உலகில் வாழும் ஒவ்வொரு உயிரும் ஒர் உயர்ந்த குறிக்கோளோடு உயிர் வாழ்கின்றன. அந்த உன்னதங்களை, குறிக்கோளை அடைய ஏற்படும் தடைகளை, பிரச்சினைகளைக் களைந்து தொடும் போது அடுத்தக் குறிக்கோளோடு அடி எடுத்து வைக்கிறது வாழ்க்கை.
இதில் மனிதன் ஆறறிவு படைத்த உயர்ந்த படைப்பாளியாக இருப்பதால் தான் சிகரங்களைத் தொடுவதில்… வானம் தொட்டு அண்ட வெளியில் அண்டை கிரகங்களையும் தேடி அலைந்து குறிக்கோளோடு முன்னேறுகிறான். இதையே தான் கவிப்பேரரசு அவர்கள்,
“சிகரங்களைத்தேடு
சிகரங்களை அடைந்தால்
வானத்தில் ஏறு”
என்று அழகாக தன் கவிதையில் குறிப்பிடுகின்றார்.
ஏனோ வந்தோம் ..வாழ்ந்தோம்… போனோம்….. என்று மற்ற உயிர்களைப் போல வாழ்ந்திடாமல் நான் இந்த மண்ணிற்கு வந்ததால்’நான் என்ன சாதித்து விட்டுப் போனேன்” என்ற உயர்ந்த எண்ணங்களை முன் வைத்து வாழ்ந்தவர்களை தான் இங்கு வரலாற்று நாயகர்களாகவும், சரித்திரத்தில் தங்கள் பெயர்களை இடம் பெறச் செய்திட்டவர்களாகவும் சாதனைகளை புரிந்து விட்டுச் சென்றார்கள்.
‘’ஓர் எறும்பு கூட நாளைய உணவிற்கு சேமிக்கிறது. நீ நாளைய உணவிற்கு என்ன சேகரித்து வைத்து விட்டுப் போகிறாய்?” என்று ஒர் ஆங்கில கவிஞர் (வில்லியம்) கேட்கிறார். ‘’வாழப்பிறந்தோர் எல்லோருக்கும் உயரிய எண்ணங்கள் ஆயிரம் இருக்கும். அதை செயலுக்கு கொண்டு வரும் போது தான் அதற்கு வரி வடிவம் கிடைக்க ஆரம்பிக்கிறது.
‘’நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்களோ அதை முன்நிறுத்துங்கள். அவைகளை நிறைவேற்ற விழையும் போது என்னென்ன தடைகள் வரலாம் என்று கவனித்துப் பாருங்கள். அந்தத் தடைகளை எவ்வாறு நீக்க முடியும், அந்தப் பிரச்சினையை எடுத்து எறிந்து விட்டு எப்படி என் குறிக்கோளை நிறைவேற்ற முடியும் என்று கணக்கில் கொள்ளுங்கள்.
அடுத்து ஆகாயத்தில் பறக்க விரும்பினால் கூட வேகமாக செயல் படாதீர்கள். ஆரம்பத்தில் படிக்கட்டில் ஏறுங்கள். அடுத்து குன்றுகளின் உச்சிகளை சந்தியுங்கள். பின், சிகரத்தைத் தேடுங்கள். அதையும் தாண்டி வானத்திற்குப் போங்கள். உங்கள் நோக்கம் நிறைவேறுகிறது” என்றார் ஆங்கில தத்துவ மேதை ஒருவர்.
‘’அதாவது அஸ்திவாரமே இல்லாமல் மாடி வீடு கட்டுவது சாத்தியமாகாதது போல உங்கள் எண்ணங்களுக்கும் குறிக்கோள்களுக்கும் முதலில் அடிப்படையை செப்பனிடுங்கள். அடிப்படையை முதலில் கடினமாக்கிக் கொண்டு படிப்படியாக உங்கள் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுங்கள். நீங்கள் எளிதில் வெற்றி கொள்ளலாம்” என்கிறார் மனோதத்துவ மேதை ஸ்பெராய்டு பீல்டு.
இவ்வாறு நாம் செய்ய வேண்டிய, அடைய வேண்டிய, சாதிக்க வேண்டிய குறிக்கோள்களை எவ்வாறு அறுதியிட்டு கொள்வது என்பது பற்றி கூட மேலை நாட்டு அறிஞர்கள் பலர் பல விதமாகக் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் எதற்கு நமக்கு குறிக்கோள். எதைச் செய்துகொள்ளப் போகிறது? நம்மால் இதைச் செய்யமுடியாது… என்று கிணற்றுத் தவளையாகிப் போகிற நம்மில் பலரைத் தான் சந்திக்கமுடிகிறது.
“எத்தனை மன்னர்கள் தங்கள் ராஜ்ஜியங்களை விரிவடையச் செய்வதற்காக எத்தனை விதமான போர்கள் செய்தார்கள்? எத்தனை மனித உயிர்கள் இழக்கப்பட்டன? இவைகளெல்லாம் தேவைதானா?” என ஒருவர் ”ரீடர்ஸ் டைஜஸ்டிலே ”கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு “உலகில் குறிக்கோளில்லாமல் வாழும் எந்த மனிதனும் வாழும் காலத்திற்கு பிறகு உலகில் உயிர்வாழ்வதில்லை. பெரிய மன்னர்கள் பெரும் படைகளோடு தங்கள் சாம்ராஜ்யங்களோடு புதிய விரிவடைவுகளுக்கு முயற்சித்ததால் தான் ‘தி கிரேட் அலெக்ஸாண்டர்’ என்றும் நெப்போலியன் மாமன்னன் என்றும் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” என்று பதில் கொடுத்தார் பத்திரிகையின் ஆசிரியர்.
எனவே, வாழும் காலத்திலேயே நாம் குறிக்கோள்களோடு வாழ்ந்த அந்த சிகரங்களை அடைந்து விட்டுச் செல்லும் போது தான் இறந்த காலத்தை வென்றவர்களாக வாழமுடியும். அதே சமயத்தில் குறிக்கோள் எப்படி இருக்க வேண்டும் என்பது கூட “ வானத்தை தொட முயற்சி செய் அடி வானமாவது வசப்படும்’’. என்ற பொன்மொழிக்கேற்ப உயர்ந்தவர்களை குறிக்கோளாக கொள்ள வேண்டும்.
இதைத் தான் “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்று குறிப்பிட்டுள்ளனர். இதைத் தான் மன இயல் ஆராச்சியாளர் ஒருவர்பெரியதாக சிந்தித்துக் கொள். முடிந்த வரை செய்து முடிக்கலாம் என்று குறிப்பிடுகின்றார். “செயல் வடிவம் முக்கியம் என்பதை தினமும் செபமாய் மனத்திற்குள் எண்ணிக் கொண்டு அதற்கு செயல் வடிவம் கொடுத்திடின் நம் சிந்தனைகள் ஈடேறும்”. என்கிறார் பிராய்ட்.
வாழ்க்கையில் குறிக்கோள்களோடு உயரிய சிந்தனைகளோடு வாழ்க்கையை நடத்தி செல்வோமாகில் வாழ்க்கை வசப்படுவது மட்டுமின்றி வாழ்ந்து முடிந்த பிறகும் சரித்திரத்தில் நாம் கண்டிப்பாக சரித்திர நாயகர்களாக திகழ முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings