in

தனிமை இனிமையா❤ (சிறுகதை) கரோலின் மேரி – January 2021 Contest Entry

தனிமை இனிமையா❤ (சிறுகதை)

“ஆபிஸ் கிளம்பறேன் ஶ்ரீ” என கணவன் விடைபெற 

“சரி யாதவ்… போயிட்டு வாங்க” என்று மலர்ந்த முகத்துடன் விடைகொடுத்தாள் நளினஶ்ரீ.

பின், சமையல் அறையை சுத்தம் செய்து விட்டு, தனக்கு பிடித்த படத்தை டிவியில் பார்த்தவாறு காலை உணவை உண்ணத் தொடங்கினாள்

கிருஷ்ணன் – ராதா தம்பதியின் ஒரே செல்ல மகள் நளினஶ்ரீ, பொறியியல் பட்டதாரி

கல்லூரிப் படிப்பை முடித்தவுடனே, நல்ல வரன் அமைய, திருமணம் செய்து விட்டனர்.

ரவீந்திரன்- புவனா தம்பதியின் ஒரே மகன் தான் யாதவன். அவனும் பொறியியல் பட்டதாரி தான். தனியார் நிறுவனத்தில் நல்ல வருமானத்தில் வேலை.

திருமணம் முடிந்து நாட்கள் சந்தோஷமாக நகர்ந்தது.

ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து வந்த யாதவன், “என்னை பெங்களூருக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க, அடுத்த வாரம் கெளம்பணும் ஸ்ரீ” எனவும் 

“சரி யாதவ்” என்றவள், அப்போதிருந்தே தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைக்க தொடங்கினாள் 

இதோ, விளையாட்டு போல் பெங்களூருக்கு வந்து பத்து நாட்கள் ஆகிவிட்டது.

கணவன் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டில் இருக்கும் நேரத்தில் தனிமை துணையாக வந்து அமர்ந்தது நளினஸ்ரீ’க்கு

ஒரு நாள் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருக்கும் போது, “என்ன ஶ்ரீ ஒரு மாதிரி இருக்க” எனக்கேட்டான் யாதவ் 

“இல்லையே… நல்லா தான இருக்கேன்” என்றாள் அவள் 

“இல்ல நீ பொய் சொல்ற, உன் முகத்த பாத்தாலே தெரியுது ஏதோ இருக்குனு, என்ன சொல்லு” என்றான்  விடாப்பிடியாய் 

“அது… வீட்ல தனியா இருக்க ஒரு மாதிரி இருக்கு… நான் வேலைக்கு போகவா?” என தயக்கத்துடன் கேட்க 

 “ப்ச்… வேலைக்கெல்லாம் வேண்டாம்” என கண்டிப்பான குரலில் கூறினான் 

பின் அவள் முகம் வாடியதை உணர்ந்து, “இங்க பாரு ஸ்ரீ, தனியா இருக்கிற மாதிரி நீ எதுக்கு பீல் பண்ற? பக்கத்துல இருக்கிறவங்ககிட்ட பேசு, ஊர்ல அம்மா, அப்பாக்கு கால் பண்ணி பேசு, ஜாலியா வெளிய போயிட்டு வா. ஆனா வேலைக்கு மட்டும் இப்ப வேண்டாம். ரெண்டு பேரும் வேலைக்கு போனா ரெம்ப ஸ்ட்ரெஸ் ஆய்டும் வீட்ல” என்றவன், அவள் கரத்தை பிடித்து அழுத்த, அதில் ‘என்னை புரிந்து கொள்ளேன்’ என்ற வேண்டுதல்  இருந்தது

கணவனுக்கு தான் வேலைக்கு போவது பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து அமைதியானாள் அவள் 

பெற்றோரிடம் உரையாடுவதும், பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசுவதும், எல்லாம் இரண்டு மணி நேரம் தான். அதன்பின் இருக்கும் நேரத்தில் எவ்வளவு நேரம் தான் பார்த்த படத்தையே பார்ப்பது, கேட்ட பாடலையே கேட்பது, எவ்வளவு நேரம் தான் வெறும் சுவற்றையே வெறிப்பது…

அவனுக்கு எங்கே புரியப் போகிறது என வருந்தினாள், ஆனால் எதுவும் கூறவில்லை 

தன்னுடைய தனிமையைப் போக்கிக் கொள்ள என்ன வழி என ஆராய்ந்தாள். சூடான காபியை பக்கத்தில் வைத்தவாறு, கையில் ஒரு நோட்டு பேனாவுடன் அமர்ந்தாள்.

தனிமையை உணரும் தருணங்களில் எல்லாம் என்ன செய்யலாம் என்பதை எழுதினாள்.

ஏதாவது ஒரு மொழியை கற்றுக் கொள்வது, புது விதமான உணவுகளை சமைப்பது, கை வேலை செய்வது, ஓவியம் வரைவது, செடி வளர்ப்பது என்று அடுத்து என்னென்ன செய்யலாம் என்பதை திட்டமிட்டாள்.

டைரி எழுதலாம் என்று கடைசியாக நினைத்தவள், டைரியில் என்னென்ன எழுதலாம்… அன்றைக்கு நடப்பதை  எல்லாம்  ஏதாவது வித்தியாசமாக எழுதிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள் 

தினமும் நடக்கும் நிகழ்வுகளை எல்லாம், கவிதை போல் எழுதினாள். 

இப்படியே மாதங்கள் உருண்டோடியது 

#ad

Click here to avail Pongal Special Deals in Amazon

ஒருமுறை யாதவன் ஏதோ ஒரு பைலை தேடும் போது, அவள் எழுதிய  டைரி  அவன் கண்களில் பட்டது. ஆர்வம் உந்த, அதை திறந்து படிக்க ஆரம்பித்தான்.

‘சில நேரங்களில் வரமாகவும்,

சில நேரங்களில் சாபமாகவும் 

மாறும் மந்திரம் 

ஏனோ என் தனிமையே’

 ‘கடிகாரமுட்களின் ஒலியைக்கேட்பதும்

வண்ணச்சுவற்றை உற்றுநோக்குவதும்

யாருமில்லாவீட்டில் உலாவருவதும்

அடுக்கியபொருட்களை மீண்டும்அடுக்குவதும் 

மனம்சரியில்லாதபோது மடிசாயஏங்குவதும்

சிரித்துப்பேச யாருமில்லாதனிமையில் 

அழுகையில் கரையும்போதும் 

கண்ணீர்துடைக்க எந்தகரமும்வராதபோதும்

கோபத்தைபொம்மையிடம்  வெளிப்படுத்தும்போதும்

என் தனிமை கசக்கிறதே’

இதே போன்ற தனிமையின் குமுறல்கள் டைரி எங்கும் இருந்தது 

வாசித்து முடித்தவனின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

“யாதவ்” என்ற மனைவியின் குரலில் திரும்பியவன், அவளை அணைத்துக் கொண்டு, “சாரி ஶ்ரீ சாரி” என்று பல முறை மன்னிப்பை வேண்டினான்

“என்னாச்சு? எதுக்கு இப்ப சாரி சொல்றீங்க?” என புரியாமல் அவன் முகத்தை பார்த்தவளின் கண்களில் டைரி பட்டது 

 “நீங்க இந்த டைரிய..” என்று இழுக்க

“எல்லாத்தையும் படிச்சுட்டேன் ஸ்ரீ. நீ வீட்ல சந்தோஷமா இருப்பேனு தான் நெனச்சுட்டு இருக்கேன். ஆனா இவ்ளோ லோன்லியா பீல் பண்ணுவேனு எதிர்பாக்கல. இதுக்கு தான் வேலைக்கு போகணும்னு கேட்டியா? நான் ஒரு முட்டாள், அதை புரிஞ்சுக்காம பாட்டு கேளு போன் பேசுனு ஈஸியா சொல்லிட்டேன்… சாரி ஶ்ரீ” என்று மீண்டும் மன்னிப்பை வேண்டினான் 

“பரவால்லப்பா விடுங்க” என்றவள் சமாதானம் அவன் காதில் ஏறவில்லை 

“நீ எழுதினத படிக்கறப்ப எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா?” என மருகினான் 

“உங்களை கஷ்டப்படுத்த நான் இதை எழுதல”  எங்கே தன்னை தவறாகப் புரிந்து கொள்வானோ  என்ற அச்சம் அவள் குரலில் பிரதிபலித்தது 

“இல்ல… நான் அப்படி சொல்ல வரல, உன்னோட விருப்பத்த கேக்காம நான் பாட்டுக்கு ச்சே… சரி  விடு போனது போகட்டும் இனி உன் இஷ்டம் போல நீ வேலைக்கு போ” என்றவன் கூற 

 “நிஜமாவா” என்றாள் அவள் ஆச்சர்யமாய் 

“நிஜமா தான்” எனவும் 

“தேங்க்ஸ் யாதவ்” என்றாள் மகிழ்வுடன் 

“நமக்குள்ள தேங்க்ஸ்  எதுக்கு, இனிமே எதுவானாலும் தயங்காம மனசுவிட்டு என்கிட்ட சொல்லு ஸ்ரீ, கண்டிப்பா நிறைவேற்ற முயற்சி செய்யறேன்” எனவும், அவள் முகம் மகிழ்ச்சியில் மின்னியது.

“அப்புறம் ஒரு சின்ன ரிக்வெஸ்ட்” என்றவன் விண்ணப்பம் வைக்க

” என்ன?”

“நீ டைரி எழுது அது பிரச்சனையில்ல, ஆனா சோகமா மட்டும்  எழுதாத” என்றான் கேலியாய்

“யாதவ்” என அவள் முறைக்க, அவன் சிரிக்க, அவளும் சிரிப்பில் இணைந்து கொண்டாள்

(முற்றும்)

#ad

சஹானா கோவிந்த் நாவல்கள் 👇

“சஹானா” மாத இதழ்கள் 👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. சிறுகதை அருமை. தன்னைப்புரிந்தவர்கள் தன்கூட இருந்தால் வாழ்க்கை இனிக்கதான் செய்யும்

பட்டு நூல் வளையல் (Silk Thread Bangles) – By S. நித்யலக்ஷ்மி – January 2021 Contest Entry

எழுத்துக்களும் பிரிவினைகளும் (கவிதை) – விக்னேஸ்வரன் – January 2021 Contest Entry