எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சூரியன் முகத்தில் தன் கிரணங்களால் உஷ்ணப்படுத்திய போது தான் கதிருக்கு விழிப்பு வந்தது. எழும்பியதும் இடிந்து கிடந்த தன் வீட்டைப் பார்த்தான்.
தன் வீட்டோடு சேர்த்து இருபத்திநான்கு வீடுகளை அரைகுறையாக முனிசபல் ஆபிஸி லிருந்து புல்டோஸர் கொண்டு வந்து எல்லாவற்றையும் இடித்து தள்ளி விட்டு போனது ஞாபகம் வந்தது.
இப்போது மனதில் கொஞ்சம் துக்கம் இருந்தாலும் கூடவே சிரிப்பும் வந்தது. வீடென்று எதைச் சொல்வீர்கள் என்று கேட்டதும் ஞாபகம் வந்தது.
‘தன்னுடைய கவித்தன்மையால் உடைந்து கிடக்கும் இந்தச் சுண்ணாம்பு சுவர்க ளையோ, மேல் மட்டத்திலிருந்து தட்டி விட்டு கீழே உடைந்து கிடைக்கும் ஆஸ்பெட்ஸ் டாஸ் ஓடுகளையோ வர்ணிக்கவோ கவிதை பாடவோ முடியுமா’ என்றும் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தான்.
வீடென்று எதைச் சொல்வது. இதோ உடைந்து கிடக்கும் ஓடுகளையும், ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் செங்கல் துண்டுகளையும் சிமெண்ட் பூச்சுகளையும் சேர்த்தா வீடென்று வர்ணிக்க முடிகிறது.
நேற்று வரை இந்த. இதோ குட்டிச் சுவராக நிற்கும் மூடிய இடத்தை என்னுடைய வீடு என்று மார்தட்டி கதவு திறந்து தனிமைப்படுத்திய மறைவில் புழங்க முடிந்தது.
எத்தனை நாள் வெறும் உள்ளாடைகளோடு என்னுடைய வீடு என்று சொல்லும் இடத்தில் என்னால் தனிமையாக சுற்றி வர முடிந்தது. இனி இந்த இடிந்த கட்டிடத்தில் நான் வலம் வந்தால் பைத்தியக்காரப்பட்டம் தான் கிடைக்கும்.
எத்தனை நாள் என் மனைவியோடு இங்கு குடித்தனம் நடத்தினேன். என்று நினைத்த பாத்து தான் பக்கத்து வீட்டுக்காரன் எல்லாம் எங்கே போனார்கள் என்ற நினப்பு வந்தது.
வீடு என்பது வெறும் செங்கல் சுண்ணாம்பும் சிமெண்டும் கலந்து கட்டுவதால் முடிவ டைந்து விடுகிறதா? அதிலே வாசம் செய்யும் மனிதனுடைய அடிப்படை உரிமைகள் கூட பாதுகாக்கின்ற இடமில்லையா இது.
என் வீட்டிற்கு அருகில் குடியிருந்தவர்கள் எல்லாம் மனைவி குழந்தைகளோடு வாழந் தால் நட்பும் சுற்றமும் அவர்களுக்கு புகலிடம் தந்து விட்டன. ஏன் என்னை மட்டும் யாரும் தன் வீட்டில் தங்கும்படி அழைக்கவில்லை.
நான் வாழ்ந்த வாழ்க்கை முறையில் செய்த அலட்சியங்களா? மனைவியை மட்டும் வைத்துக் கொண்டு என் விட்டத்தை குறுக்கிக் கொள்ள விரும்பாமல் பல பெண்களைத் தேடிச் சென்ற சவடால்தனத்தினால் என்னை ஒதுக்கி விட்டார்களோ?
என்னுடைய அடி தாங்க முடியாமல் ஓடிப் போன மனைவி தாரிணியின் நினைப்பு வந்தது. என்னை அவளுடைய நிலையில் வைத்துப் பார்த்தால் கண்டிப்பாக கணவனை எதிர்த்திருப்பேன். பாவம் அப்பிராணி. பயந்து போய் அம்மா வீட்டிற்கு ஓடி விட்டாள்.
நான் அடித்த லூட்டிக்கும், போதை மயக்கத்தில் போட்ட சண்டைகளுக்கும் பயந்து இப்போது புரிந்தது. கூட இந்த வட்டாரத்தில் என்னோடு யாரும் பேசுவது கூட குறைந்து போய் விட்டது.
வீடு என்று எதைச் சொல்வது. மனைவி குழந்தைகளோடு அமைதியாக குடித்தனம் நடத்தும் இடத்தையா… அப்படியானால் நான் இவ்வளவு நாளும் வாழ்ந்த வாழ்க்கை பயனற்றது. இதை வீடென்று கூட கூறமுடியாது என்று சொல்வதற்கு மெனக்கட்டு முனி சிபல் புல்டோஸர் கொண்டு வந்து என் வீட்டை இடித்து எனக்கு ஞானோதயம் தந்து விட்டு போனதா. கதிருக்கு உள்ளே கொஞ்சம் குழப்பம் இருந்தாலும் தெளிவு பிறந்திருந்தது.
இனி ஒரு சிறிய குடிசை போட்டுக் கொண்டு தாரிணியை அழைத்து வந்து இங்கே குடியேற்றி இதை ஆலயமாக்க முடியாவிட்டாலும் ஒரு வீடாகவாவது மாற்ற வேண்டும் என்று எண்ணியவாறு எழுந்த போது சுற்றி அந்த ஏரியா மக்களோடு எம்.எல்.ஏ பார்வை யிட வந்தவர். கதிர் பயப்படாதே சீக்கிரத்தில வீட்டைக் கட்டித் தரச் சொல்லுகிறேன். என்றதும் கதிர் அதை உடனடியாகச் செய்யுங்கள் என்று எம்.எல்.ஏ வின் காலில் விழ மக்கள் எல்லோரும் ஆச்சரியத்தோடு கதிரை நிமிர்ந்து பார்த்தார்கள்.
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings