in ,

கடவுளைத் தண்டிக்க என்ன வழி? (சிறுகதை) – வளர்கவி, கோவை

  எழுத்தாளர் வளர்கவி கோவை எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்     

அன்று அதிகாலையிலேயே எழுந்து, பத்து கிலோ மீட்டர் தொலவிலுள்ள அந்த ஆலயத்துக்குக் கிளம்பினான் கிஷோர்.  போகும் போதே மனசுக்குள் ஆயிரம் மின்னல்கள்.

‘வாழ்க்கையில், கடவுளே நான் எதிர்பார்த்த, கேட்ட, எதையுமே தராம விட்டுட்டே?! பரவாயில்லை!. ஆனால், உன் அன்பைக் கூட்டிக் கொடுன்னு கேக்கறேன். அதுகூட முடியலைனா நீ என்ன கடவுள்?! என்னை இப்படி தண்டிக்கறது?! தப்புன்னு ஒருநாளாவது நீ சிந்திச்சிருக்கயா? மாட்டே!  நீ எப்படி சிந்திப்பே?! நீ தான் கல்லாச்சே!’ மனம் புலம்ப காரைக் கோயில் வளாகத்துள் நுழைத்து ‘பார்க்கிங்’ ஸ்பாட்டில் க்ரெக்டா நிறுத்தி, ‘டோக்கனுக்காக’ காத்திருந்தான்.

‘ஊகும்’  ஒருத்தனையும் காணோம்!, டோக்கன் போடாம போனா.. திரும்ப வரலைல, அவன் கேட்கிற எல்லாக் கேள்விக்கும் பதில் சொல்லணும்! நாமே தேடிப் போய்க் கொடுத்துடுவோம்!னு நேரா தேடிப் போனா.. அவன் எவகிட்டயோ பல்ல இளிச்சிட்டிருக்கான்!.

“தம்பி டோக்கன்…?!” கேட்க.

‘எதோ தர்மம் பண்ணறா மாதிரி சர்க்குன்னு ஒரு செவப்பு டோக்கனைத் தந்து, ‘ரெண்டு ரூவா’ என்றான்!.

கிஷோர், மறுத்து, ‘காருப்பா! என்றதும் கலர் மாற்றி புளூ கலரை எடுத்துக் கொடுத்து பத்து ரூவா என்றான்.

ஐம்பது ரூவாயை நீட்ட, ஜீபே இல்லையா? என்றான்

கடுப்பானது..! ‘ என்ன ஐம்பது ரூபாய்க்குச் சில்லறை இல்லையா?’ என்றதும், தான் கடலை போட்டிட்டிருந்ததுக்கு இடையூறா இருக்குன்னு நினைச்சானோ என்னவோ… பையிலிருந்து… தேடி மீதி நீட்டினான் அதில் ஒரு ஐம்பது ரூவா நோட்டு ரெண்டு இருபது ரூவா  இருக்க தம்பி, நானே… ஐம்பதுதான் கொடுத்தேன்னதும்…

‘சே!’ என்று திட்டிவிட்டு.. யரைன்னு  தெரியலை! வாங்கி போட்டுக்கொண்டு ரெண்டு இருபது ரூபா கொடுக்க, அவசர அவசர அவசரமாக பாண்டில் திணித்து உள்ளே நுழைந்தான்.

அர்ச்சகர்ட்ட பேர் சொல்லி அர்ச்சனைக்கு சீட்டி நீட்டி, காத்திருந்து அவர் தீபாரணைத் தட்டில்  ஒரு இருபது ரூபாயைப் போட்டான்.

அடுத்து ஒரு இருபது ரூபா மட்டும் இருக்க, அதைப் பார்த்தால்…. அது ரொம்ப கரெக்டா செல்லோ ஒட்டப்படிருந்தது. முழுசா துண்டான நோட்டை, ஒட்டியது தெரியாம ஒட்டியிருக்கான் பிரகஸ்பதி. ஒட்டினது சாமர்த்தியமல்ல அதை  டோக்கன்காரன்ட ஒட்ட வைச்சுட்டுப் போயிருக்கான் அதுதான் பெரிய சாமர்த்தியம். அவன் அதை எங்கிட்ட திணிச்சுட்டான்!….ம்ம்ம்ம்.!’

கிஷோர் உள்ளிருந்த சைத்தான் விழித்துக் கொண்டு அலறியது….!

‘கடவுளே! உன்னை, உன் கோயிலை ஏமாத்தக் கூடாது!ன்னு கூப்பிட்டு டோக்கன் போட்டதுக்கா இந்த கிழிசல் ரூவா தண்டனை??!!

ஏன் என்னையே தண்டிச்சிட்டிருக்கே…?? உன்னை தண்டிச்சால் என்ன? கிழிசலை எடுத்துக் கொண்டு மீண்டும் உள்ளே போய் உண்டியலருகே ஒரு பத்து நிமிஷம் நின்னு மனதார வேண்டி, கடவுளைத் தண்டிக்க என்ன வழி? இதையே உண்டியல்ல சேர்த்துட்டா என்ன? மனசு பிறாண்ட உறுவி உள்ளெ போடப் போகையில்

மனசு… “கடவுள் சோதிப்பாரு!..  ஆனா, யாரையும் தண்டிக்க மாட்டாரு?! சசைத்தான் ‘சைன்’ ஒலிக்க…

ஆமா…! ஆமா..! சோதிக்கறதே இப்படி இருக்கே?! தண்டிச்சா… வேண்டாம்டா சாமி.. இருக்கற புண்ணியமே போதும்! இனியும் வெதுக்குன்னு.. நோட்டை எடுத்துட்டு காருக்குத் திரும்பினான்.

எழுத்தாளர் வளர்கவி கோவை எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எல்லாம் எனக்கே (சிறுகதை) – மீனாட்சி சுந்தரமூர்த்தி

    என்னதான் ரகசியமோ (நகைச்சுவை கதைப்பாடல்) – வளர்கவி, கோவை