in ,

வீடு (சிறுகதை) – ச. பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர் மாவட்டம்.

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

 பெரிய மரம் ஒன்றில் அழகிய தூக்கணாங்குருவி கூடு. அதில் தாய்பறவையும்  இரண்டு குஞ்சு பறவைகளும் வசித்து வந்தன.

 குஞ்சு பறவைகளில் ஒன்று அம்மா  தின்பண்டம்  ஏதாவது வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன் குருவிக்கூட்டின் வெளியே எட்டிப் பார்த்தது.

 தீரென அந்த குருவி குஞ்சு  கத்தியது அம்மா நம்ம வீட்டு கிட்ட  யாரோ நிறைய பேர் நிக்கிறாங்க அம்மா என்றது குருவி குஞ்சு.

 உடனே தாய் பறவை வெளியே எட்டிப் பார்த்து,அவங்க இந்த நிலத்துல வீடு கட்ட வந்திருக்காங்க. அதாவது வீட்டுக்கு மனை போட வந்திருக்காங்க  பாப்பா என்றது.

 அதற்கு குஞ்சுகுருவி மனை போடுவது என்றால் என்னம்மா? என்றது.

 தாய் பறவை சொன்னது வீடு கட்டும் முன்பாக  சாமியிடம் இந்த வீடு நல்லபடியாக அமைய வேண்டும் என வேண்டிக் கொள்வது என்றது.

 உடனே குஞ்சு பறவையும் ஐயா அப்படின்னா நானும் வேண்டுகிறேன் அம்மா. நம்ம வீட்டு  பக்கத்துலயும் ஆள் எல்லாம் இருந்தா நல்லா இருக்கும் தானே .

 இதோட நமக்கு அவங்க உணவெல்லாம் தருவாங்க நம்ம நல்லா வேடிக்கை பார்க்கலாம் சரிதானாமா என்றது குஞ்சு பறவை.

 தாய் பறவை சிரித்துக்கொண்டே ம்ம்ம் என்றது.

 இங்கே பூஜை போட வந்தவர்களில் பாதி பேர் இந்த மரத்தின் நிழலிலேயே நின்றனர். ஏனெனில் வெயிலின் தாக்கம் அவ்வளவாக இருந்தது.

 வீடு கட்டும் உரிமையால்  தன் மனைவி பாக்கியத்திடம்  இந்த மரம் இல்லாட்டி ஒன்னும் செய்ய முடியாது போல இருக்கு வெயிலோட வேகம் தாங்க முடியலையே என்று கூறிக் கொண்டே அந்த மரத்தின் அடியில் வந்து நின்று கொண்டார் .

 பூஜை முடிந்த கையோடு அனைவரும் புறப்பட்டு சென்று விட்டனர். சில வகை பழங்கள், அவல்,பொறி வைத்து விட்டு சென்றிருந்தனர்.

 குஞ்சு பறவை பார்த்துவிட்டு அம்மா அங்கு ஏதோ தின்பண்டம் இருக்கிறது எடுத்து வந்து தா என்றது.

 தாய் பறவை எடுத்து வந்து தந்தது அதை குஞ்சு பறவைகள் இரண்டும் சாப்பிட்டு விட்டு மிகவும் சுவையாக உள்ளது அவர்கள் நல்லா இருக்க வேண்டும் என்று கூறியது. தினமும் இதுபோல் வைத்தால் நன்றாக இருக்கும் என்றது மற்றொரு பறவை.

 இரண்டு மூன்று தினங்கள் கழித்து  வீட்டு வேலை ஆரம்பமானது.

 அப்போது குஞ்சு பறவை அம்மா அம்மா  அங்கே பாருங்களேன் யார் யாரோ வந்து வீடு கட்டிக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கே அவங்க வீட்ட கட்டிக்க தெரியாதா என்று சிரித்தது.

 அதற்கு தாய் பறவை நாம் மட்டுமே சுயமாக வீடு கட்ட கற்றுக் கொள்வோம், இறை தேட கற்றுக் கொள்வோம், பறப்பதற்கு கற்றுக் கொள்வோம்  ஆனால் அவர்கள் நம்மை ஐந்தறிவு படைத்தவர்கள் என்று  சொல்லிக் கொள்வார்கள் பாப்பா என்றது.

 சரி நான் இறைத்தேட செல்கிறேன். இருவரும் பத்திரமாக கதவை மூடி கொள்ளுங்கள். அப்போதுதான் பாம்பிற்கு வழி தெரியாமல் வேறு ஒரு பக்கம் செல்லும் ஜாக்கிரதையாக கதவை சாத்திக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு தாய் பறவை சென்றது.

 நம் வீட்டில் உள்ளது போல் அவர்கள் கதவுகளை வைக்கவில்லையே என்று இரு  குஞ்சு பறவைகளும் பேசிக்கொண்டனர்.

 ஆமாம் நம் அம்மா கட்டியுள்ள இந்த வீட்டில்  இது வழி பாதை ஒன்று நமக்கு மட்டுமே தெரியும் மற்றும் பாம்பு வந்தால் கூட குழப்பமடையும் வண்ணம் அல்லவா உள்ளது.

 மற்றொரு பறவை நம் அம்மா மிகவும் புத்திசாலியானவள் என்றது.

 வீடு கட்டுபவர்கள் அதிகம் இந்த மரத்தையே நாடி இருந்தனர். நிழல் மற்றும் காற்றுக்காக அத்தோடு இந்த குருவிகளின் சத்தம் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

 வீட்டு உரிமையாளர் கூறினார் பாக்கியம் எவ்வளவு இயற்கையாக இந்த இடம் அமைதியாகவும் உள்ளது என்றார்.

மரத்தின் அடியிலேயே அமர்ந்து சாப்பிடுவது என்று வழக்கமாக கொண்டிருந்தனர்

 அவர்கள் சென்றதும் அங்கு சிதறி கிடந்த உணவுகளை இந்த குருவிகள் பகிர்ந்து கொண்டன. இந்த குருவிகளுக்கும் அவர்களை மிகவும் பிடித்திருந்தது.

 அவர்களின் வீடு கட்டும் பணி நிறைவடைந்து இருந்தது.

 அவர்கள் குடிபுகும் விழா கொண்டாடினார்கள்.

 அப்பொழுது அந்த வீட்டு உரிமையாளரின் நண்பர் ஒருவர் நண்பரே எல்லாம் நன்றாக உள்ளது ஆனால் உன் வீட்டின் அழகை இந்த மரம் தான் மறைக்கின்றது என்றார்.

 வீட்டின் உரிமையாளருக்கு ஒரே மன கஷ்டம் என்ன? இவ்வளவு செலவு செய்து வீடு கட்டி  இந்த மரத்தால் நம் வீட்டின் அழகு குறைவதா? உடனே இந்த மரத்தை வெட்டி விட வேண்டும் என முடிவு செய்து ஆட்களை வைத்து அந்த மரத்தை வெட்டினார்.

 குருவிகள் கதி கலங்கி போயின. குஞ்சு குருவி கேட்டது அம்மா அவர்கள் வீடு கட்டும் போது நானும் தானே கடவுளிடம் வேண்டினேன் அவர்கள் வீடு நன்றாக இருக்க வேண்டும் என்று.நாம் சந்தோஷம் தானே பட்டோம். ஆனால் அவர்கள் நம் வீட்டை இப்படி இல்லாமல் செய்து விட்டார்களே? என்றது.

 அதற்கு தாய் குருவி இதுதான் மனிதரின் குணம். தனக்கு நன்மை செய்த மரத்தை வெட்டியவர்களுக்கு,நம் வீடு மட்டும் எம்மாத்திரம்? அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இதுதான் வீடு.

 ஆனால் நமக்கு எங்கு சென்றாலும் வீடு கட்டிக் கொள்ளும் திறமை இயற்கையாகவே உள்ளது. எனவே கவலை கொள்ள வேண்டாம்.. சிறிது காலம் உணவு தந்த அவர்கள் நலமாக வாழட்டும் என்று கூறிக் கொண்டே  அந்த ஐந்தறிவு ஜீவன்கள் வேறு வீடு கட்ட சென்றன.

 இயற்கையை காக்க மறந்த ஆறறிவு ஜீவன்கள் தன் வீட்டை பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டன……..

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நவராத்திரி கொலு கதைகள் (பகுதி 2) – சுஶ்ரீ

    திருமண சேவை மையம் (சிறுகதை) – சத்தியபானு