in , ,

உனக்கும் மேல் ஒருவன் (பகுதி 1) – உமா.M

dramatic lightning thundertbolt bolt strike in daylight rural surrounding bad weather dark sky

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“என்னப்பா ரவி! இன்றாவது புல்டோசருக்கு ஏற்பாடு பண்ணியாயிற்றா? சீக்கிரம் அங்கே நாம் வேலையை ஆரம்பிக்க வேண்டுமே. ஆவணி வேறு ஆரம்பமாக போகிறது” என்றபடியே டவலால் முகத்தை துடைத்தபடியே வந்தார் பலராமன்.

“நாளைக்கு புல்டோசர் ரெடி நாளை அந்த இடத்தை முழுசா சுத்தம் பண்ணிடலாம்” என்றான் அவர் மகன் ரவி.

அவர்களுக்கு ஒரு நாலு கிரவுண்ட் நிலம் இருந்தது. அது இஷ்டத்துக்கும் காடாக மண்டி இருந்தது. அதை சுத்தப்படுத்தி தோட்டம் போட முனைந்தார் பலராமன். நாட்கள் தள்ளிக் கொண்டே சென்றது. இப்பொழுதுதான் வேளை பிறந்தது.

ஊருக்கு வெளிப்புறம் அது சிறிய பள்ளத்தாக்கு மாதிரி இருந்தது. அடர்த்தியான செடிகளும் கொடிகளும் சின்ன மரங்களும் என்று மண்டி கிடந்தது. சிறிய உயிரினங்களுக்கு அது காடு மாதிரி. ஒருவகை வெள்ளை சிறகுகளுடன் ஒரு பட்டாம்பூச்சி குடும்பம் ஒன்று இருந்தது.

ரொம்ப குட்டி பட்டாம்பூச்சி தன் அம்மாவிடம் சொன்னது “அம்மா அண்ணன் ரொம்ப உயர உயர தூரமாக எங்கெங்கோ போகிறான்” அது ரொம்ப சலிப்போடு வத்தி வைத்தது .

உடனே அம்மா, “டேய்  அண்ணன்காரா நீ இந்த மாதிரி   செய்து கொண்டிருந்தாயோ ஒரு நாள் யாராவது மனிதர்கள் உன் றெக்கையைப் பிடித்து உன்னை பைக்குள் போட்டுக் கொண்டு போய் விடப் போகிறார்கள்” என்றது.

இது  தினமும் நடக்கிற விஷயம் தான். சூரியன் உதயமான சில மணி நேரங்களில் அம்மாவும் அப்பாவும் குட்டி பட்டாம்பூச்சிகளுடன் வெளியே கிளம்பி விடுவார்கள் இரை தேட வீடு திரும்பும் சமயத்தில் தம்பிக்கார பட்டாம்பூச்சி ஒழுங்காக. அம்மா அப்பாவோடு சேர்ந்து விடுவான்.

இந்த அண்ணன் காரன் தான் ரோட்டு பக்கம் சென்று விடுவான். ரோட்டில் வாகனங்களும் மனிதர்களும் போவதை பார்த்துவிட்டு அவர்கள் மேல் உட்கார்ந்து விட்டு வாசனை பார்த்துவிட்டு பறப்பான். உயர உயர பறக்க முயற்சித்து ஒருநாள் கீழே விழுந்து பின்னர் சமாளித்து எழுந்து பறக்க ஆரம்பிப்பான்.

அவன்  லூட்டி தாங்க முடியவில்லை பெற்றோரால்! வளர்ந்து விட்டான் இல்லையா? ஒரு சிறிய செடியின் வேருக்கு அடியில் சின்ன ஓட்டையில் ஒரு வண்டு குடும்பமும் இருந்தது. பெரிய பளபளப்பான வண்டு அப்பா வண்டு.  

சற்றே சிறியது அம்மா வண்டு. குட்டி வண்டுகள் இன்னும்  வளர வேண்டும். பெரிய வண்டு  கருநீல கரும்பச்சை வண்ணத்தில் கிளாஸ் மாதிரி இறக்கைகளோடு மிக அழகாக இருக்கும். இவைகளை எல்லாம் வேட்டையாட எலிகளும் அணில்களும் ஓநான்களும்  அங்கே படை எடுக்கும்.

சின்ன செடிகளில் அல்லது மரங்களில் அவை வாசம் செய்யும். மண்ணில் நெளியும் புழுக்களை வண்டுகள் பிடித்து தின்னும். இந்த வண்டுகளையும் பட்டாம்பூச்சிகளையும்    

பல்லியோ ஓணானோ தவளையோ வேட்டையாடும். இந்த பள்ளியையும் எலியையும் அனிலையும் பிடிக்க நாயே பூனையோ துரத்தும். அந்த சிறுகாட்டில் இது சர்வசாதாரணம். மற்றபடி மனிதர்கள் அங்கே கால் வைக்க முடியாது. அவ்வளவு அடர்த்தியான காடு.

எப்போதாவது ஆடு, மாடோ அதில் இறங்கி விட்டால் அதன் சொந்தக்காரன் கஷ்டப்பட்டு பயந்தபடி அதில் இறங்கி மீட்டு வருவான். பூச்சி புழுக்கள் கடித்து விட்டால் அவன் பாடு என்ன ஆவது? அந்த சின்னக்காட்டிற்குள் எவ்வளவு ஆபத்துக்கள் இருந்தாலும் பார்ப்பதற்கு மிகவும் பச்சையாக அழகாக இருந்தது.

மழை வந்தால் வாசனை நன்றாகவே இருக்கும். ஆனால் அந்த மழையினால் பாதிக்கப்பட்டு வண்டுகளும் பூச்சிகளும் தவளைகளும் போடும் சத்தம் அந்த ஏரியாவையே திணறடிக்கும்.

அங்கே பெரும்பாலும் தவளைகளும் எலிகளும் அணில்களும் பள்ளிகளுமே ராஜ்ஜியம் செய்து கொண்டிருந்தன. பலம் மிகுந்த ஜத்துக்கள் வெகு சாதாரணமாக நடமாடி கொண்டிருந்தன மற்ற பூச்சி பொருட்கள் வண்டுகள் பட்டாம்பூச்சிகளில் வாழ்க்கை சில சமயங்களில் பாவமாகத்தான் இருக்கும்.

இது இப்படி இருக்க அந்த குட்டி காட்டில் ஒருநாள் ஒரே கலேபரமாகிவிட்டது. பட்டாம்பூச்சிகளும் வண்டுகளும் தாறுமாறாக பறக்க ஆரம்பித்தன. சிறியவற்றிற்கு ஒன்றும் புரியவில்லை. பெருசுகள் மோப்பம் பிடித்து தெரிந்து கொண்டன. என்னவாம்?

அந்த பள்ளத்தாக்கின் முன் ஓரத்தில் ஏதோ ஒரு இயந்திரம் செடிகளையும் கொடிகளையும் அப்புறப்படுத்தி கொண்டிருந்தது. அந்த இயந்திரத்தின் மேல் ஒரு மனிதன் உட்கார்ந்திருக்கிறான். அவன் மிக மெதுவாக அதை இயக்கி கொண்டிருந்தான். செடிகளும் கொடிகளும் வேரோடு பிடுங்கப்பட்டன. அதில் சில பூச்சிகளும் புழுக்களும் எலிகளும் செத்து மடிந்தன.

அதற்கு விதி அவ்வளவு  போலும். பல ஜந்துக்கள் தப்பி பிழைத்தன. நசுங்க வேண்டிய அணில் ஒன்று அந்த இயந்திரத்தின் இயக்கத்தோடு சேர்ந்து மணலோடு மேலே வந்து துள்ளி குதித்து ரோடு பக்கம் ஓடி தப்பித்தது.

எலியொன்று தப்பி ரோடு பக்கம் ஓடுகையில் டூவீலரின் சக்கரத்தில் மாட்டி  நசுங்க,       இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த குட்டிக்காட்டின் மறுபக்கத்தில் இருந்த உயிரினங்கள் ரொம்பவே டென்ஷன் ஆயின. பூச்சிகளும் வண்டுகளும் பட்டாம்பூச்சிகளும் குடும்பம் குடும்பமாக பறக்க ஆரம்பித்தன.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அரூபன் (பயணம் 1) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.

    உனக்கும் மேல் ஒருவன் (பகுதி 2) – உமா.M