in

குறுக்கெழுத்துப் புதிர் – ஆகஸ்ட் 2020

குறுக்கெழுத்துப் புதிர் (Aug 2020)

வணக்கம், 

இந்த குறுக்கெழுத்து புதிரை விடுவிக்க முயற்சித்துப் பாருங்கள். மிகவும் கடினம் ஒன்றும் இல்லை. நாம் கேட்ட, பார்த்த, படித்த, கடந்து வந்த விஷயங்களை கொண்டே இது உருவாக்கப்பட்டுள்ளது. பதில்களை கமெண்ட்டில் பதியுங்கள். விடைகள் பின்னர் பகிரப்படும்

வலமிருந்து இடம் 

  1. திருப்பூர் தியாகியின் அடைமொழியில் முதல் இரண்டெழுத்து
  2. பிரபல க்ரைம் நாவல் எழுத்தாளரின் அடைமொழி, ஒரு ஊரின் பெயர்
  3. நல்லதொரு ______பல்கலைக் கழகம்
  4. மும்பையின் முன்னாள் நாமகரணம்
  5. பத்தமடை என்றாலே இது தான் நினைவுக்கு வரும்
  6. உத்திரகாண்டை பிறப்பிடமாய் கொண்ட ஒரு நதியின்பெயர்
  7. இது இல்லாமல் தாளிப்பு சாத்தியமில்லை
  8. மகாமக ஊர்
  9. ஒரே மாதிரி, வேறு சொல்
  10. அனுமனின் வேறு பெயர்
  11. சமைக்க தேவையான பொருட்கள்
  12. ஸ்ருதியோடு இதுவும் சேர்ந்தால், கேட்பதற்கு சுகமே
  13. மந்திரகுமாரி படத்திற்கு பாடல் எழுதிய பிரபலமான புலவரின் பெயர்
  14. _____யும் தாயும் மகிழ்ந்து குலாவி

 

இடமிருந்து வலம்

  1. மழைக் கடவுள்
  2. இராமாயணத்தில் கூனி, மகாபாரதத்தில் _______
  3. ஆம், வேறு சொல்
  4. காணாமல் போனதே
  5. பழங்கால இசைக் கருவி
  6. கிருமி நாசினி
  7. கஞ்சனை இப்படியும் கூறுவர்
  8. ஆண் வாரிசு
  9. வயலும் வயல் சார்ந்த இடமும்

மேலிருந்து கீழ்

  1. இதற்கு ஒன்றே மதியாம்
  2. சுழற்றி விட்டால் சுற்றும், காற்றாடி அல்ல
  3. கேரளாவின் பிரபலகடற்கரை
  4. ராணுவம், வேறு சொல் (கலைந்துள்ளது)
  5. ஒரு வகை வைரஸ் காய்ச்சல்
  6. கல்லணையைக் கட்டியவர்
  7. ஜெயம் ரவி நடித்த ஒரு படம், இவரில்லாத சர்க்கஸ் இல்லை
  8. பிரமாண்டமான வீடு
  9. வெயில் காலத்தை ஆங்கிலத்தில் இப்படிச் சொல்வர்

கீழிருந்து மேல்

  1. நிகழ்வு, வேறு சொல் (கடைசி எழுத்து இல்லை)
  2. ஆண்டாளின் வேறு பெயர்
  3. கபடியை இப்படியும் சொல்வர்
  4. எமனின் வாகனம்
  5. திருவிளையாடல் புலவர்
  6. இந்திய விண்கலத்தின் பெயர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

Make Your Own Scrap Book / Note Book (Nivya Krishnan)

இனியொரு விதி செய்வோம்… (சிறப்புச் சிறுகதை)