கவிதைகள்

எழுத்துக்களும் பிரிவினைகளும் (கவிதை) – விக்னேஸ்வரன் – January 2021 Contest Entry

அலை கடலின் நடுவே  

அற்புத நீச்சல் இட்டு கரையேறி  

மூச்சுத் திணற முத்தம் இட்டு  

தேன் மணக்கும் எழுத்துக்களுடன் 

நம் ஏணிப்படியாய் 

ஏற்றத்தாழ்வின்றி நாம் வாழ  

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே  

வாளோடு முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் ” 

தங்கத் தாயாய் வந்து  

தாரக மொழிகளுக்கெல்லாம்  

உயிர் தந்தது தமிழ்

உதட்டில் உறக்கம் தந்து 

உழைக்க வைத்த மொழி தமிழ் 

அன்று ! 

முக்கனியின் சாறுதரு நல்சுவையாய் 

தித்திக்கும் எம்மொழிக்கும் – நீவர் 

எத்திக்கு சென்றே தேடினும் 

 நிகரொன்று கண்டிட கூடுமோ..? 

ஆனால் இன்று ! 

தமிழைக் கொன்று

தான் வென்று 

தரங்கெட்டவன் ஆகிறான் தமிழன்

குமரி பெற்ற எம் தமிழ் மொழி எழுத்துக்களைக் கொண்டு 

ண்ணற்றோரை  தாலாட்டிய எம் தாய்மொழி, 

இன்று! 

தத்தளிக்கிறது எழுத்துப் பிரிவினையால் 

அ-என்றால் அம்மா என்னும் அழகு சொல் 

 M-means mummy என சடல பெயர் பெற்றதே 

 அங்கு தொடங்கியது  

சங்க தமிழுக்கு சாராயம் ஊற்றிவிட்டானோ தமிழன் …? 

நாகரிகம் தந்த நாயக மொழி

நடைபிணம் ஆனது இன்று

ஆங்கிலம் என்னும் அந்நிய எழுத்து

அன்போடு அரவணைத்த கைகளில் 

இன்று…

ஆங்கிலத்தை கையேந்தி  

எழுத்து பிரிவினைக்கு  

எண்ணற்ற வழிவகுக்கிறது  

நம் வாய் வழியில்

” தித்திக்கும் செங்கரும்பும்  

தெவிட்டாத நறுந்தேனும்  

எத்திக்கும் புகழ் மணக்கும் 

இன தமிழுக்கு இணையாகுமா.?” 

“கங்கை முதல் கடாரம் வரை 

 கட்டி அரசாண்ட தமிழ்

பொங்கல் திருநாளைப் 

போற்றி மகிழ்கின்ற தமிழ்” 

“மன்னவர்கள் காத்த தமிழ் 

மாற்றாரும் பயின்ற தமிழ் 

தென்னவர்கள் வளர்த்த எங்கள்  

தீந்தமிழ்போல் வேறுண்டோ..?” 

“பன்மொழிகள் படைத்த தமிழ்

பாவலர்கள் வளர்த்த தமிழ்

இம்மொழியாம் நம் தமிழுக்கு  

இணைமொழிகள் வேறுண்டோ..?” 

தடுக்கி விழுந்தால் மட்டும் அ… ஆ…! 

சிரிக்கும் போது மட்டும் இ… ஈ..! 

சூடு பட்டால் மட்டும் உ… ஊ..! 

 அதட்டும் போது மட்டும் எ… ஏ..! 

 ஐயத்தின் போது மட்டும் ஐ…! 

ஆச்சரியத்தின் போது மட்டும் ஒ…ஓ..! 

வக்கணையில் மட்டும் ஒள…! 

விக்கலின் போது மட்டும் ஃ ..! 

அர்த்தத்தால் அங்கீகரித்த நம் தமிழ் எழுத்துக்கள், 

இன்று… 

எழுத்துக்களால் பிரிந்துள்ளதே..! 

சிந்திப்போம் – நம் 

எழுத்துக்களால் ஒன்றிணைவோம் ..! 

எண்ணங்களாலும் ஒன்றிணைவோம்..! 

“தமிழ் அவமானம் அல்ல  

பிற மொழிகளுக்கு எல்லாம் அடையாளம். ” 

“தமிழன் என்று சொல்லடா 

 நீ 

 தலை நிமிர்ந்து நில்லடா” 

🙏…..நன்றி…..🙏 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: