கு ஒரு ஆக்கமாய் செய்யும் ஆர்வம் கொண்டவர்
தன் நேரத்தை ஒதுக்கி, வாரம் ஒரு பதிவாய் திருக்குறள் பற்றிய விடியோவை, நம் சஹானா இணைய இதழ் சேனலில் வெளியிட இருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
இந்த தமிழ் புத்தாண்டு நாளில், உலகப்பொதுமறையாம் திருக்குறள் பற்றிய இந்த வீடியோவை உங்களிடம் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி
இந்த வாரம், “திருக்குறளின் சிறப்பும் திருவள்ளுவர் வரலாறும்” என்ற தலைப்பில் வீடியோ பகிர்ந்துள்ளார்
அடுத்த வாரம், மீண்டும் ஒரு திருக்குறள் பதிவுடன் சந்திக்கிறோம். நன்றி
மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இது, ஏப்ரல் 2021 YouTube Video போட்டிக்கானது
நீங்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பினால், உங்க வீடியோவை contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். மாதம்தோறும் சிறந்த ஒரு வீடியோவுக்கு சிறப்புப் பரிசு, மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். நன்றி
வீடியோ இதோ👇
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்