எழுத்தாளர் வளர்கவி கோவை எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அதிகாலை ஐந்து மணியிருக்கும், வாசல் தெளித்துப் பெருக்கிக் கொண்டிருந்தாள் வஸந்தா. கிழக்கிலிருந்து மேற்காகச் சென்ற அந்த மேட்டு ரோட்டில் ‘உஸ்! புஸ்’ என்று பெருமூச்சு முட்ட, சைக்கிளைத் தள்ளியபடி வந்து கொண்டிருந்தான் ஒரு இளைஞன்.
இந்த நேரத்தில் யார் இவன்??. வாசல் பெருக்குவதில் கவனமிருந்தாலும், சேலையை இழுத்துப் போர்த்தினாள்”’ யாரிவன்?! இந்த நேரத்தில்??!!. இருக்குற மூனு பவுன் தாலிச் செயினையும் அத்துட்டுப் போயிட்டான்னா என்ன பண்றதாம்..??!!’ மனசுக்குள் உக்காந்து மணியடித்தது சந்தேகப் பிசாசு!.
எங்கோ ஒரு எஃப் எம் ரேடியோவில், இன்னும் மறக்காமல் பழைய பாட்டை எதோ பேர் சொல்லி, ஒலி பரப்பினான் ஒரு ரேடியோ ஜாக்கி!
“ஒரே கேள்வி உனைக் கேட்பேன்’……!
ஹரே ராம ஹரே கிருஷ்ணா..!
உலகம் எப்போ உருபகுது??!!
‘ஹரே ராம, ஹரே கிருஷ்ணா….!” சூழ்நிலையைச் சூடாக்கியது அந்த சுப்ரபாதம்.
‘கெரெக்ட்..!’ என்னன்னு கேட்போம்…!’ என்று, “ஏம்ப்பா, சைக்கிளைத் தள்ளீட்டுப் போறே? பஞ்சரா?” என்றாள் பாசத்தோடு.!
இல்லை ஆண்டி…! எதிர்காத்து!, இது, மேடுவேற!” என்ற இளைஞன் இவள் கேட்காமலேயே, மேலும் ஒரு தகவலைத் தந்தான் இலவசமாக!. ‘நான் டவுண்ல இருக்கிற ‘மால்ல’ செக்யூரிட்டியா ராத்திரி வேலைக்குப் போறேன். ராத்திரி அங்க., அப்புறம் பகல்ல இங்க! சின்ன வயசில் கஷ்டப்பட்டாத்தானே???!!’ உண்டு!???!!’ என்று தத்துவம் பேசினான். அட! நல்ல பையனா இருக்கானே??? சரி, இந்த காலை வேளைல என்ன பண்றே..? இங்கே??! என்றாள் வஸந்தா..
‘ஆண்டி.. நான் பேப்பர் போடறேன்!.!’ என்று சொல்லிக் கொண்டே ஒரு நாளிதழை இவள் வீட்டுக்குள்ளும் வீசினான்.
கிருஷ்ணர் பால்கடலை விட்டு எழுந்தார்., இறங்கினார்! வஸந்தாவின் மனசுக்குள் பிரவேசித்தார்!. அடுத்த வாரம் தீபாவளி இல்லே..? இவனுக்கு தீபாவளிக்கா ஒரு ஐநூறு கொடுத்தா என்ன??!!’ கிருஷ்ணன் வஸந்தாவின் மனதை வருட, அவள் ‘இரு தம்பி, இதோ வரேன்!’ என்ற படி வீட்டுக்குள்ளே ஓடினாள்.. ‘இனாம்’ எடுத்து வர! அவன் காத்திருந்தான்.
ஐநூறை அவன் கையில் திணித்தாள்.. தீபாவளிக்கு வச்சுக்கோ..!’ அவன் முகத்தைப் பார்த்தாள்.
அவன் ரொம்ப தாங்க்ஸ் ஆண்டி!’ என்று பல்லைக் காட்ட இவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. வார்த்தைக்கு வார்த்தை ‘ஆண்டி’ என்று அழைத்தாள் கோபம் வராதா என்ன?
அவன் தள்ளீட்டு வந்த சைக்கிள் சீட்டைப் பார்த்தாள்…! அது, நாய் குதறினா மாதிரி நார் நாரய்த் தொங்க… ‘இந்த சைக்கிள் சீட்டை மாத்த வேண்டியதுதானே?!!’ என்றாள் பொறுப்பாக.
‘அவன், ‘அதை மாத்தணும்னா நூற்றைம்பது ரூபா வேணுமே??!!’ என்றான் இவளுக்குப் பொத்துக் கொண்டு வந்தது கோபம். இப்பத்தான் எதிர்பார்க்காமல் பாவம்னு ஐநூறு கொடுத்தேன். அதை வச்சு மாத்தலாம்ல..??? உலகம் எப்போ உருப்படப் போகுது?? ஹரே.. ராம ஹரே கிருஷ்ணா” எனு நினைக்க..
அவன் மெதுவாக, நீங்க மனசு வச்சா.. இன்னும் இருநூறு கொடுத்தா… மாத்தீடுவேன் மேம்! என்றான். அப்பாவியாக.
‘ஆண்டி’ ‘மேம்மான’ அதிர்ச்சியில், வஸந்தா வலையில் விழுந்தாளோ இல்லையோ பாற்கடலில் தொபுக்குனு கிருஷ்ணர் விழ, அடிபட்ட அவர் காலை மெதுவாக வருடினாள் மகாலட்சுமி.
அவளுக்குத்தானே தெரியும் அவன் இனிமேல்தான் அந்த ஐநூறில்தான், தீபாவளிக்குப் புது டிரெஸெடுக்க வேண்டும் என்று??!
எழுத்தாளர் வளர்கவி கோவை எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings