சஹானா
கவிதைகள்

தாய் தமிழ் மொழி… (கவிதை) – ✍ கலைவாணி சுரேஷ்பாபு, துபாய்

Click the Picture below, to goto Youtube link for Sahanamag Anniversary Event on Aug 2, 2021 @ 5pm

 
கன்னித் தமிழாம்  

கற்கண்டு சுவையாம்   

தொன்மை நிறைந்த 

வண்டமிழ் மொழியாம்

 
பொன்னின் வடிவாய் 

தீந்தமிழ் அழகாய் 

காரிருள் நீக்கிய     

காவியம் ஆனதே    


செந்தமிழ் என்றிட 

செம்மொழிச்  சுரங்கமாய் 

செல்கின்ற இடமெல்லாம் 

எந்தமிழ் சிறக்குமே     


வையகம் போற்றிய 

உலகப் பொதுமறையை 

உலகம் பயின்றிட

வாழ்வும்  நெறிப்படுமே   


வல்லினம் தொட்டு 

மெல்லினம் தழுவி 

இடையினம் நழுவிய    

சுந்தரத் தமிழது   


ஏற்றம் இறக்கமாய் 

ஒலிதரும் வகையில் 

எதுகையும் மோனையும் 

எழுத்துரு கொண்டு 


தமிழ்தாயின் கழுத்தில் 

வார்த்தைச் சரங்களால் 

மாலைகள் சூட்டி

மகுடம் தரிக்கிறது 


முத்தான தமிழில்  

இயலும் இசையும் 

அழகுறு அணிகலனாய்  

ஐம்பெரும் காப்பியத்தில்    


சங்கத்தமிழ் வளர்த்து 

சரித்திரம் படைத்திட்ட 

உலகப் பொதுமொழி 

எங்கள் தமிழ்மொழி 


செந்தமிழ் நாட்டில் 

தமிழன்னை மடியில் 

இளைப்பாறும் வரம்பெற 

என்னதவம் செய்தேனோ ?!    

Click the Picture below, to goto Youtube link for Sahanamag Anniversary Event on Aug 2, 2021 @ 5pm


#ad

      

        

#ad 

              

          

     


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: