in

வசப்பட்டது வாழ்வா வானமா (சிறுகதை) – ✍ ஆர்த்தி சுவேகா

வசப்பட்டது வாழ்வா வானமா (சிறுகதை)

#ads – Deals in Amazon👇மாத போட்டிக்கான பதிவு (நவம்பர் 2021)

வள் வேகமாகவும் இல்லாமல் மெதுவாகவும் இல்லாமல் நடந்தாள்

லேசான தூறல் விழுந்து அவளை அனுமதியின்றி தொட்டுச் சென்று அவள் பாதங்களில் உருண்டு வழிந்து பூமியை அடைந்தது

எல்லா உயிர்களும்….உயிர் இல்லாதவைகளும் எதையோ சார்ந்து வாழ்கிறது. ஆனால் நிவேதி மட்டும் ஏன்… இப்படி ஓர் கேள்விக் குறியாக… தன்னை ஆராய்ந்தபடி நடந்தாள்

எதிரே அப்பா, “ம்மா நிவேதி, மழை பெய்யுதே. காலையில கொடையும்  கொண்டு போகாம போயிட்டியா, அதான் வந்தேன்” என்றபடி ஒரு குடையை அவர் பிடித்தபடி, இன்னொரு குடையை மகளிடம் கொடுக்க, வாங்கிக் கொணடாள்

எதுவும் பேசாமல் நடந்தாள், பஸ்டாண்டிலிருந்து அரை மைல் நடக்க வேண்டும்

அவள் வேலை செய்யும் அந்த உற்பத்தி நிறுவனத்தில் கணக்காளராக பணி செய்கிறாள். மாதம் கிடைக்கும் இருபதாயிரம் ரூபாயில் வாடகை கொடுத்து சாப்பிட்டு அம்மா அப்பாவின் மருத்துவ செலவு பார்த்து என, சந்தோஷங்கள் மிச்சமில்லாதது போல, காசும் பணமும் கூட மிச்சமில்லை

வாசலை அடைந்தவுடன் மகள் ஓடி வந்து கட்டிக் கொண்டாள். மித்ரா குட்டி, வயது இரண்டு

‘மித்து செல்ல மித்து’ எஙகிருந்தோ காற்றில் மிதந்து வரும் கானம் போல, மகளை கண்டதும் ஆனந்தம் அப்பிக் கொண்டது முகத்திலும் மனதிலும் வாரிக் கொணடாள். மகள் தான் அவள் உலகம்

“ம்மா ம்மா…ந்தோ…” குழந்தை மழலையில் பேச திரும்பி பார்க்கிறாள்.

பக்கத்து வீட்டு பாஸ்கர் நின்றுக் கொண்டிருக்க, விருட்டென குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே செல்கிறாள்

நிவேதி, காதல் மணம் செய்து ஒரே வருடத்தில் அவள் கணவன் வேறு பெண்ணுடன் எங்கோ ஓடி விட்டான். அவ்வளவு தான் வாழ்க்கை. அவசரமாக காதலிப்பது, இப்படி தான் அவசரமாக அறுந்து விழுகிறது. ஆனால் அடையாளமாக ஒன்று தங்கி விடுகிறதே பெண்ணுக்கு

இளமை குறைந்து, அழகு சூறையாடப்பட்டு, கையில் குழந்தையுடன்… பெண் மட்டும் காதலின் எதிரியா? ஆண் அப்படியே இருப்பான், அடுத்த பெண்ணை தேடிப்போவான், இது Human nature…ஆ?

மிருகங்கள் கூட அப்படி நடக்கும் பொழுது மனிதன் மனிதனாக இருப்பதில்லை ஏனோ

அம்மாவுக்கு ஆஸ்மா வியாதி உண்டு. பல நேரங்களில் இருமல் வந்து விடும், அதனால் குழந்தையை கவனிப்பது அப்பா மட்டுமே

அண்ணா ஒருவன் இருக்கிறான். அவன் காதல்  மனைவியுடன் பெங்களூரில் செட்டில் ஆகி விட்டான். அவனுக்கு மனையின் குடும்பம் தான் அவன் குடும்பம்

வீட்டுக்கு வந்தவளுக்கு ஒரு வாய் காபி கொடுக்க ஆள் இல்லை. வேகமாக சென்று கை கால் அலம்பிக் கொண்டு சமையலறைக்கு சென்றாள். காபி போட்டு எடுத்துக் கொண்டு வந்து ஷோபாவில் அமர்ந்து பருகலானாள்

அப்பொழுது அப்பா அவள் அருகே வந்தார். ஆதரவாக குழந்தையை தூக்கிக் கொண்டு, “ம்மா உன்கிட்ட பேசனும்” என்றார்

“சொல்லுங்க ப்பா”

“அது வந்து நாளைக்கு அண்ணா வரான்”

“அட ஆச்சர்யமா இருக்கே, நம்ம நினைவு கூட அண்ணாவுக்கு இருக்கா என்ன?” என்று கேலியாக கேட்டபடி, “என்னவாம்” என்றாள்

“அது வந்து ம்மா…”, என மென்று முழுங்க, வாசலில் சத்தம்

யார் என பார்க்க, அண்ணாவும் அண்ணியும் அவர்கள் குழந்தையும். சட்டென எழுந்துக் கொண்டாள் நிவேதி

“வாங்க ண்ணா..அண்ணி..ஹேய் வசு” என எல்லாரையும் வரவேற்று, பின் எதற்காக வந்திருக்கிறார்கள் என்ற கேள்விக் குறியை பருவங்களின் மத்தியில் நிறுத்தி உள்ளே சென்றாள், இரவு டிபன் செய்ய

அனைவரும் சாப்பிட அமர்கிறார்கள், “என்னம்மா நிவேதி இப்படியே இருக்கலாம்னு நினைச்சிட்டு இருக்கியா?”

“அண்ணா…”

“ஒன்னுல்ல… பக்கத்து வீட்டு பாஸ்கருக்கு உன்னை பிடிச்சிருக்காம். அவங்க அப்பா அம்மா என்கிட்ட போன்ல பேசினாங்க, அதான் பேசி முடிஞ்சிடலாம்னு. நல்ல வருமானம், Good character” என நிறுத்த

‘ஓ … அதான் அண்ணா வந்திருக்கிறார். பேசி முடிவு பண்ணி, என்னிடம் தகவல் சொல்லப்படுகிறதோ’ என எண்ணமிட்டாள்

“நீ ஒன்னும் பயப்பட வேணாம், அவனுக்கும் இது இரண்டாம் கல்யாணம் தான், விசாரிச்சிட்டேன். அவன் முதல் மனைவிக்கு ஹார்ட்ல ப்ராப்ளம் இருந்திருக்கு, சொல்லாம மறைச்சி கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க. அவ அல்பாயிசுல போயி சேர்ந்துட்டா. குழந்தை வேணும்னு ப்ரியப்படறானாம், உன்னையும் பிடிச்சிருக்காம். நாளைக்கு ஞாயித்துகிழமை தானே, பொண்ணு பார்க்க வராங்க. சம்பிரதாயமா பேசிட்டு சிக்கனமாக கல்யாணத்த முடிசசிடலாம்” என்று சாப்பிட்டு முடித்து தட்டிலேயே கை கழுவிய அண்ணன், போய் படுத்து விட்டார்

மனம் வெறுமையாக இருந்தது நிவேதிக்கு

காலை விடிந்தது. வழக்கமான வேலைகள் காலை டிபன் என முடிய, “நீ போய் நல்லா டிரஸ் பண்ணிக்கோ, இன்னிக்கு உங்க அண்ணி சமைக்கட்டும்”

நீவேதி பேசாமல் சென்றாள். புடவை மாற்றிக் கொண்டு வர, பக்கத்து வீட்டு பாஸ்கர் பேமிலி வந்து விட்டது

பரஸ்பரம் பேசினார்கள். நிவேதியால் தடுக்க முடியவில்லை செயல்பாடு அதன் போக்கில் நிகழ்ந்துக் கொண்டிருக்க, அவளும் சென்றுக் கொண்டிருந்தாள்

குப்பைகளையும் தூசிகளையும் எடுத்துச் செல்லும் அருவி போல, வாழ்க்கை வழியே பயணித்தாள். ஒருவாரத்தில் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்யப்பட்டது

திருமணம் முடிந்த அன்று மாலை நேரம், “சரிம்மா நாங்க கிளம்பறோம். அப்பா நீங்களும் கிளம்புங்க. நாம பேசின படி அம்மாவையும் ரெடி பண்ணிடுங்க” என்றதும், நிவேதிக்கு நடப்பது என்ன என்று புரியவில்லை

அம்மாவின் துணிகள் மருந்துகள் அறுக்கப்பட்ட ஒரு பெட்டி. அப்பாவுக்கு தனியாக ஒரு சூட்கேஸ். அதனுடன்  குழந்தையின் துணி மணிகள், இனி பேசித் தான் ஆக வேண்டும்

“என்ன நடக்குது பாஸ்கர்?” தாலி கட்டியவனை கேட்டாள்

“என்னம்மா உனக்கு டவுட்டு, நா சொல்றேன் அவரை ஏன் கேட்கறே?” அண்ணா வெளியே வந்தான்

“அம்மாவை முதியோர் இல்லத்தில விடப் போறேன். அப்பாவை நா அழைச்சிகிட்டு போறேன். உன் குழந்தையையும் கொஞ்ச நாள் நாங்க எங்களோட அழைச்சிட்டு போறோம். ஏன்னா இப்ப தானே கல்யாணம் ஆகியிருக்கு, கொஞ்ச நாளைக்கு தொந்தரவு இல்லாம ஜாலியா இருங்க ரெண்டு பேரும், அதற்காக தான்”

“அம்மா?”

“அம்மாவுக்கு ஆஸ்மா இருக்கு, உங்கிட்ட இருந்தாலும் எங்கிட்ட இருந்தாலும் அது நல்லது இல்ல. இன்பெக்ஷன் ஆகும், அதற்காகத் தான்.  அப்பா எங்க கூட இருந்தா கொஞ்சம் எங்களுக்கும் கடைக்கு போக உதவியா இருப்பார். உன் மகள் என் குழந்தையுடன் எப்படி விளையாடறா பாரு. எல்லாம் உன் எதிர்கால நல்லதுக்கு தான்”

அண்ணன் பேச பேச, பூரிச்சி போய் நின்றான் புது மாப்பிள்ளை பாஸ்கர்

அப்பாவை பார்த்தாள் நிவேதி, கண்கள் சிவந்திருந்தது. அம்மா மூக்கை சிந்திக் கொண்டிருந்தாள்

‘அடப்பாவிகளா’ என கத்த வேண்டும் போல் இருந்தது நிவேதிக்கு

“சரி அண்ணா” என மட்டும் கூறி விட்டு சென்று விட்டாள்

இரவு… அன்று முதல் இரவாயிற்றே

இவர்கள் ஊருக்கு போகட்டும் அதன் பிறகு இதெல்லாம் வைத்துக் கொள்ளலாம் என சொல்லி, பாஸ்கரின் அனுமதி வாங்கினாள்

என் தாய் தந்தை குழந்தையுடன் இன்று ஒரு நாள் படுத்துக் கொள்கிறேன் என சொல்ல, அவனும் ‘சரி இன்று ஒருநாள் தானே’ என அனுமதி வழங்கினான் பெரிய மனதுடன்

அத்துடன், “உன் குழந்தையை நான் தான் தூக்கிட்டு போக சொன்னேன். நாம கொஞ்சம் ஜாலியா இருக்கலாம்”னு என்றான்

தாலி ஏறிய அடுத்த நொடி கட்டியவனிடம் அனுமதி கேட்காமல் பெண் சிந்திக்க கூட கூடாது என்பது, இன்றும் நடைமுறையில் பல ஊர்களில் கிராமங்களில் உள்ள ஒரு விஷயம் தான்

இரவு அவன் தனியாக படுத்திருக்க, நிவேதி தன் தாய் தந்தை குழந்தையுடன் படுத்திருந்தாள். நடு நிசி எழுந்தாள்

அனைவரும் அசந்து உறங்கும் நேரம், குழந்தையை தூக்கி தோளில் போட்டுக் கொண்டாள். தந்தையை எழுப்பினாள், தாயை எழுப்பினாள்.

கொஞ்சம் துணிமணிகள் எடுத்து முதல் நாளே வைத்திருந்தாள். கையில் கொஞ்சம் பணம், கழுத்திலிருந்த செயின், இவைகளுடன் தாய் தந்தையை அழைத்துக் கொண்டாள்

“என்னம்மா எங்கே போறோம்?” என்ற தந்தையிடம்

“ஷ்ஷ்ஷ்…” என ஒரு விரலை உதட்டில் வைத்தாள்.

கழுத்திலிருந்த தாலிக்கயிறை கழற்றி சாமி படத்தில் மாட்டினாள். ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு வேகமாக வெளியேறினாள்.

சில வருடங்கள் கழித்து, நிவேதி அழகிய வாழ்க்கை வாழ்கிறாள், தாய் தந்தையுடன், குழந்தை படிக்கிறாள்.

ஒரு ஊரில் சொந்த பந்தங்கள் என யாருமிலலாத அந்த மனிதர்களிடயே, அருமையான ஓர் நிம்மதியான வாழ்க்கை, சுதந்திரப்பறவையாக தன் கூட்டில் வாழும் …வசப்பட்டது…வாழ்வும் வானமும் தான்.

சற்றே நிதானமாக யோசித்து முடிவு எடுத்தால், பெண்களே…தோற்று விட்டோமென துவன்டு வீழாதே, சோகப்பட்டு சாகாதே, சற்றே சிந்தி… சிந்தாதே கண்ணீரை

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

6 Comments

 1. வசப்பட்டது வாழ்வா வானமா? வாழ்வு தான் வேண்டுமென்றால் அது சுலபம்..வானம் தான் வேண்டுமென்றால் அது கிடைப்பது கடினம்..! பெண் என்பவள் உணர்வு பூர்வமாகவே யோசிப்பவள்…! உண்மையான அன்புக்காக எந்த எல்லையும் தாண்டுவாள்..சுயநலம் அங்கே எப்பொழுதுமில்லை. அதை தான் இக் கதையில் கண்டேன். தாய் தந்தை தன் குழந்தையுடன் வாழ்க்கையை இணைத்தது சிறப்பு..அதுவே அவளின் வானம். எல்லாப் பெண்களுக்குமே இது பொருந்தும்..காரணங்கள் தான் வெவ்வேறாக இருக்கும்.
  கதையாசிரியருக்கு வாழ்த்துகள்.
  எழுத்தாளர்
  ரபியா

 2. ஆர்த்தி சுவேகாவின் வசப்பட்டது வாழ்வா வானமா சிறுகதை மிகவும் பிரமாதம். சிறந்த முடிவை எடுத்து கதை நாயகிக்கு வாழ்த்துக்கள்

 3. வாழ்வா வானமா! கதை மிகச் சிறப்பு. நிவேதி எடுத்த முடிவு மிகச் சரியே. பெண்ணுக்கு அடிமை வாழ்வு தேவையில்லை என்பதைக் கதாசிரியர் கூறிய முறை மிகச் சரியானது. ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியாகிப் போனது முட்டாள் தனம் என்பதை இன்று வரை மனிதர்கள் புரிந்து கொள்ளவில்லை. பெண் வாழ்க்கையை விட உறவுகள் என்ற வானத்தையே தேர்ந்தெடுப்பாள் என்பதை ஆணித்தரமாகக் கூறிய கதை இது. வாழ்த்துகள் ஆர்த்தி. எழுதிய முறை சிறப்பு.

 4. வாழ்வா வானமா! கதை மிகச் சிறப்பு. நிவேதி எடுத்த முடிவு மிகச் சரியே. பெண்ணுக்கு அடிமை வாழ்வு தேவையில்லை என்பதைக் கதாசிரியர் கூறிய முறை மிகச் சரியானது. ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியாகிப் போனது முட்டாள் தனம் என்பதை இன்று வரை மனிதர்கள் புரிந்து கொள்ளவில்லை. பெண் வாழ்க்கையை விட உறவுகள் என்ற வானத்தையே தேர்ந்தெடுப்பாள் என்பதை ஆணித்தரமாகக் கூறிய கதை இது. வாழ்த்துகள் ஆர்த்தி. எழுதிய முறை சிறப்பு.

 5. பெண்களுக்கு என்றும் வசப்படுவது வானமே. பெற்றவர்களையும் குழந்தையையும் பிரித்து வாழ்க்கை வேண்டுமா என்றால் அதை எந்தப் பெண்ணும் ஏற்றுக்கொள்ள மாட்டாள். வேலை பார்க்க உடம்பில் தெம்பிருக்கும் தாய் அல்லது தந்தையை ஏற்றுக்கொள்ளும் பிள்ளைகளே அதிகம் உள்ளார்கள். பணம் இருக்கும் பெற்றோர்களைக் கூட விரட்டும் பிள்ளைகளே இன்று அதிகம். இயலாமையில் தவிக்கும் பெற்றோரை இக்கதையில் இருப்பது போல் வழி நெடுகக் காண முடிகிறது. நிவேதி என்னைக் கவர்ந்தாள் ஆர்த்தி. அனுபவித்து எழுதியுள்ளார் கதாசிரியர். மனம் நிறைந்த வாழ்த்துகள் எழுத்தாளர் ஆர்த்தி சுவேகா

பொம்மி (சிறுகதை) -✍ பத்மாவதி மாணிக்கம், கோவை

தேயாத வெண்ணிலவு (சிறுகதை) -✍ வ.நிறோஜினி, ஸ்ரீலங்கா