2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பழனி அய்யா வடசேரி கிராமத்தில் மிகுந்த, மரியாதையும், செல்வாக்கும் நிறைந்தவர்.
பழனி அய்யாவின் சொத்து மதிப்பு அந்த கிராமத்தின் பாதி அளவை தாண்டும். எனவே கிராம மக்கள் அனைவரும் அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்துவர்.
வடசேரி கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவிலை கட்டியவர் பழனி அய்யாவின் தந்தை. அந்த காமாட்சி அம்மன் கோவிலை புதுப்பிப்பது, சுற்றுச்சுவர் கட்டுவது போன்ற பணிகளை பழனி அய்யா செய்து வருகிறார்.
அன்னதானம் மற்றும் நீர் பந்தல் அமைத்தல் போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
காமாட்சி அம்மனுக்கு இன்னும் இரண்டு தினங்களில் திருவிழா நடைபெற உள்ள நிலையில் மகள் செல்வியும், பேத்தி மலர்விழியும் பட்டணத்தில் இருந்து வந்துள்ளனர்.
பேத்தி மலர்விழி மிகவும் சுட்டித்தனமான பெண். எட்டு வயது நிரம்பியவள். நான்காம் வகுப்பு படிக்கிறாள். கேள்வி கேட்பதில் மிகவும் சிறந்தவள்.
பட்டணத்தில் இருந்து வந்த களைப்பு மறைவதற்குள் தன் தாத்தாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு நானும் கோவிலுக்கு வருவேன் என்கிறாள் மலர்விழி.
செல்வி நான் கோவிலுக்கு மலர்விழியை அழைத்து செல்கிறேன் என்று கூறிவிட்டு, மலர்விழி பேத்தியை தன்னோடு அழைத்து செல்கிறார் வீதியில்.
வீதியில் செல்லும் வழி எல்லாம் பழனி ஐயாவிற்கு மிகுந்த மரியாதை. அனைவரும் எழுந்து நின்று வணங்குகின்றனர். இதை பார்த்த மலர்விழி உங்களுக்கு ஏன் எழுந்து நிற்கின்றனர்? என்கிறான் மலர்விழி.
பழனி அய்யா சிரித்துக் கொண்டே எல்லாம் ஒரு மரியாதை தான் என்று கூறிக் கொண்டே தன் மீசையை முறுக்கி விடுகிறார்.
இப்படி இருவரும் பேசிக்கொண்டு கோவிலுக்கு வந்து விடுகின்றனர். அங்கு சுற்றுச்சுவருக்கு வண்ணம் தீட்டு பணி நடந்து கொண்டிருக்கிறது.
சுற்றுச்சுவர்க்கு வண்ணம் தீட்டுபவர் பழனி அய்யாவிடம் வந்து , ஐயா! அந்தச் சுவற்றில் உபயம் செய்தவர்கள் அனைவரின் பெயரையும் வண்ணம் தீட்டி விட்டேன் பாருங்கள் ஐயா என்கிறான்.
உபயம் தீட்டப்பட்ட சுவற்றில் கழனி ஐயாவின் பெயர் மிகப்பெரியதாகவும் மற்றவர்களின் பெயர் மிகச்சிறியதாகவும் இடம் பெற்றுள்ளது.
அதிகம் தொகை கொடுத்தவர் பழனி அய்யா மட்டுமே 10 லட்சம் ரூபாய்.
மீண்டும் தன் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு ஒரு சிரிப்பு சிரித்தவாறு அந்த உபயம் எழுதிய சுவரை உற்று நோக்குகிறார் பழனி ஐயா.
மலர்விழியும் அந்த சுவரை பார்த்துவிட்டு தாத்தா! !தாத்தா ! உபயம் என்றால் என்ன? தாத்தா என்று கேட்கிறாள்
பழனி அய்யா சிரித்தவாறு உபயம் என்றால் கடவுளுக்கு நாம் செய்யக்கூடிய பணம் அல்லது பொருள் என்கிறார்.
அதை ஏன் சுவற்றில் எழுதி வைக்க வேண்டும்? என்கிறாள் மலர்விழி.
பழனி ஐயா கூறுகிறார் அப்போது தானே எல்லோருக்கும் தெரியும்.
கடவுள் கேட்டதா? பணம் அல்லது பொருள் நீங்களே கொடுத்துவிட்டு அதை நீங்களே எழுதி வைப்பது தற்பெருமை தானே?
எங்க ஸ்கூல் மிஸ் சொல்லி இருக்காங்க கடவுள் தான் எல்லோரையும் விட சிறந்தவர் அவர்தான் நமக்கு கொடுப்பவர்.
அது மட்டும் இல்ல, ஒருத்தவங்களுக்கு செஞ்சதை சொல்லிக் காட்டக்கூடாது என்று.
நீங்க கடவுளுக்கு கொடுத்ததா சொல்றீங்கல்ல அதை கொடுத்தது யாரு? அந்தக் கடவுள் தானே?
கடவுள் நமக்கு கொடுத்ததை நம்மளுடைய இதய சுவர்ல எழுதி வச்சுக்கணும்.
நாம கடவுளுக்கு கொடுத்ததா சொல்லி இந்த உபயம் சுவரில் எழுதுவது அவ்வளவு நல்லதா படலையே என்று சொல்லிவிட்டு மலர்விழி சிரித்த பொழுது, பழனி ஐயாவிற்கு தன் கன்னங்களில் காமாட்சியம்மன் அறைந்தது போன்று இருந்தது.
பழனி ஐயா உடனே சுற்றுச்சுவருக்கு வண்ணம் பூசுபவரிடம் சென்று வெள்ளை நிற வண்ணத்தை எடுத்து வந்து உபயம் என்று எழுதி இருந்த சுவர் முழுவதும் வெள்ளையால் தீட்டினார்.
வண்ணம் பூசுபவருக்கு ஒன்றும் புரியாமல் அய்யா என்ன இப்படி செஞ்சிட்டிங்க நான் எழுதினதுல ஏதாவது பிழையா? என்று கேட்டார்.
பழனி ஐயா இல்லை இல்லை நீ எழுதியது பிழை இல்லை என் மனதில் தான் பிழை இருந்தது என்றார்.
இந்த சுவர் எப்படி வெள்ளை ஆனதோ அதே போல் என் மனதும் வெள்ளை ஆனது எனது அருமை பேத்தியால் என்றார்.
எல்லோரும் என்னை மதிக்க வேண்டும் என்பதற்காக இந்த உபயம் சுவர் இதுவரை பராமரிக்கப்பட்டு வந்தது இனி இதில் யாரும் உபயம் என எழுதக்கூடாது.
காமாட்சி அம்மன் தந்ததே நம் மனதில் எழுதுவோம் என நாட்டாமையாக அந்த ஊருக்கு அறிவித்தார்.
இந்த உபயம் இல்லாத திருவிழாவின் மூலம் அனைவரும் சமம் என்ற சமத்துவம் நிலவியது காமாட்சியும் மகிழ்ச்சி அடைந்தாள். திருவிழா முடிந்த கையோடு காமாட்சியம்மன் ஏற்றத்தாழ்வு இல்லாத மழையை பொழிந்து முப்போகமும் விளையும் வண்ணம் செய்தாள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings